கடலூர் திருப்பாதிரிப்புலியூரில், ரயில் இன்ஜின் தடம் புரண்டதால், பரபரப்பு ஏற்பட்டது. இதனால், திருச்செந்தூர் செல்ல வேண்டிய விரைவு ரயில், கடலூரில் நிறுத்தப்பட்டது. மயிலாடுதுறையிலிருந்து விழுப்புரத்திற்குச் செல்லும் பயணிகள் ரயில், கடலூர் திருப்பாதிரிப்புலியூர் ரயில்வே ஸ்டேஷனுக்கு, இரவு 7.51 மணிக்கு (லாரன்ஸ் ரோடு ரயில்வே கேட்) லூப் லைனில் சென்ற போது, திடீரென குலுங்கி நின்றது.
இன்ஜின் டிரைவர் பெருமாள், உதவியாளர் வெற்றிச்செல்வம், கார்டு அழகேசன் ஆகியோர், ரயிலில் இருந்து இறங்கிப் பார்த்தனர். அப்போது, இன்ஜினின் முன்பக்கத்தில் உள்ள இரண்டு சக்கரங்கள், தடம் புரண்டது தெரியவந்தது. இதன் காரணமாக, வலதுபுறம் லூப் லைனில் (சப்போர்ட்டிங்), 3 இடங்களில் தண்டவாளத்தில் உடைந்திருந்தது.
இன்ஜின் தடம் புரண்ட ரயில், திருப்பாதிரிப்புலியூர் ரயில்வே ஸ்டேஷனில் நிற்பதற்காக, மிகக் குறைந்த, 15 கி.மீ., வேகத்தில் வந்ததால், இன்ஜினின் இரண்டு சக்கரம் மட்டுமே தடம்புரண்டது. இதற்கே, 100 மீட்டர் தூரத்திலிருந்தே, தண்டவாளத்தில் இறங்கியது தெரியவந்தது. மேலும், சிலிப்பர் கட்டை பொருத்தப்பட்ட கிளிப்புகள் உடைந்து சேதமடைந்தன. இதைத் தொடர்ந்து, ரயில்வே அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் விரைந்து செயல்பட்டு, கடலூர் முதுநகரிலிருந்து, 9.45 மணிக்கு, ரயில் இன்ஜின் வரவழைக்கப்பட்டு, தண்டவாளத்தில் இறங்கிய இன்ஜினிலிருந்து, பயணிகள் பெட்டிகளை மட்டும் இணைத்து, 10 மணிக்கு முதுநகருக்கு புறப்பட்டது. பாசஞ்சர் ரயில் இல்லாமல், விரைவு ரயில் இந்த லூப் லைனில் விடப்பட்டிருந்தால், பெரிய அளவில் விபத்து ஏற்பட்டிருக்கும். இதற்கிடையே, திருப்பாதிரிப்புலியூரில் கிராசிங்கிற்காக, 7.46 மணி முதல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த, சென்னையிலிருந்து திருச்செந்தூர் செல்ல வேண்டிய விரைவு ரயில், இரவு 10.27 மணிக்கு புறப்பட்டது. அமைச்சர் பயணம்: திருச்செந்தூர் விரைவு ரயிலில், மீன் வளத்துறை அமைச்சர் ஜெயபால் மற்றும் இந்து அறநிலையத் துறை கமிஷனர் சந்திரகுமார், இணை கமிஷனர் கவிதா ஆகியோர், பயணம் செய்தனர். ரயில் நிறுத்தப்பட்டதால், கடலூர் அ.தி.மு.க., பிரமுகர்கள், அமைச்சருக்கு தனியாக கார் ஏற்பாடு செய்து, நாகப்பட்டினம் அனுப்பி வைத்தனர். இதே போன்று, மாவட்ட நிர்வாகம் உதவியுடன், இந்து அறநிலையத் துறை அதிகாரிகள் தனி காரில் சென்றனர்.

0 comments