ஆறுமுகநேரி தேவார பக்த சபைகளில் மார்கழி மாத பஜனை சிறப்பாக நடந்து கொண்டிருக்கின்றது..
மாதங்களில் சிறந்தது மார்கழி. இந்த மாதம் ஆன்மீக ரீதியாக மட்டும் அல்லாது அறிவியல் ரீதியாகவும் சிறந்ததாக கருதப்படுகிறது. மார்கழி மாதம் அதிகாலையில் பிரம்ப முகூர்த்தத்தில் எழுந்து நீராடி கோயில்களுக்கு செல்வது உடலுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தும் என்பது அறிவியல்பூர்வமான உண்மை. ஆறுமுகநேரி லெட்சுமிமாநகரத்தில் 125 ஆண்டுகள் பழமை வாய்ந்த நடராஜ தேவார பக்த பஜனையும், விநாயகர் கோயில் தெருவில் சைவ சித்தாந்த சங்கமும் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் மார்கழி மாதம் முழுவதும் பக்தர்கள் பஜனை செய்வது வழக்கம். இந்த ஆண்டு மார்கழி 1ம் தேதி முதல் பஜனையை துவக்கினர். நடராஜர் தேவார பக்த பஜனை ஆலயத்தில் இருந்து பஜனை புறப்பட்டு லெட்சுமிமாநகரம், காந்தி தெரு, சோமசுந்தரி அம்மன் சன்னதிதெரு வழியாக மீண்டும் ஆலயம் சென்றடைகின்றனர். அதே போன்று சைவ சித்தாந்த சங்கத்தில் இருந்து புறப்பட்டு காந்தி தெரு, சோமசுந்தரி அம்மன் சன்னதி தெரு, விநாயகர் கோயில் தெரு வழியாக சங்கத்திற்கு சென்றடைகின்றனர். நடராஜர் தேவார பக்த பஜனை ஆலயத்தில் அதன் செயலாளர் ராமச்சந்திரன் தலைமையிலும் சைவ சித்தாந்த சங்கத்தில் சங்கரலிங்கம் தலைமையிலும் பஜனைகள் நடந்து வருகிறது.
மாதங்களில் சிறந்தது மார்கழி. இந்த மாதம் ஆன்மீக ரீதியாக மட்டும் அல்லாது அறிவியல் ரீதியாகவும் சிறந்ததாக கருதப்படுகிறது. மார்கழி மாதம் அதிகாலையில் பிரம்ப முகூர்த்தத்தில் எழுந்து நீராடி கோயில்களுக்கு செல்வது உடலுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தும் என்பது அறிவியல்பூர்வமான உண்மை. ஆறுமுகநேரி லெட்சுமிமாநகரத்தில் 125 ஆண்டுகள் பழமை வாய்ந்த நடராஜ தேவார பக்த பஜனையும், விநாயகர் கோயில் தெருவில் சைவ சித்தாந்த சங்கமும் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் மார்கழி மாதம் முழுவதும் பக்தர்கள் பஜனை செய்வது வழக்கம். இந்த ஆண்டு மார்கழி 1ம் தேதி முதல் பஜனையை துவக்கினர். நடராஜர் தேவார பக்த பஜனை ஆலயத்தில் இருந்து பஜனை புறப்பட்டு லெட்சுமிமாநகரம், காந்தி தெரு, சோமசுந்தரி அம்மன் சன்னதிதெரு வழியாக மீண்டும் ஆலயம் சென்றடைகின்றனர். அதே போன்று சைவ சித்தாந்த சங்கத்தில் இருந்து புறப்பட்டு காந்தி தெரு, சோமசுந்தரி அம்மன் சன்னதி தெரு, விநாயகர் கோயில் தெரு வழியாக சங்கத்திற்கு சென்றடைகின்றனர். நடராஜர் தேவார பக்த பஜனை ஆலயத்தில் அதன் செயலாளர் ராமச்சந்திரன் தலைமையிலும் சைவ சித்தாந்த சங்கத்தில் சங்கரலிங்கம் தலைமையிலும் பஜனைகள் நடந்து வருகிறது.
தூத்துக்குடிமாவட்ட வெள்ளிவிழா கொண்டாட்ட நிறைவு நிகழ்ச்சிகள், நேற்று, மாணவ, மாணவியரின் பசுமை ஓட்டத்துடன் தொடங்கின.25 ஆண்டுகளுக்கு முன்பு ஒருங்கிணைந்த நெல்லையிலிருந்து பிரிக்கப்பட்டு, தூத்துக்குடி தனிமாவட்டமாக, 1986 அக்.,20ல், உதயமானது. அப்போதைய, முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர்., இதனை துவக்கி வைத்தார். இதன், 25 ஆண்டு நிறைவையொட்டி, மாவட்ட வெள்ளிவிழா, முத்துவிழாவாக கொண்டாடப்படுகிறது. இதற்காக, சிலமாதங்களாக பல்வேறு நிகழ்ச்சிகள் டத்தப்பட்டன.இக்கொண்டாட்டத்தின் 3 நாள் நிறைவு நிகழ்ச்சிகள், நேற்று துவங்கின.பசுமை ஓட்டம்: முதல் நிகழ்ச்சியாக, மாவட்ட நிர்வாகம் மற்றும் அகில இந்திய கட்டுனர் வல்லுனர் சங்கம் இணைந்து, தண்ணீர் சிக்கனம், பாலிதீன் ஒழிப்பு, புவி வெப்ப மயமாதலை தவிர்த்தல், மரம் நடுவதன் அவசியம், மின்சார சிக்கனம் போன்றவற்றை வலியுறுத்தி, பள்ளி மாணவ,மாணவியர் பங்கேற்ற, பசுமை ஓட்டம் நிகழ்ச்சி நடந்தது. காலை 9.30 மணிக்கு, மரியன்னை பள்ளி முன்பு துவங்கிய இந்த ஓட்டத்திற்கு,கலெக்டர் ஆஷிஷ்குமார் தலைமை வகித்தார். தமிழக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் செல்லப்பாண்டியன் துவக்கிவைத்தார். வண்ண, டி-சர்ட் அணிந்த மாணவ, மாணவியர் ஏராளமானோர், நகரின் 5 இடங்களில் இருந்து சைக்கிளிலும், நடந்தும் பேரணியாக வந்து, தருவைவிளையாட்டு மைதானத்தை அடைந்தனர்.
லிம்கா சாதனைக்காக முயற்சி: அங்கு, 1,000 மாணவ, மாணவியர் சேர்ந்து, தமிழக வரைபட வடிவில் நின்றனர். அதனருகிலேயே,மற்றொரு பிரிவாக, 1,000 மாணவ, மாணவியர் சேர்ந்து, தூத்துக்குடி மாவட்ட வரைபட வடிவில் நின்றனர்.அதையொட்டி, முத்துவிழா பாடல் ஒளிபரப்பப்பட்டது. அதற்கடுத்து, 8,000 மாணவ, மாணவியர் தேசியக்கொடி வடிவில் நின்றனர். அதற்காக, தேசிய கீதம் இசைக்கப்பட்டது.லிம்கா மற்றும் ஆசிய சாதனைப் புத்தகத்தில் இடம்பெறுவதற்காக, இந்த நிகழ்ச்சிகள் நடத்தப்பெற்றதாக, அதிகாரிகள் தெரிவித்தனர். மாலையில் நடந்த விழாவில், பசுமை ஓட்டத்தில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுவழங்கப்பட்டது. உணவுத்திருவிழாவும் நடந்தது. விழாவின் 2வது நாளான இன்று, கருத்தரங்கம், செல்லப்பிராணிகள் கண்காட்சி, வெளிமாநில கலைஞர்களின் கலாசார நிகழ்ச்சியும், இறுதி நாளான நாளை பட்டிமன்றம், அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு நடக்கின்றன..
டிசிடபுள்யூ வின் மூத்த உதவித்தலைவரும்;மனித நேயப் பண்பாளருமான
திரு ஜி.ஸ்ரீனிவாசன் அவர்களின் பிறந்த தின விழா இன்று[16-10-2012]செவ்வாய்க்கிழமை திருச்செந்தூரில் ஏழை மாணவர்களின் அன்பு இல்லம்;கருணை இல்லங்களில் அன்னதானத்துடன் கொண்டாடப்பட்டது. காலை,நண்பகல் உணவுகள் வழங்கப்பட்டன.காந்திஜி நுகர்வோர் பேரவையின் நிறுவனர் டாக்டர் த.த.தவசிமுத்து,எழுத்தாளர் ச.பார்த்திபன் மற்றும் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.ஏற்பாடுகளை காந்திஜி நுகர்வோர் பேரவை ,ஆறுமுகநேரி கிளையின் உதவிச் செயலாளர் கே.சிவகுமார் செய்திருந்தார்.கோயிலில் சிறப்பு வழிபாடு செய்யப்பட்டது.
