ஆறுமுகநேரி:பூச்சிக்காடு இந்து தொடக்கப்பள்ளி மற்றும் உயர்நிலைப்பள்ளி
மாணவ, மாணவிகளுக்கு இலவச நோட்டுப் புத்தகம் வழங்கும் விழா நடந்தது.
பூச்சிக்காடு இந்து தொடக்க மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் பயின்று வரும்
490 மாணவ, மாணவிகளுக்கு சென்னை ராகாஸ் டிரஸ்ட் சார்பில் அதன் நிறுவனர்
டாக்டர் குணசீலன் இலவச நோட்புத்தகம் வழங்கினார். இதனை பள்ளிக்கமிட்டி
பொருளாளர் சின்னத்துரை மாணவ, மாணவிகளிடம் வழங்கினார். நிகழ்ச்சியில் பள்ளி
ஆலோசகர் ஜெயஆதித்தன், உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் ஆபேத்நேகோ,
தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் காத்தவராஜன், உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்
மாதவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
0 comments