காயல்பட்டினத்தில் மளிகைக் கடையில் பூட்டை உடைத்து பணம் மற்றும் பொருள்களை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடிவருகின்றனர்
குரும்பூர் அருகில் சேதுக்குவாய்த்தான் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் ரஹமத்துப்பா. இவர் காயல்பட்டினம் ரத்னாபுரிக்கும் } காயல்பட்டினம் பேரூந்து நிலையத்திற்குமிடையில் பிரதான சாலையில் மளிகைக் கடை நடத்தி வருகிறார். திங்கள்கிழமை இரவு வழக்கம் போல் கடையை பூட்டிவிட்டுச் சென்றவர், செவ்வாய்க்கிழமை காலை கடையை திறக்க வந்தார். அப்போது கடையின் முன்புறம் உள்ள பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து உள்ளே சென்று பார்த்த போது மேஜையில் இருந்த ரூ. 5 ஆயிரம் பணம் மற்றும் மளிகை பொருள்கள் திருட்டு போனது தெரியவந்தது. இதுகுறித்து ரஹமத்துப்பா ஆறுமுகனேரி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். காவல் உதவி ஆய்வாளர் சபீதா வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறார்.
courtesy : Dinamani.com
0 comments