ஆறுமுகனேரி ஸ்ரீகிழக்கத்திமுத்து சுவாமி கோவில்கோவில் கொடை விழா
ஆறுமுகனேரி காந்தி தெருவில் ஸ்ரீகிழக்கத்திமுத்து சுவாமி கோவில் உள்ளது.இக்கிழக்கித்திமுத்து சாமி முற்காலத்தில் கொற்கையை ஆட்சி செய்த பாண்டிய மன்னனின் மகனாவார்.இக்கோயிலின் கொடை விழா 3 நாள்கள் நடைபெற்றது. முதல் நாளில் கோவிலைச் சேர்ந்த நடுத்தெரு ஸ்ரீபிரம்மசக்தி அம்மன் கோவிலில் குடியழைப்பு, திருவிளக்கு பூஜை நடைபெற்றது. 2-ம் நாள் கொடை விழா அன்று சுவாமி ஆத்தூர் அருகேயுள்ள தாமிரவருணியிலிருந்து புனித நீர் எடுத்து வருதல், பிற்பகலில் மஞ்சள் நீராடுதல், சிறப்பு அலங்கார,தீபாராதனை, அன்னதானம் நடைபெற்றன. மாலையில்சுவாமி நகர்வலம் வருதல், இரவில் சிறப்பு அலங்கார,தீபாராதனை நடைபெற்றன. 3-ம் நாள் காலை படைப்பு தீபாராதனை நடைபெற்றது.திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
புரட்டாசி கடைசி சனி ஆறுமுகனேரி, காயல்பட்டினம் கோவில்களில் சிறப்பு வழிபாடு
புரட்டாசி கடைசி சனிக்கிழமையையொட்டி ஆறுமுகனேரி மற்றும் காயல்பட்டினம் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. காயல்பட்டிணத்திலுள்ள பழமை வாய்ந்த பெருமாள் கோயில் ராகு கேதுகளுக்கானப் பரிகாரத் தலமாக விளங்குவதால் இக்கோயில் தற்போது பிரபலமடைந்ந்து வருகின்றது.இத்தகைய
காயல்பட்டினம் ரத்னாபுரி ஸ்ரீதேவி சமேத ஸ்ரீஅழகியமணவாளபெருமாள் திருக்கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை தரிசனம் செய்தனர். ஆறுமுகனேரி ஸ்ரீசோமசுந்தரி அம்மன் சமேத ஸ்ரீசோமநாத சுவாமி திருக்கோவிலில் பிரதோஷ வழிபாடுநடைபெற்றது. மேலும் புரட்டாசி கடைசிசனிக்கிழமையை யொட்டி சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றன.ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி மற்றும்அம்மனை தரிசனம் செய்தனர்.
மாவட்ட வெள்ளி விழா மாநில அளவிலான கிரிக்கெட்சாகுபுரத்தில்தொடக்கம்
தூத்துக்குடி மாவட்ட வெள்ளிவிழாவை முன்னிட்டு மாநில அளவிலான கிரிக்கெட் போட்டி சாகுபுரத்தில் சனிக்கிழமைதொடங்கியது.
தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில்வெள்ளிவிழா கொண்டாட்டங்கள் நடந்து வருகின்றன. இதன் ஒருபகுதியாக மாவட்ட நிர்வாகத்துடன் தூத்துக்குடிமாவட்ட கிரிக்கெட் சங்கம் இணைந்து மாநில
அளவிலான கிரிக்கெட் போட்டியை நடத்துகிறது.வரும் 17-ம் தேதி வரை நடைபெறும் இப்போட்டியில் தூத்துக்குடி, ராமநாதபுரம், திருவாரூர், தேனி, மதுரை, திருச்சி, தஞ்சாவூர் மற்றும் நாகபட்டினம் மாவட்டஅணிகள் கலந்து கொள்கின்றன.தொடக்கவிழா சனிக்கிழமை சாகுபுரம் டிசிடபிள்யூ
விளையாட்டு மைதானத்தில் தொடங்கியது. விழாவுக்குடிசிடபிள்யூ நிறுவன மூத்த உதவித் தலைவர்ஜி.ஸ்ரீனிவாசன் தலைமை வகித்தார்.உதவித் தலைவரும் கிரிக்கெட் சங்க மாவட்ட துணைத் தலைவருமான ஆர்.ஜெயக்குமார் வரவேற்றார். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ்குமார் சிறப்பு விருந்தினராகக்கலந்து கொண்டு கிரிக்கெட் போட்டியை தொடக்கி
வைத்துப் பேசினார்வெள்ளிவிழாவை முன்னிட்டு சாகுபுரம் டிசிடபிள்யூ
நிறுவனம் சார்பில் ரூ.10 லட்சத்துக்கான காசோலையை டிசிடபிள்யூ நிறுவன மூத்த உதவித் தலைவர் ஸ்ரீனிவாசன் மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினார்.
விழாவில், தூத்துக்குடி மாவட்ட கிரிக்கெட் சங்கத்தலைவர் ஆல்பர்ட் முரளிதரன், செயலர் சிவகுமரன்,டிசிடபிள்யூ உதவித் தலைவர் சுபாஷ்டாண்டன், பால்ராஜையா, ஆத்தூர் பேரூராட்சித் தலைவர்
முருகானந்தம், துணைத் தலைவர் இ.ஆண்டியப்பன்,மற்றும் நிறுவன பொது மேலாளர்கள், அதிகாரிகள், தொழிலாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா நாளை கொடியேற்றம்
தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா திங்கள்கிழமை (அக். 15) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
குலசேகரன்பட்டினம் அருள்மிகு ஞானமூர்த்தீஸ்வரர் சமேத முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா நாட்டில் மைசூருக்கு அடுத்தபடியாக மிகவும் பிரசித்திபெற்றதாகும். லட்சக்கணக்கான பக்தர்கள் திரளும் இந்தத்திருவிழா திங்கள்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.காலை ஐந்து மணிக்கு அலங்கரிக்கப்பட்ட யானையில் கொடிப்பட்டம் வீதி உலா வருகிறது. ஆறு மணிக்கு சந்தையடியூர் முத்தாரம்மன் தசரா குழு சார்பில்கடற்கரை செல்லும் வழியில் அன்னதானம் நடைபெறுகிறது. காலை ஏழு மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், காலை 9 மணிக்கு கொடியேற்றமும்நடைபெறுகின்றனபத்து மணிக்கு சிவலூர் தசரா குழு சார்பில் அன்னதானம்நடைபெறுகிறது. பகல் 1 மணி, மாலை 3.30 மணி, 6.30 மணி, இரவு 7.30 மணிகளில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெறுகின்றன. இரவு 9 மணிக்கு சிம்ம வாகனத்தில் துர்க்கை திருக்கோலத்தில் அம்மன் வீதியுலா வரும் நிகழ்ச்சி நடைபெறும். முக்கியத் திருவிழாவான மகிஷாசூரசம்ஹாரம இம்மாதம் 24-ம் தேதி நடைபெறுகிறது.தசரா திருவிழா ஏற்பாடுகளை திருக்கோவில் தக்காரும், உதவி ஆணையருமான செல்லத்துரை, இணை ஆணையர் அன்புமணி, நிர்வாக அதிகாரி சங்கர் மற்றும் கோவில்பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
திருச்செந்தூரில் மதர் சமூக சேவை நிறுவனம் சார்பில் சிறுபான்மையினருக்கான தொழில் முனைவோர் கருத்தரங்கம் நடைபெற்றது. மத்திய அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் மாநில தொழில்நுட்ப வளர்ச்சி நிறுவன மாநில இயக்குநர் ஜி.சண்முகநாதன் தொடங்கி வைத்தார். மாவட்ட சிறுபான்மையினர் நலத்துறைச் செயலர் சங்கரநாராயணன், ஸ்ரீ குமாரவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட மகளிர்த் திட்ட அலுவலர் பெருமாள், மாவட்டத் தொழில்மையப் பொதுமேலாளர் ஜி.ஞானசேகர், தோல் பொருள் தயாரிப்பு ஆலோசகர் சுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
லோபோ ஜெயசீலன் தொகுத்து வழங்கினார். குட்டிராஜா வரவேற்றார். மதர் சமூக சேவை நிறுவன இயக்குநர் கென்னடி நன்றி கூறினார்.
