திறனாய்வுத் தேர்வில் வென்று, பூச்சிக்காடு இந்து உயர்நிலைப் பள்ளி மாணவ-மாணவிகள் 5 பேர் உதவித்தொகை பெற தகுதி பெற்றுள்ளனர்.
இப் பள்ளியைச் சேர்ந்த என்.அபிநயா, எஸ்.பவித்ரா, எம்.பேபி சாலினி, டி.பான்மதி மற்றும் எம்.பாலசுப்பிரமணியன் ஆகிய ஐவரும் திறனாய்வுத் தேர்வில் தேர்ச்சி பெற்று மாதம் ரூ.500 வீதம் நான்கு ஆண்டுகளுக்கு மத்திய அரசின் கல்வி உதவித்தொகை பெற தகுதி பெற்றுள்ளனர். இவர்களை பள்ளிச் செயலர் எஸ்.ராஜேந்திரசாமி, ஆலோசகர் இரா.ஜெய ஆதித்தன், தலைமை ஆசிரியர் ஜே.எஸ்.ஆபேத் நேகோ மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.
You Are Here: Home» News , ஆறுமுகநேரி » பூச்சிக்காடு மாணவிகள் சாதனை
0 comments