அறந்தாங்கி: ஹோட்டலில் சாப்பிட்டு விட்டு பணம் தர மறுத்தவரை தோசை கரண்டியால் "பின்னி எடுத்த" சம்பவம் அறந்தாங்கியில் கலகலப்பையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. அறந்தாங்கி வீரமாகாளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் முத்து . இவர் அறந்தாங்கி பஸ் நிலையம் எதிர்புறம் ஹோட்டல் நடத்தி வருகிறார்.
சாப்பிட வந்தவர்: நேற்று இரவு இவரது ஹோட்டலுக்கு அறந்தாங்கி கல்லுசந்து தெருவை சேர்ந்த பட்டா பாலு என்பவர் சாப்பிட வந்தார்.
பணம் கொடுக்காத பாலு: அவர் சாப்பிட்டு முடித்ததும் பணம் கொடுக்காமல் அங்கிருந்து புறப்பட்டார். அப்போது ஹோட்டலில் இருந்த முத்து மகன் விஜய் பணம் கொடுத்து விட்டு செல்லும்படி பட்டா பாலுவிடம் கூறினார். இதில் ஆத்திரம் அடைந்த பட்டா பாலு கம்பை எடுத்து விஜய்யை தாக்கி தகராறு செய்தார்.
தோசைக்கரண்டி அடி: அப்போது அங்கு வந்த முத்து சாப்பிட்டு விட்டு பணம் கொடுக்காததுடன் தன் மகனையும் பட்டா பாலு தாக்குவதை கண்டு ஆத்திரம் அடைந்தார். ஹோட்டலில் இருந்த தோசை கரண்டியை எடுத்து பட்டா பாலுவை விளாசி எடுத்தார்.
ஓட்டம் பிடித்த பாலு: இதில் முகத்தில் பலத்த காயம் அடைந்த பட்டா பாலு அலறி அடித்துக் கொண்டு அங்கிருந்து ஓட்டம் பிடித்தார்.
போலீஸ் விசாரணை: இச்சம்பவம் குறித்து அறந்தாங்கி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காயம் அடைந்த பட்டா பாலு அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
Source : http://tamil.oneindia.in/news/tamilnadu/man-beat-batter-spoon-202680.html
Source : http://tamil.oneindia.in/news/tamilnadu/man-beat-batter-spoon-202680.html
0 comments