தூத்துக்குடி மாவட்ட வெள்ளிவிழா கொண்டாட்டத்தின் நிறைவு விழா அக்டோபர் 19-ம் தேதி தொடங்கி மூன்று நாள்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் உதயமாகி 25 ஆண்டுகள் நிறைவு பெற்றதையடுத்து வெள்ளிவிழா கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதன் நிறைவு விழா அக்டோபர் 19, 20, 21 ஆகிய மூன்று நாள்கள் நடைபெறுகிறது.
இந்த நிகழ்ச்சிகளை சிறப்பாக நடத்அதுவது குறித்த ஆலோசனைக் கூட்டம் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் சு. அமிர்தஜோதி, ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் பெல்லா, அனைத்துத் துறை அலுவலர்கள், வெள்ளிவிழாக் குழு உறுப்பினர்கள், வர்த்தகப் பிரமுகர்கள், தொண்டு நிறுவனப் பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டு கருத்துகளை தெரிவித்தனர்.
நிறைவு விழாவையொட்டி, தொடக்க நிகழ்ச்சியாக அக்டோபர் 19-ம் தேதி காலை 8 மணிக்கு தூத்துக்குடி நகரில் ஐந்து இடங்களில் இருந்து 10 ஆயிரம் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்கும் பசுமை ஓட்டம் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இதில் பங்கேற்கும் பத்தாயிரம் மாணவ, மாணவிகள் தூத்துக்குடி தருவை மைதானத்தில் ஒன்று சேர்ந்து வெள்ளிவிழாக் கொண்டாட்டங்களை நினைவு கூறும் வகையில் கலை வடிவங்களை அமைக்கின்றனர். தூத்துக்குடி டூவிபுரம் 7-வது தெருவில் உள்ள மாவட்ட நலக்குழு திருமண மண்டபத்தில் 19-ம் தேதியில் இருந்து பத்து நாள்களுக்கு நடைபெறும் புத்தகத் திருவிழாவின் தொடக்க விழா நிகழ்ச்சி மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது. 21-ம் தேதி காலை 50 வாகனங்களில் தூத்துக்குடி மாவட்ட முக்கிய நிகழ்வுகள் குறித்த அலங்கார ஊர்திகள் அணிவகுப்பு மற்றும் மாணவ, மாணவிகள், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொள்ளும் பிரமாண்ட பேரணி நடைபெறுகின்றன. 19,20,21 ஆகிய மூன்று நாள்களில் மெல்லிசை கச்சேரி, திரைநட்சத்திரங்கள் பங்கேற்கும் பொழுதுபோக்கு நிகழ்ச்சி, பாரம்பரிய நடன நிகழ்ச்சிகள், பட்டிமன்றம், கவியரங்கம், கருத்தரங்கம், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள், மேஜிக் ஷோ, செல்லப்பிராணிகள் கண்காட்சி, மலர் மற்றும் பழக்கண்காட்சி, பாரம்பரிய உணவுகள் தயாரிப்பு மற்றும் விற்பனை ஆகியவை நடைபெறுகிறது.
வெள்ளிவிழா கொண்டாட்ட நிகழ்ச்சிகளில் தமிழக அமைச்சர்கள், மாநகராட்சி மேயர், மக்களவை, சட்டப்பேரவை உறுப்பினர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், தொழில் அதிபர்கள், கல்வி நிறுவன பொறுப்பாளர்கள் கலந்து கொள்கின்றனர்.
மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பொதுமக்கள், வியாபாரிகள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், தொழில் அதிபர்கள் உள்ளிட்ட அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும் என ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
திருச்செந்தூர் ரயில் நிலையத்தில் மாற்றுத் திறனாளி பயணிகளுக்கு வசதியாக 2 வீல் சேர்கள் வழங்கப்பட்டுள்ளது. திருச்செந்தூர் ரயில் நிலையத்தில் மாற்றுத் திறனாளிகள், முதியோர் மற்றும் உடல்நலம் குன்றியோர் ரயிலில் ஏறுவதற்கு வசதியாக 2 வீல் சேர்கள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளன. காயல்பட்டினத்தைச் சேர்ந்த இருவர் 2 வீல் சேர்களை நிலைய கண்காணிப்பாளர் கிருஷ்ணன் மற்றும் நிலைய அதிகாரி ஜெயக்குமார் ஆகியோரிடம் வழங்கினர்.
தமிழகத் தொல்லியல் கழகத்தின் உறுப்பினரும்,காந்திஜி நுகர்வோர் பேரவையின் நிறுவனருமான முனைவர் த.த.தவசிமுத்து மாண்புமிகு முதலமைச்சர்,டாக்டர்.அம்மா அவர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில்,
[1]தூத்துக்குடி மாவட்டம்,திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசாமி திருக்கோயிலில் கோயிலினுள் உள்பிரகாரம் உள்துறைஅலுவலகத்தையை ஒட்டி, சிற்பவிதிகளுக்கு மாறாக வலது கைஉடைந்துகாணப்படும் துவாரபாலகரான வீரகேசரியின் சிற்பத்தைப் புதுப்பித்திட உடனடியாக ஆணையிட வேண்டுகிறேன். ஆறுபடைவீடுகளில் இரண்டாம் படைவீடான திருச்செந்தூர் கோயிலின் உண்டியல் வருமானத்தை மட்டும் பெருமையாக நாளிதழில் வெளியிடும் கோயில் நிர்வாகம் கோயிலின் முக்கியமான
கற்சிற்பம் உடைந்தது பற்றி கவலை கொள்ளாதது மிகுந்த வேதனையை அளிக்கிறது. தன்னைக்காண வரும் பக்தர்களை,உள்ளே காக்க வல்ல முருகன் உள்ளே இருக்கிறான் என்று சுட்டிக்காட்டும் கை உடைந்துள்ளது. அம்மா,அவர்கள் உரிய நடவடிக்கை எடுத்து கோயிலின் ஆகமத்தை நிலை நிறுத்திட வேண்டுகிறேன்.
[2]கோயிலின் தென்கிழக்கு மூலையில் நட்டுவைக்கப்பட்டு இருக்கும் கி.பி.875 ஆம்ஆண்டினைச்சேர்ந்த இரண்டாம் வரகுணப்பாண்டியனுடைய மிக அரியதான வட்டெழுத்துக் கல்வெட்டு உள்ளது.தமிழகத்தில் வட்டெழுத்துக்கல்வெட்டுகள் மிகக் குறைவாகவே உள்ளன.இந்நிலையில் இக்கோயிலில் உள்ள கல்வெட்டு மீது தேவையற்றப் பலகைகள், இரும்புச்சட்டங்கள்,கனமானப் பொருட்கள் பணியாளர்களால் வீசப்பட்டு கல்வெட்டின் மேற்பகுதி மற்றும் வட்டெழுத்துக்கள் சிதையத்தொடங்கி விட்டன.
இதுகுறித்து பலமுறை நிர்வாகத்தின் கவனத்திற்குக்கொண்டு சென்றும் பயனில்லை.தினமணி நாளிதழில்ஆராய்ச்சிமணிப் பகுதியில் எழுதியும் பயனில்லை.எனவே,
அம்மா,அவர்கள் இவ்வட்டெழுத்துக்கல்வெட்டை கண்ணாடி போட்டுப் பாதுகாத்திட ஆணையிட வேண்டுகிறேன் என்று கோரியுள்ளார்.
