ஆறுமுகனேரி மற்றும் காயல்பட்டினம் நகரின் அனைத்து வாக்குச் சாவடிகளிலும், விடுபட்ட வாக்காளர் சேர்ப்பு சிறப்பு முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
முகாம் நடைபெறும் இடங்களில், பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கும் வாக்காளர் பட்டியலில் தமது பெயர்கள் உள்ளனவா என அந்தந்த பகுதிகளின் வாக்காளர்கள் வந்து பார்த்துச் சென்றனர். தகுதியிருந்தும், பெயர் விடுபட்ட வாக்காளர்கள், படிவம் 6-ஐ பூர்த்தி செய்து, வாக்காளர் பட்டியலில் பெயர் இடம்பெற விண்ணப்பித்தனர்.
வாக்காளர் பட்டியலில் ஏற்கெனவே பெயர் சேர்க்கப்பட்டிருந்து, அடையாள அட்டை இல்லாதவர்கள் நகல் அடையாள அட்டையைப் பெற்றிட, ரூ. 25 செலுத்தி விண்ணப்பித்துச் சென்றனர்.
ஆறுமுகனேரி பேரூராட்சிப் பகுதியில், 17-ஆவது வார்டுக்கு உரிய முகாம் காணியாளர் தெருவில் நடைபெற்றது. முகாம் பணியாளர்கள் குறிப்பிட்ட நேரத்துக்கு முன்னரே சென்று விட்டதால், பெயர் சேர்க்கச் சென்ற வாக்காளர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.
Courtesy: Dinamani.com
0 comments