ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» திருச்செந்தூர் » திருச்செந்தூரில் வருஷாபிஷேகம்

திருச்செந்தூர் முருகன் கோயிலில் கும்பாபிஷேக தின வருஷாபிஷேகம் நேற்று நடந்தது. இதையொட்டி,கோயில்நடை அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. கும்பகலச பூஜைக்குப்பின், அவை மேல்தளத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டன. காலை 8.35 மணியளவில் வருஷாபிஷேகம் நடந்தது. மூலவர் சுப்பிரமணியர், வள்ளி-தெய்வானை விமானங்களுக்கு போர்த்திகளும், உற்சவர் சண்முகர் விமானத்திற்கு சிவாச்சாரியாரும், பெருமாள் விமானத்திற்கு பட்டாச்சாரியாரும், புனித நீரால் அபிஷேகம் செய்தனர். பின்னர், அந்த நீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. தொடர்ந்து கோயிலில் மூலவர், உற்சவருக்கு சிறப்பு பூஜை, தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியில் தக்கார் கோட்டை மணிகண்டன், இணை ஆணையர் சுதர்சன் கலந்துகொண்டனர். மாலையில், சுவாமி குமரவிடங்கப்பெருமான், வள்ளி-தெய்வானை அம்பாள்களுடன் தங்க மயில்சப்பரத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

0 comments

Leave a Reply