ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» News , ஆறுமுகநேரி »


ஆறுமுகனேரியில் மக்கள் எதிர்ப்பால் திறக்கப்படாத டாஸ்மாக் மதுக் கடை-சபாஷ் பொதுமக்களே



ஆறுமுகனேரியில் டாஸ்மாக் மதுக்கடையை திறக்க அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து முற்றுகையில் ஈடுபட்டதால், கடை மூடப்பட்டது.
 ஆறுமுகனேரி ராஜமன்னியபுரம் விலக்கில் தெற்கு ஆத்தூரில் உள்ள டாஸ்மாக் மதுபானக்கடையை திறக்க ஏற்பாடுகள் நடைபெற்றதாம். இதற்காக கடையை தேர்வு செய்து அங்கு மதுபானங்களை வியாழக்கிழமை கொண்டு சேர்த்தனர்.
 இதையறிந்த அப்பகுதி மக்கள் வெள்ளிக்கிழமை திறக்கபட இருந்த டாஸ்மாக் கடை முன்பு முற்றுகையில் ஈடுபட்டனர்.
 சமத்துவ மக்கள் கட்சி ஒன்றிய இளைஞரணிச் செயலர் எஸ்.அகஸ்டின், 6-வது வார்டு கிளைச் செயலர் செல்வராஜ், காமராஜர் இளைஞர் மன்றத் தலைவர் தங்கமணி, இம்மானுவேல், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் கணேசன், வின்சென்ட், யுவராணி, அரிகரன், விஜயன், ஜேசுதுரை, ஜெபராஜ், சந்தனம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 ஆறுமுகனேரி காவல்துறை ஆய்வாளர் டி. பார்த்தீபன், உதவி ஆய்வாளர் சண்முகவேல் மற்றும் கந்தசாமிபுரம் கிராம நிர்வாக அலுவலர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
 சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பேசி கடை திறக்கப்படாது என உறுதியளித்ததை அடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
  மருத்துவமனையை மேம்படுத்தக் கேட்டால் அருகிலுள்ள ஊரிலுள்ள பெரிய மருத்துவமனைக்குப் போங்கள் என்று கை காட்டும் தூத்துக்குடி மாவட்ட மருத்துவத்துறை போல மதுப்பிரியர்களை தூத்துக்குடிக்கோ;அல்லது திருநெல்வேலிக்கோ டாஸ்மாக்கிற்குப் போகச்சொல்லுங்களேன் 

0 comments

Leave a Reply