ஆறுமுகநேரி கா.ஆ.மேல்நிலைப் பள்ளியில் காமராஜர் பிறந்த நாளை கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டது.
விழாவிற்கு பள்ளி செயற்குழு உறுப்பினர் அமீன் தலைமை வகித்தார். செயற்குழு
உறுப்பினர் கணேசன் முன்னிலை வகித்தார். தலைமையாசிரியர் பாண்டியராஜன்
வரவேற்றார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ராஜாமணி, நகர் நல மன்ற தலைவர்
பூபால்ராஜன், அழகேசன் ஆகியோர் கலந்து கொண்டனர். மாணவ, மாணவிகளுக்கு
பேச்சுப்போட்டி நடந்தது. எஸ்எஸ்எல்சி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கினர்.
ஆசிரியர் கண்ணன், ஆசிரியை வெள்ளையம்மாள் ஆகியோர் பேசினர்.
0 comments