ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» ஆறுமுகநேரி » பட்டப்பகலில் பெண்ணின் கழுத்தில் இருந்து செயின் பறிப்பு


ஆறுமுகநேரியில் பட்டப்பகலில் பெண்ணின் கழுத்தில் கிடந்த
தாலிசெயினை பைக்கில் வந்த மர்ம ஆசாமிகள் பறித்துச்சென்ற சம்பவம் பெரும்
பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்துபோலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது:
காயல்பட்டணம் பாஸ் நகரைச் சேர்ந்தவர் முருகன். சாகுபுரம் தனியார்
தொழிற்சாலையில் கெமிஸ்ட் ஆக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சுனிதா
பாரதி(31). இவர் நேற்று மாலை பாஸ் நகரில் இருந்து எஸ்ஆர்எஸ் கார்டனில் உள்ள
தனது தந்தை சந்தனராஜ் வீட்டிற்கு காரில் வந்துள்ளார். எஸ்ஆர்எஸ் கார்டன்
முன்புறம் காரில் இருந்து சுனிதா பாரதி வீட்டிற்கு நடந்து சென்று
கொண்டிருந்தார். அப்போது அவருக்கு பின்னால் பைக்கில் வந்த மர்ம நபர்கள்
சுனிதா பாரதியை தள்ளிவிட்டு அவர் கழுத்தில் கிடந்த ஐந்தரை பவுன் தாலிசெயினை
பறித்துசென்றனர். கண் இமைக்கும் நேரத்தில் நடந்த இந்த கொள்ளை சம்பவம்
ஆறுமுகநேரி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு
முன்பு அதே பகுதியைச் சேர்ந்த கோபாலன் என்பவரது வீட்டில் நகை கொள்ளை போனது.
இதுகுறித்து இதுவரை எந்தவித துப்பும் கிடை க்காத நிலையில் தொடர்ந்து அதே
பகுதியில் மற்றொரு சம்பவம் நடந்திருப்பது எஸ்ஆர்எஸ் கார்டன் பகுதி மக்கள்
மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையில் இச்சம்பவம் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி
எஸ்ஆர்எஸ் கார்டனைச் சேர்ந்த பொதுமக்கள் ஆறுமுகநேரி போலீஸ் ஸ்டேஷனை
முற்றுகையிட்டனர். 
இதனால் ஆறுமுகநேரியில் பரபரப்பு ஏற்பட்டது. சுனிதா பாரதி கொடுத்த புகாரின்
பேரில் ஆறுமுகநேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை
நடத்திவருகின்றனர்.

0 comments

Leave a Reply