கோவில்பட்டியில் பொதுமக்கள் பயன்படுத்தும் பாதையை திறந்தவெளி கழிப்பிடமாக பயன்படுத்துவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக கூறி அப்பகுதியில் பொதுமக்கள் பிள்ளையார்கோயில் அமைத்து வழிபாடு நடத்தினர். கோவில்பட்டி நகராட்சியில் 34வது வார்டு கருணாநிதிநகர் முதல் தெருவை பயன்படுத்தி அப்பகுதியிலுள்ள பல்வேறு பள்ளிகளுக்கு பள்ளி மாணவ மாணவிகள் சென்று வருகின்றனர். இத்தெருவின் மையப்பகுதியில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கான குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டு பயன்பாட்டில் இருந்து வருகிறது. இத்தொட்டி அமைந்துள்ள பகுதியில் ல் பலர் திறந்தவெளி கழிப்பிடமாக பயன்படுத்தி வருவதாக கூறப்படுகிறது. மேலும் இப்பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் படிக்கும் சுமார் 50க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளும் குறிப்பிட்ட பகுதியையே கழிப்பிடமாக பயன்படுத்தி வருவதாக அப்பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதனால் கருணாநிதி நகர் முதல் தெரு முழுவதும் சுகாதார சீர்கேடு அடைந்துள்ளதாகவும், துர்நாற்றம் வீசுவதால் அப்பகுதியில் குடியிருப்போர் பெரிதும் பாதிக்கப்படுவதாக கூறுகின்றனர். இந்நிலையில் குறிப்பிட்ட பகுதியை திறந்தவெளி கழிப்பிடமாக பயன்படுத்தக்கூடாது என பலமுறை தெரிவித்தும், நடவடிக்கை எடுக்க அதிகாரிடம் மனுச்செய்தும் பலனில்லை என்கின்றனர். இதனால் அதிருப்தியடைந்த அப்பகுதி பொதுமக்கள் குடிநீர் தொட்டியின் பின்புறம் பிள்ளையார் கோயில் அமைக்க திட்டமிட்டு அதற்கான பணிகளை துவக்கினர். தொடர்ந்து மேடைகட்டி அதன்மீது விநாயகர் சிலையையும் நிறுவினர். இதுகுறித்து ஒருசிலர் பொதுமக்கள் கோயில் கட்டுவதன் பேரில் ஆக்கிரமிப்பு செய்வதாக நகராட்சி அதிகாரிகளிடம் புகார் செய்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து பிரச்னைக்குரிய இடத்திற்கு நகராட்சி நகரமைப்பு அலுவலர் ராஜசேகரன் பார்வையிட்டு ரோட்டில் ஆக்கிரமிப்பு செய்து கோயில் அமைக்கக்கூடாது என்று தெரிவித்ததாக அப்பகுதி பொதுமக்கள் கூறுகின்றனர். எனினும் பொதுமக்கள் குறிப்பிட்ட இடத்தில் விநாயகர் சிலையமைத்து வழிபாடுகளும் மேற்கொண்டனர். தொடர்ந்து 34வது வார்டு கவுன்சிலர் ஏஞ்சலா சின்னத்துரை தலைமையில் நகராட்சி அலுவலகத்திற்கு திரண்டு வந்து கமிஷ்னரை முற்றுகையிட்டு கோரிக்கை மனு அளித்தனர். இதையடுத்து கோவில்பட்டி நகராட்சி கமிஷ்னர் ரோட்டில் ஆக்கிரமிப்பு செய்து கோயில் அமைப்பது சுப்ரீம் கோர்ட் உத்தரவின்படி தவறான நடைமுறையாகும் என்பதால் கோயில் அமைக்கக்கூடாது என்று கூறினார். ஆனால் குறிப்பிட்ட இடத்தில் சுகாதாரம் இல்லை என்றும், அப்பகுதியை சேர்ந்த பள்ளியில் மாணவர்களுக்கு போதுமான கழிப்பிட வசதிகள் செய்து கொடுக்காமல் திறந்தவெளி கழிப்பிடமாக குறிப்பிட்ட இடத்தை பயன்படுத்தி வருவதாகவும், அதனால் அமைத்த கோயிலை ஆக்கிரமிப்பு எனக்கருதினால் குடிநீர் தொட்டியையும் சேர்த்து அகற்ற வேண்டும் என்றும் பொதுமக்கள் தரப்பில் தெரிவித்தனர். இதுகுறித்து கமிஷ்னர் மற்றும் பொதுமக்களிடையே வாக்குவாதம் உருவானதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து பொதுமக்கள் தங்கள் கோரிக்கையை மட்டும் தெரிவிக்க வேண்டும், சுகாதாரத்தை பராமரிக்க நடவடிக்கை எடுக்கப்படுமென கமிஷ்னர் தெரிவித்ததையடுத்து திரும்பிச் சென்றனர். கோவில்பட்டியில் சுகாதாரத்தை பாதுகாக்க ரோட்டில் விநாயகர் கோயில் உருவாக்கி, கோரிக்கையை வலியுறுத்தி கமிஷ்னரை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆறுமுகநேரியின் நான்கு வழிப்பாதைகள் சந்திக்கும் கடைவீதிப்பகுதியில் அரசின் மதுபானக்கடைக்கு அனுமதி வழங்கப்பட்டு அது வெகு சிறப்பாக இயங்கி வருகிறது.குடிகாரர்களின் தள்ளாட்டத்தால் பேருந்து ஓட்டுநர்கள்
பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.எந்நேரமும் விபத்து நடைபெறலாம்.அவ்வாறு சாலை விபத்து ஏற்பட்டால் டாஸ்மாக் மாவட்ட மேலாளரும் அனுமதி வழங்கிய அதிகாரியுமே பொறுப்பேற்க வேண்டும் என மக்கள் குமுறுகின்றனர்.கடைவீதி வழியாக தாய் மார்களும் அப்பாவி மக்களும் நடமாட அச்சமடைந்துள்ளனர்.ஒருசிலர் மது அருந்தி தங்களுடைய அச்சத்தைப்போக்கிக் கொண்டு மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்துவது நியாயமா.......
தையல் கலைதொழிலாளர்கள்ஆர்ப்பாட்டம்
ஆறுமுகனேரியில் தொடர் மின்வெட்டை கண்டித்து தடையில்லா மின்சாரம் வழங்கக் கேட்டும் தையற்கலை தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கத்தினர் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சங்கப் பொருளாளர் ஏ.எம்.ரவி தலைமை வகித்தார். ஆலோசகர்கள் பி.தூசிமுத்து, எம்.மாசானமுத்து, தலைவர் பி.ஐயம்பெருமாள், எஸ்.சி.சிவசங்கர் மற்றும் பி.ஆனந்தவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டச் செயலர் ஏ.நாராயணன், துணைச் செயலர் பி.ஜெயக்குமார், திருச்செந்தூர் நகரத் தலைவர் சுந்தரவாசகம், பொருளாளர் வளன்ராஜ், ஜெயப்பிரகாஷ், ஏரல் நகரத் தலைவர் என்.வேணுகுட்டன், செயலர் ஏ.மாரியப்பன், மாநில பிரதிநிதி எம்.ராஜேந்திரன், உடன்குடி நகரத் தலைவர் பி.கோயில்மணி, செயலர் ஆர்.பிரதீப்கண்ணன், மெஞ்ஞானபுரம் நகரத் தலைவர் கே.மர்காஷியஸ், செயலர் எஸ்.செல்வராஜ், மாவட்ட துணைச் செயலர் கே.பச்சைமால், சாத்தான்குளம் நகரத் தலைவர் எஸ்.செல்வின், பொருளாளர் எம்.பசுபதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தியாகபூமி ஆறுமுகநேரி நூல் இரண்டாம் பதிப்பினை கூடுதலானத் தகவலோடு வெளியிட வேண்டுமாறு நூலாசிரியர் முனைவர் த.த.தவசிமுத்துவை ஆறுமுகநேரியின் பற்றாளர்கள் வேண்டியுள்ளனர். அதற்கான பணிகளை ஆசிரியர் தொடங்கியுள்ளார்.நூலில் இடம்பெறாதத் தகவல்களிருப்பின் அதனை அனுப்பி வைக்கலாம்.புகைப்படங்களிருப்பின் அதனையும் அனுப்பித்தரலாம்.பொதுச்சேவையில் உள்ளவர் பற்றியத் தகவல்கலையும் அனுப்பலாம்.அனுப்பவேண்டிய
e.mail-id- www.thavasimuthumaran@gmail.com
விழுப்புரம் மாவட்டத்தில் காந்திஜி நுகர்வோர் பேரவை அதன் நிறுவனர் ஆறுமுகநேரி டாக்டர் த.த.தவசிமுத்து ஆலோசனையின் பேரில் காந்திஜி நுகர்வோர் பேரவை அமைக்கப்பட்டுள்ளது.மாநிலச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள திருக்கோயிலூர் எஸ்.குருராஜன் தலைமையில் விழுப்புரம் மாவட்ட நிர்வாகிகள் உத்தமர் காந்திஜி சிலைக்கு மாலை அணிவித்ததுடன்,ஏழைக்குழந்தைகளுக்கு அன்னதானமும் வழங்குகின்றனர்
காந்திஜி நுகர்வோர் பேரவையின் மாநிலச் செயலாளர் எஸ்.குருராஜன் அன்னதானம் வழங்குகிறார்.
