தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்செந்தூர் மற்றும் ஸ்ரீவைகுண்டம் வட்டாரத்தில் பிரசார பயணம் மேற்கொண்டனர்.
ஸ்ரீவைகுண்டம் அணையை தூர்வார வேண்டும், அதன் கீழுள்ள கால்வாய்கள், 53 குளங்கள் தூர்வாரப்படவேண்டும், கடலில் வீணாக கலக்கும் நீரை தடுக்க முக்காணி அருகில் தடுப்பணை கட்ட வேண்டும், நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ. 2000 விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் சங்கத்தின் பிரசார பயண தொடக்க விழா ஏரல் காந்தி சிலை அருகில் நடைபெற்றது.வட்டாரச் செயலர் எஸ்.பேச்சிமுத்து தலைமையில், இக்குழுவினர் புதுமனை, ஆலடியூர், உமரிக்காடு முக்காணி, பழையகாயல், சம்படி, மாறமங்கலம், இடையர்காடு, செபத்தையாபுரம், சாயர்புரம், சுப்பிரமணியபுரம், நட்டாத்தி, பண்டாரவிளை, பண்ணைவிளை, பெருங்குளம், மங்களகுறிச்சி வழியாக மீண்டும் ஏரலை அடைந்தது.திருச்செந்தூரில், வட்டாரத் தலைவர் வி.நடேச ஆதித்தன் தலைமையில் குரும்பூரில் பிரசார பயணத்தை மாநில துணைத் தலைவர் பி.பெரும்படையார் தொடங்கி வைத்தார்.இப்பிரசார பயணம் அங்கமங்கலம், புறையூர், மேலகல்லாம்பாறை,குருகாட்டூர், சிவசுப்பிரமணியபுரம், தென்திருப்பேரை, மாவடி பணணை, குரங்கணி, மஞ்சுவிளை, ராஜபதி, சேதுக்குவாய்த்தான், சோழியக்குறிச்சி, சுகந்தலை, சொக்கப்பழக்கரை, ஆத்தூர், மேல ஆத்தூர், ஆறுமுகனேரி, மூலக்கரை, அம்மன்புரம், நல்லூர் வழியாக மீண்டும் குரும்பூர் வந்தடைந்தது.இப்பிரசார பயணத்தில் மாவட்டத் தலைவர் எஸ்.எம்.ராமையா, செயலர் எஸ்.நல்லையா, இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலர் ஏ.மோகன்ராஜ், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.ராஜேந்திரன், திருச்செந்தூர் வட்டார விவசாயிகள் சங்கத் செயலாளர் ராஜா, ராஜகோபால், ராஜலிங்கம், ஜெகன் மற்றும் திரளானோர் கலந்து கொண்டனர்.

0 comments