சாகுபுரம் கமலாவதி மேல்நிலைப் பள்ளியின் நிறுவனர் நினைவு
தினத்தை முன்னிட்டு சிவசைலம் ஒளவை ஆஸ்ரமம் காந்திகிராம் சாந்தி உயர்நிலைப்
பள்ளிக்கு நிதி உதவி வழங்கினர்.
சாகுபுரம் டி.சி.டபிள்யூ நி றுவனர் சாகு சிரியான்ஸ் பிரசா த் ஜெயின்
துணைவியார் கமலாவதி ஜெயின் 15வது ஆண் டு நினைவு தினத்தை முன்னிட்டு பள்ளி
வளாகத்தில் அஞ்சலி நிகழ்ச்சி நடந்தது.நிகழ்ச்சியில் டி.சி.டபிள்யூ நிறுவன
உதவித் தலைவர்கள் ஜெயக்குமார், சுபாஷ் டாண்டன், யாதவ், பொது மேலாளர்கள்
சந்திரசேகரன், பசுபதி, பள்ளி நிர்வாக அதிகாரி கணேஷ், முதல்வர்
பாலசுப்பிரமணியன், தலைமையாசிரியை சுரோமணி, ஜெயமுருகன்,ஆகியோர் கலந்து
கொண்டனர்.கமலாவதி ஜெயின் சிலைக்கு மாலை அணிவித்தனர்.இதனை முன்னிட்டு
சிவசைலம் ஒளவை ஆஸ்ரமம் காந்தி கிராம் சாந்தி உயர்நிலைப் பள்ளிக்குகமலாவதி
பள்ளியின் சார்பில் நிதி உதவி மற்றும் உணவு வழங்கினர்.மாணவி சாய்லெட்சுமி
நன்றி கூறினார்.
0 comments