கோவில்பட்டியில் காந்திஜி நுகர்வோர் பேரவையினர் காந்தி ஜெயந்தியைக் கொண்டாடினர்
சுதந்திரப்போராட்டத்தியாகிகள் மற்றும் வாரிசுகள் நலச்சங்கமும் காந்திஜி நுகர்வோர் பேரவையும் இணைந்து பள்ளிக் குழந்தைகளுக்கு ஓவியப் போட்டியை நடத்தி கேடயங்களையும் மெடல்களையும் சான்றிதழ்களையும் வழங்கியது.ஆறுமுகநேரி வியாபாரிகள் சங்க திருமண மண்டபத்தில் நடைபெற்றது.தியாகிகள் சங்கத்தலைவர் தியாகி எஸ்.பொன்னையாப்பிள்ளை தலைமை தாங்கினார்.ஆறுமுகநேரி பேரூராட்சித்தலைவர் ஆ.கல்யாணசுந்தரம் ஓவியப்போட்டியைத் தொடங்கி வைத்தார்.ஆறுமுகநேரி காந்திஜி நுகர்வோர் பேரவைத் தலைவர் பி.ஏ.சுந்தர்ராஜ், துணைத்தலைவர்கள் கா.சுபாஷ் சந்திரபோஸ், ந.பாலகிருஷ்ணன் ஆச்சாரி,காந்திஜி நுகர்வோர் பேரவை வடக்கு மாவட்ட அமைப்பாளர் பா.பார்வதிகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர் நேரு காமராஜ் சோசலிஷ்ட் இயக்கத்தலைவர் தூ.இராமஜெயம்,திருச்செந்தூர் வட்டார இரயில் பயணியர் சங்கத்தலைவர் இரா.தங்கமணி ஆகியோர் கலந்துகொண்டனர்.தியாகிகள் வாரிசுகள் சங்கக் கூட்டத்தில் மாநில அரசு பென்சனைக் கூட்டிய தமிழக அரசுக்கு நன்றிதெரிவிக்கப்பட்டது.மணிமுத்தாறு அணையைக் கட்டுவித்த கே.டி.கோசல்ராம் அவர்களின் நினைவாக அஞ்சல் தலை வெளியிட மத்திய,மாநில அரசுகளைக் கோருவது என் தீர்மானிக்கப்பட்டது. பிற்பகல் 2 மணி அளவில் நுகர்வோர் விழிப்புணர்வு கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.காந்திஜி நுகர்வோர் பேரவை நிறுவனத்தலைவர் டாக்டர் த.த.தவசிமுத்து தலைமை தாங்கினார்.அ.இராஜநாயகம்,கோவில்பட்டி கே.எஸ்.செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.நுகர்வோர் விழிப்புணர்வு உரையாடல் நடைபெற்றது.தூத்துக்குடி மாவட்டத்தின் வடக்குப் பகுதி காந்திஜி நுகர்வோர் பேரவையின் தலைவர் கோவில்பட்டி எஸ்.செல்வம்,செயலாளர் எஸ்.முத்துராமலிங்கம்,பொருளாளர் எம்.அம்பலவாணன்,தூத்துக்குடி தெற்கு மாவட்டஅமைப்பாளர் திருச்செந்தூர் சு.ஜெயந்திநாதர்,வட்டாரச் செயலாளர் எஸ்.கார்க்கி ஆகியோர் கலந்து கொண்டனர். பிற்பகல் 3 மணிக்கு ஓவியப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவியருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
வெற்றி பெற்றவர்கள் விபரம் எல்.கே.ஜி-யு.கே.ஜி 1. ஆம் பரிசு.கே.சோபனா லட்சுமி பிரியா, யு.கே.ஜி கமலாவதி மேல்நிலைப்பள்ளி,சாகுபுரம். 2.ஆம் பரிசு.எம்.எஸ்.சுபீஷ் சேதுபதி, யு.கே.ஜி கமலாவதி மேல்நிலைப்பள்ளி, 3 பரிசு.கே.கீர்திகாபானு, யு.கே.ஜி கமலாவதிமேல்நிலைப்பள்ளி,சாகுபுரம்.
1 ஆம் வகுப்பு-2 ஆம் வகுப்பு 1 ஆம் பரிசு.ஆர்.ஆண்ட்ரியா, ஸ்ரீ காஞ்சி சங்கரா அகடமி மேல் நிலைப்பள்ளி 2.ஆம் பரிசு.பி.அனிஷா, ஸ்ரீ காஞ்சி சங்கரா அகடமி மேல் நிலைப்பள்ளி 3.ஆம் பரிசு.கே.பரணி வேலன், காமராஜ் சோமசுந்தரி நர்சரி பிரைமரிபள்ளி ஆறுமுகநேரி3ஆம் வகுப்பு-4 ஆம் வகுப்பு 1.ஆம் பரிசு.பி.எஸ்.வெங்கடேசன், கமலாவதி மேல்நிலைப்பள்ளி,சாகுபுரம்.
2.ஆம் பரிசு.ஜி.மாரீஷ், கமலாவதி மேல்நிலைப்பள்ளி,சாகுபுரம். 3.ஆம் பரிசு.ஆர்.விஷ்ணு சிவப்பிரியா கமலாவதி மேல்நிலைப்பள்ளி,சாகுபுரம்.
5 ஆம் வகுப்பு-6ஆம் வகுப்பு 1.ஆம் பரிசு.ஏ.கீர்த்தனாதேவி கமலாவதி மேல்நிலைப்பள்ளி,சாகுபுரம்.2.ஆம் பரிசு.ஆர்.ஜோஷ் ரூபிகா ஸ்ரீ காஞ்சி சங்கரா அகடமி மேல் நிலைப்பள்ளி 3.ஆம் பரிசு.எம்.எஸ்.பிரஷா, கமலாவதி மேல்நிலைப்பள்ளி,சாகுபுரம்
7ஆம் வகுப்பு-8ஆம் வகுப்பு 1.ஆம் பரிசு.எம்.எஸ்.ராஜா சேதுபதி கமலாவதி மேல்நிலைப்பள்ளி,சாகுபுரம் 2.ஆம் பரிசு.எம்.தில்லை நம்பிராஜன் எஸ்.ஏ.வி.மேல்நிலைப்பள்ளி,தூத்துக்குடி.3.ஆம் பரிசு.எல்.சிவசங்கர்,அருள்மிகு செந்திலாண்டவர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,திருச்செந்தூர்.9ஆம் வகுப்பு-10ஆம் வகுப்பு 1.ஆம் பரிசு.ஏ.சுஸ்மிதா, கமலாவதி மேல்நிலைப்பள்ளி,சாகுபுரம் 2.ஆம் பரிசு.ஆர்.திவ்யா, கமலாவதி மேல்நிலைப்பள்ளி,சாகுபுரம் 3.ஆம் பரிசு.பி.கிரிஷ்வின் ஏ.கற்றார், அனிதாகுமரன் மேல்நிலைப்பள்ளி,தண்டுபத்து.11ஆம் வகுப்பு-12ஆம் வகுப்பு 1.ஆம் பரிசு.டி.ஆர்.ரிஷாந்த்,புனித லசால் மேல்நிலைப்பள்ளி,தூத்துக்குடி.2.ஆம் பரிசு.எஸ்.தனு,ஸ்ரீ காஞ்சி சங்கரா அகடமி மேல்நிலைப்பள்ளி.திருச்செந்தூர்.
அம்மன்புரத்தில் அகில இந்திய நாடார் பாதுகாப்புபேரவை நிறுவனர் மூலக்கரை வெங்கடேஷ் பண்ணையார்
9 வது ஆண்டு நினைவு வீரவழிபாடு இன்று நடந்தது
வெங்கடேஷ் பண்ணையார் படம் பொருந்திய ரதம் முத்தையாபுரத்திலிருந்து ஊர்வலமாக புறப்படுகிறது. ஊர்வலத்தை சொர்ணவேல் குமார் தலைமையில் முத்தையாபுரம், ஊர் சமுதாய தலைவர்கள் முன்னிலையில் வெங்கடேஷ் பண்ணையார் நினைவு ஜோதிகள், முத்தையாபுரம் ராஜீவ்நகர், தங்கம்மாள்புரம், மற்றும் தூத்துக்குடி பிரையண்ட் நகர், சிதம்பரம் நகர், சண்முகபுரம், ராஜகோபால் நகர், ராஜீவ் நகர் மற்றும் பசுவந்தனை, தருவைகுளம், வேப்பலோடை, குளத்தூர், வேம்பார் ஆகிய ஊர்களில் இருந்து புறப்பட்டு முத்தையாபுரத்தில் இருந்து செல்லும் ரதத்துடன் இணைந்து ஆறுமுகநேரி வழியாக அம்மன்புரம் சென்றடைந்தது. நிகழ்ச்சியில் முத்தையாபுரம் சண்முகம், சுரேஷ், வேல்முருகன், சவரிமுத்து, சிலுவை, சண்முகம், ராஜீவ்நகர் குட்டிமணி மற்றும் அத்திமரப்பட்டி ராமஜெயம் ஆகிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பேரவை தலைவர் சுபாஷ் பண்ணையார் அறிவுறுத்தலின்பேரில் நிகழ்ச்சி அமைதியாக நடந்தது. அனைவரும் திரளாக கலந்து கொண்டனர். தமிழகமெங்குமிருந்து ஏராளமான் வாகனங்களில் பேரவை மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
காந்திஜி நுகர்வோர் பேரவை தொடங்கப்பட்டது
காந்திஜி நுகர்வோர் பேரவையின் மாநில அமைப்புக்கூட்டம் ஆறுமுகநேரியில் நடைபெற்றது.நிறுவனர் முனைவர் த.த.தவசிமுத்து தலைமை தாங்கினார்.செய்தி தொடர்பாளர் கோவில்பட்டி கே.எஸ்.செல்வம் முன்னிலை வகித்தார்.நுகர்வோர் கல்வி,நுகர்வோர் கல்வி விழிப்புணர்வு,காந்திஜியின் கோட்பாடு ஆகியவற்றை நோக்கமாகக் கொண்ட இவ்வமைப்பிற்கு சென்னை பி.ஞானவேல் பொதுச்செயலாளராகவும் தஞ்சாவூர் பி.ஆர்.கமால்பாட்சா,திருக்கோயிலூர் எஸ்.குருராஜன்,மதுரை வி.கதிரேசன் ஆகியோர் செயலாளராகவும் தேர்வு செய்யப்பட்டனர்.பின் வருமாறு ஒவ்வோரு மாவட்டத்திற்கும் அமைப்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
தூத்துக்குடி வடக்கு மாவட்டம்-கோவில்பட்டி கே.எஸ்.செல்வம்,
தூத்துக்குடி தெற்கு மாவட்டம் -திருச்செந்தூர் சு.ஜெயந்திநாதர்,
கன்னியாகுமரி-இ.சந்துரு,நெல்லை-செங்கோட்டை இ.கைலாசநாதன்,
விருதுநகர்-ச.முருகன்,சிவகங்கை-வி.ராஜராஜசோழன்,திருச்சி-என்.பெருமாள்சாமி,கரூர்-நியமத் அலி,நாமக்கல்-தியாகி காதர்மொய்தீன்
சேலம்-கவிஞர் பாலன்,வேலூர்-ராஜேந்திரபாபு,விழுப்புரம்-எஸ்.குருராஜன்,திருவண்ணாமலை-பாபு,தஞ்சாவூர்-கமால் பாட்சா, சென்னை;திருவள்ளூர்;செங்கல்பட்டு-ஞானவேல்
காந்தி பிறந்த நாளில் காந்தி படம் இல்லாத பள்ளிகளுக்கு காந்திஜி படத்தை வழங்குவது என்று தீர்மானிக்கப்பட்டது.
காந்திஜி நுகர்வோர் பேரவையின் மாநில அமைப்புக்கூட்டம் ஆறுமுகநேரியில் நடைபெற்றது.நிறுவனர் முனைவர் த.த.தவசிமுத்து தலைமை தாங்கினார்.செய்தி தொடர்பாளர் கோவில்பட்டி கே.எஸ்.செல்வம் முன்னிலை வகித்தார்.நுகர்வோர் கல்வி,நுகர்வோர் கல்வி விழிப்புணர்வு,காந்திஜியின் கோட்பாடு ஆகியவற்றை நோக்கமாகக் கொண்ட இவ்வமைப்பிற்கு சென்னை பி.ஞானவேல் பொதுச்செயலாளராகவும் தஞ்சாவூர் பி.ஆர்.கமால்பாட்சா,திருக்கோயிலூர் எஸ்.குருராஜன்,மதுரை வி.கதிரேசன் ஆகியோர் செயலாளராகவும் தேர்வு செய்யப்பட்டனர்.பின் வருமாறு ஒவ்வோரு மாவட்டத்திற்கும் அமைப்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
தூத்துக்குடி வடக்கு மாவட்டம்-கோவில்பட்டி கே.எஸ்.செல்வம்,
தூத்துக்குடி தெற்கு மாவட்டம் -திருச்செந்தூர் சு.ஜெயந்திநாதர்,
கன்னியாகுமரி-இ.சந்துரு,நெல்லை-செங்கோட்டை இ.கைலாசநாதன்,
விருதுநகர்-ச.முருகன்,சிவகங்கை-வி.ராஜராஜசோழன்,திருச்சி-என்.பெருமாள்சாமி,கரூர்-நியமத் அலி,நாமக்கல்-தியாகி காதர்மொய்தீன்
சேலம்-கவிஞர் பாலன்,வேலூர்-ராஜேந்திரபாபு,விழுப்புரம்-எஸ்.குருராஜன்,திருவண்ணாமலை-பாபு,தஞ்சாவூர்-கமால் பாட்சா, சென்னை;திருவள்ளூர்;செங்கல்பட்டு-ஞானவேல்
காந்தி பிறந்த நாளில் காந்தி படம் இல்லாத பள்ளிகளுக்கு காந்திஜி படத்தை வழங்குவது என்று தீர்மானிக்கப்பட்டது.
ஆறுமுகனேரியில் மக்கள் எதிர்ப்பால் திறக்கப்படாத டாஸ்மாக் மதுக் கடை-சபாஷ் பொதுமக்களே
ஆறுமுகனேரியில் டாஸ்மாக் மதுக்கடையை திறக்க அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து முற்றுகையில் ஈடுபட்டதால், கடை மூடப்பட்டது.
ஆறுமுகனேரி ராஜமன்னியபுரம் விலக்கில் தெற்கு ஆத்தூரில் உள்ள டாஸ்மாக் மதுபானக்கடையை திறக்க ஏற்பாடுகள் நடைபெற்றதாம். இதற்காக கடையை தேர்வு செய்து அங்கு மதுபானங்களை வியாழக்கிழமை கொண்டு சேர்த்தனர்.
இதையறிந்த அப்பகுதி மக்கள் வெள்ளிக்கிழமை திறக்கபட இருந்த டாஸ்மாக் கடை முன்பு முற்றுகையில் ஈடுபட்டனர்.
சமத்துவ மக்கள் கட்சி ஒன்றிய இளைஞரணிச் செயலர் எஸ்.அகஸ்டின், 6-வது வார்டு கிளைச் செயலர் செல்வராஜ், காமராஜர் இளைஞர் மன்றத் தலைவர் தங்கமணி, இம்மானுவேல், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் கணேசன், வின்சென்ட், யுவராணி, அரிகரன், விஜயன், ஜேசுதுரை, ஜெபராஜ், சந்தனம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஆறுமுகனேரி காவல்துறை ஆய்வாளர் டி. பார்த்தீபன், உதவி ஆய்வாளர் சண்முகவேல் மற்றும் கந்தசாமிபுரம் கிராம நிர்வாக அலுவலர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பேசி கடை திறக்கப்படாது என உறுதியளித்ததை அடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
ஆறுமுகனேரி ராஜமன்னியபுரம் விலக்கில் தெற்கு ஆத்தூரில் உள்ள டாஸ்மாக் மதுபானக்கடையை திறக்க ஏற்பாடுகள் நடைபெற்றதாம். இதற்காக கடையை தேர்வு செய்து அங்கு மதுபானங்களை வியாழக்கிழமை கொண்டு சேர்த்தனர்.
இதையறிந்த அப்பகுதி மக்கள் வெள்ளிக்கிழமை திறக்கபட இருந்த டாஸ்மாக் கடை முன்பு முற்றுகையில் ஈடுபட்டனர்.
சமத்துவ மக்கள் கட்சி ஒன்றிய இளைஞரணிச் செயலர் எஸ்.அகஸ்டின், 6-வது வார்டு கிளைச் செயலர் செல்வராஜ், காமராஜர் இளைஞர் மன்றத் தலைவர் தங்கமணி, இம்மானுவேல், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் கணேசன், வின்சென்ட், யுவராணி, அரிகரன், விஜயன், ஜேசுதுரை, ஜெபராஜ், சந்தனம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஆறுமுகனேரி காவல்துறை ஆய்வாளர் டி. பார்த்தீபன், உதவி ஆய்வாளர் சண்முகவேல் மற்றும் கந்தசாமிபுரம் கிராம நிர்வாக அலுவலர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பேசி கடை திறக்கப்படாது என உறுதியளித்ததை அடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
மருத்துவமனையை மேம்படுத்தக் கேட்டால் அருகிலுள்ள ஊரிலுள்ள பெரிய மருத்துவமனைக்குப் போங்கள் என்று கை காட்டும் தூத்துக்குடி மாவட்ட மருத்துவத்துறை போல மதுப்பிரியர்களை தூத்துக்குடிக்கோ;அல்லது திருநெல்வேலிக்கோ டாஸ்மாக்கிற்குப் போகச்சொல்லுங்களேன்
தேசப்பிதா மகாத்மா காந்திஜியின் பிறந்ததினவிழாவை முன்னிட்டு ஆறுமுகநேரியில் இந்திய சுதந்திரப்போராட்டத்தியாகிகள் மற்றும் வாரிசுகள் சங்கம் சார்பில் தூத்துக்குடிமாவட்ட அளவில் மாபெரும் ஓவியப்போட்டி நடைபெற உள்ளது.காந்திஜி நுகர்வோர் பேரவையும் இப்போட்டியை இணைந்து நடத்துகிறது.
நாள்-02.10.2012 செவ்வாய் கிழமை,
இடம்-ஆறுமுகநேரி அய்க்கிய வியாபாரிகள் சங்க திருமண மண்டபம்.
தலைப்புகள்-
எல்.கே.ஜி-யூ.கே.ஜி-விரும்பிய படம்
1-2 ஆம் வகுப்பு -தேசியமலர்
3-4 ஆம் வகுப்பு- தேசிய விலங்கும் காடும்
5-6 ஆம் வகுப்பு- மாசுக்கட்டுப்பாடும் சுகாதாரமும்
7-8 ஆம் வகுப்பு- உத்தமர் காந்திஜி
9-19 ஆம் வகுப்பு- நேத்தாஜி
11-12 ஆம் வகுப்பு- தூத்துக்குடி மாவட்டச் சிறப்பு
மேலும் விபரங்களுக்கு-டாக்டர் த.த.தவசிமுத்து,36.காந்தித் தெரு, ஆறுமுகனேரி-628202-அலைபேசி9360539833..9176051116
திறனாய்வுத் தேர்வில் வென்று, பூச்சிக்காடு இந்து உயர்நிலைப் பள்ளி மாணவ-மாணவிகள் 5 பேர் உதவித்தொகை பெற தகுதி பெற்றுள்ளனர்.
இப் பள்ளியைச் சேர்ந்த என்.அபிநயா, எஸ்.பவித்ரா, எம்.பேபி சாலினி, டி.பான்மதி மற்றும் எம்.பாலசுப்பிரமணியன் ஆகிய ஐவரும் திறனாய்வுத் தேர்வில் தேர்ச்சி பெற்று மாதம் ரூ.500 வீதம் நான்கு ஆண்டுகளுக்கு மத்திய அரசின் கல்வி உதவித்தொகை பெற தகுதி பெற்றுள்ளனர். இவர்களை பள்ளிச் செயலர் எஸ்.ராஜேந்திரசாமி, ஆலோசகர் இரா.ஜெய ஆதித்தன், தலைமை ஆசிரியர் ஜே.எஸ்.ஆபேத் நேகோ மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.
இப் பள்ளியைச் சேர்ந்த என்.அபிநயா, எஸ்.பவித்ரா, எம்.பேபி சாலினி, டி.பான்மதி மற்றும் எம்.பாலசுப்பிரமணியன் ஆகிய ஐவரும் திறனாய்வுத் தேர்வில் தேர்ச்சி பெற்று மாதம் ரூ.500 வீதம் நான்கு ஆண்டுகளுக்கு மத்திய அரசின் கல்வி உதவித்தொகை பெற தகுதி பெற்றுள்ளனர். இவர்களை பள்ளிச் செயலர் எஸ்.ராஜேந்திரசாமி, ஆலோசகர் இரா.ஜெய ஆதித்தன், தலைமை ஆசிரியர் ஜே.எஸ்.ஆபேத் நேகோ மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.
காயல்பட்டினத்தில் வி-யுனைட்டெட் ஸ்போர்ட்ஸ் க்ளப் சார்பில் நடைபெற்ற கேரம் போட்டியில் காவாலங்கா அணி வெற்றி பெற்றது.
÷இப்போட்டியில் 48 ஆட்டக்காரர்களைக் கொண்ட மொத்தம் 24 அணிகள் விளையாடின. பின்னர் நடைபெற்ற லீக் போட்டியில், எம்.என்.முஹம்மத் அலீ - சபீர் ஆகியோரைக் கொண்ட காவாலங்கா அணி சாம்பியன் பட்டம் வென்றது. ரெட் ஸ்டார் சங்க அணி இரண்டாமிடத்தையும், மன்பவுல் பரக்காத் சங்க அணி மூன்றாமிடத்தையும், ஹாஜியப்பா அணி நான்காமிடத்தையும் பெற்றன. பரிசளிப்பு விழாவுக்கு காயல்பட்டினம் காழி அலாவுத்தீன் அப்பா தைக்கா சங்கத்தைச் சேர்ந்த வேனா முஹம்மத் லெப்பை தலைமை தாங்கினார். எஸ்.எம். முஹம்மத் ஃபாரூக் அல்ஃபாஸீ பரிசுகளை வழங்கினார். எல்.கே. மேல்நிலைப் பள்ளியின் 6-ம் வகுப்பு மாணவர் மீரா ஸôஹிபுக்கு வளரும் இளம் நட்சத்திர வீரருக்கான சிறப்புப் பரிசு வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை நவ்ஃபல், சொளுக்கு முஹம்மத் தம்பி, எம்.பி.எஸ். இஸ்மயில், மன்பவுல் பரக்காத் சங்கத்தைச் சேர்ந்த முஹம்மத் நூஹ் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
÷இப்போட்டியில் 48 ஆட்டக்காரர்களைக் கொண்ட மொத்தம் 24 அணிகள் விளையாடின. பின்னர் நடைபெற்ற லீக் போட்டியில், எம்.என்.முஹம்மத் அலீ - சபீர் ஆகியோரைக் கொண்ட காவாலங்கா அணி சாம்பியன் பட்டம் வென்றது. ரெட் ஸ்டார் சங்க அணி இரண்டாமிடத்தையும், மன்பவுல் பரக்காத் சங்க அணி மூன்றாமிடத்தையும், ஹாஜியப்பா அணி நான்காமிடத்தையும் பெற்றன. பரிசளிப்பு விழாவுக்கு காயல்பட்டினம் காழி அலாவுத்தீன் அப்பா தைக்கா சங்கத்தைச் சேர்ந்த வேனா முஹம்மத் லெப்பை தலைமை தாங்கினார். எஸ்.எம். முஹம்மத் ஃபாரூக் அல்ஃபாஸீ பரிசுகளை வழங்கினார். எல்.கே. மேல்நிலைப் பள்ளியின் 6-ம் வகுப்பு மாணவர் மீரா ஸôஹிபுக்கு வளரும் இளம் நட்சத்திர வீரருக்கான சிறப்புப் பரிசு வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை நவ்ஃபல், சொளுக்கு முஹம்மத் தம்பி, எம்.பி.எஸ். இஸ்மயில், மன்பவுல் பரக்காத் சங்கத்தைச் சேர்ந்த முஹம்மத் நூஹ் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
திருச்செந்தூர் முருகன் கோயிலில் உண்டியல் வசூல் ரூ 95
லட்சத்தை தாண்டியது. திருச்செந்தூர் முருகன் கோயிலில் மாதம் இருமுறை
உண்டியல் திறந்து எண்ணப்படும். இதேபோன்று ஆகஸ்டு மாதம் உண்டியல் காணிக்கை
எண்ணப்பட்டு உள்ளது. அதன்படி முதல் உண்டியல் திறப்பு கடந்த 14ந் தேதி
திறந்து எண்ணப்பட்டது. கோவில் வளாகத்தில் உள்ள கோவிந்தம்மாள் ஆதித்தனார்
திருமண மண்டபத்தில் தக்கார் ப.தா.கோட்டைமணிகண்டன், இணைஆணையர் சுதர்சன்,
முன்னிலையில் உண்டியல் திறக்கப்பட்டது. இந்த பணியில் தூத்துக்குடி
அறநிலையத்துறை உதவி ஆணையர் செல்லத்துரை, அலுவலக கண்காணிப்பாளர் சாத்தையா,
ஆய்வர் முருகானந்தம், தலைமை க ணக்கர் பட்டுராஜா, பொதுமக்கள் பிரதிநிதிக ள்
சுப்பிரமணியன், வேலாண்டி, அகிலன், மோகன், மற்றும் பணியாளர்கள் உண்டியல்
எண்ணும் பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
முதல் உண்டியலில் ரூ. 49 லட்சத்து 31
முதல் உண்டியலில் ரூ. 49 லட்சத்து 31
ஆயிரத்து 634 இருந்தது. 505 கிராம் தங்கமும், 3,320 கிராம் வெள்ளியும்
இருந்தது. 2-வது முறையாக திறந்து எண்ணப்பட்ட கோவில் உண்டியலில் 40 லட்சத்து
68 ஆயிரத்து 831 ரூபாயும், கோசாலை உண்டியலில் 35 ஆயிரத்து 907 ரூபாயும்,
யானை பராமரிப்பு 8 ஆயிரத்து 934 ரூபாயும், அன்னதான உண்டியலில் 5 லட்சத்து 9
ஆயிரத்து 891 ரூபாயும், மேலக்கொவில் அன்னதான உண்டியலில் 2 ஆயிரத்து 557
ரூபாயும், கிருஷ்ணாபுரம் அன்னதான உண்டியலில் 3 ஆயிரத்து 233 ரூபாய் கிடந்து
இருந்தது. தங்கம் 381 கிராமும், வெள்ளி 3,308 கிராம் கிடைத்து
உள்ளது.மொத்தம் 95 லட்சத்து 60 ஆயிரத்து 987 ரூபாயும், 886 கிராம்
தங்கமும், 6 ஆயிரத்து 628 கிராம் வெள்ளியும் காணிக்கையாக கிடைத்து உள்ளது.
கடந்த 2011 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் உண்டியல் வசூல் ரூ. 53 லட்சத்து 81
ஆயிரத்து 938 கிடைத்து உள்ளது. இந்த ஆண்டு ஆகஸ்டு மாத உண்டியல் வசூல் 95
லட்சத்து 60 ஆயிரத்து 987 ரூபாய் கிடைத்து உள்ளது. இது கடந்த ஆண்டு ஆகஸ்டு
மாத உண்டியல் வசூலை விட ரூ 41 லட்சத்து 79 ஆயிரத்து 49 அதிகம் கிடைத்து
உள்ளது குறிப்பிடத்தக்கது.
திருச்செந்தூர்-நாகர்கோவில் ரயில் சேவை துவக்க வேண்டும் என தமிழ்நாடு
நுகர்வோர் பேரவை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றினர்.
தமிழ்நாடு
தமிழ்நாடு
நுகர்வோர் பேரவை மாவட்ட குழு கூட்டம் உடன்குடியில் நடந்தது. கூட்டத்திற்கு
தமிழ்நாடு நுகர்வோர் பேரவை மாநிலத் தலைவர் மோகனசுந்தரம் தலைமை வகித்தார்.
தூத்துக்குடி மாவட்டக்குழு செயலாளர் சிங்கராய நாடார் முன்னிலை வகித்தார்.
உடன்குடி
உடன்குடி
நகர செயலாளர் ஜெபராஜ், உடன்குடி நகர ஆலோசகர் நாராயணன், தூத்துக்குடி
மாவட்ட குழு ஆலோசகர் பரமசிவன், மெஞ்ஞானபுரம் நகர அமைப்பாளர் ஜோஸப் உட்பட
பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் திருச்செந்தூரில் இருந்து
நாகர்கோவிலுக்கு தென்னக ரயில்வே ரயில் சேவை துவக்க வேண்டும். ஆங்கிலேயே
ஆட்சியில் குலசேகரன்பட்டணம், காலன்குடியிருப்பு வழியாக திசையன்விளை வரையும்
டிராலி சேவை இருந்துள்ளது.
அதே மார்க்கத்தில் ராமேஸ்வரம்,
அதே மார்க்கத்தில் ராமேஸ்வரம்,
திருச்செந்தூர் வரும் பக்தர்கள் கன்னியாக்குமரி செல்ல இந்த சேவை
பலனளிக்கும். எனவே உடனடியாக இந்த ரயில் சேவையை துவக்க வேண்டும்.
உடன்குடியில் உள்ள நான்கு பஜார் பகுதி ரோடுகள் குண்டும், குழியுமாகவும்
மணல் குவியல்களும் உள்ளது. உடனடியாக ரோடுகளை புதுப்பிக்க வேண்டும்,
மெஞ்ஞானபுரம் பஸ்ஸ்டாண்டில் பொதுமக்களின் நலன் கருதி பொது கழிப்பிட வசதி
செய்திட வேண்டும். குலசேகரன்பட்டணம் முத்தாரம்மன் கோயில் தமிழகத்தில்
முதலிடம் வகிக்கிறது. இங்கு உலகம் முழுவதும் இருந்து தினசரி ஏராளமான
பக்தர்கள் வந்து செல்கின்றனர். இவ்வாறு வரும் பக்தர்கள் வெளியூர் செல்ல
பஸ்க்காக வெயிலில் பல மணி நேரம் நிற்க வேண்டியதுள்ளது. எனவே பக்தர்களின்
நலன் கருதி நிழற்குடை அமைக்க வேண்டும். உடன்குடியில் ஏராளமான குடிசை
வீடுகள் உள்ளது.
இங்கு தீ விபத்து ஏற்பட்டால் அருகில் உள்ள
இங்கு தீ விபத்து ஏற்பட்டால் அருகில் உள்ள
சாத்தான்குளம், திருச்செந்தூர் தீயணைப்பு வாகனம் வருவதற்குள் பலத்த சேதம்
ஏற்பட்டு விடுகிறது. எனவே உடன்குடியில் ஒரு தீயணைப்பு நிலையம் அமைக்க
வேண்டும் உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றினர்.
ஆறுமுகனேரியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நல்லூர்குளம், நத்தக்குளம், ஆவுடையார்குளம், எல்லப்பநாயக்கன் குளம் ஆகியவற்றின் அருகில் உள்ள கிராமங்களிலிருந்து ஆழ்குழாய் கிணறுகளை சட்டவிரோதமாக அமைத்து தனியார் நிறுவனங்கள் நூற்றுக்கணக்கான லாரிகளில் தினமும் தண்ணீரை கொண்டு செல்வதாகக் கூறியும், அதைத் தடுக்கக் கோரியும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நகரச் செயலர் சு.ஜெயபாண்டியன் தலைமை வகித்தார். க.ஆறுமுகபெருமாள், பெ.சுப்பிரமணியன், தனசிங், பட்டு ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநிலச் செயற்குழு உறுப்பினர் க.கனகராஜ், மாவட்டச் செயலர் ஆர்.ரசல், ஒன்றியச் செயலர் சு.பன்னீர்செல்வம், மாவட்டக் குழு உறுப்பினர் செ.ரவிச்சந்திரன் ஆகியோர் பேசினர். ஒன்றிய குழு உறுப்பினர்கள் ஆ.துரைராஜ், பொன்கல்யாண சுந்தரம், தா.திருத்துவராஜ், பெ.தமிழ்செல்வன், ச.கண்ணன், த.கலைச்செல்வி, லட்சுமிபுரம் கிளைச் செயலர் த.ஜான் ஸ்டான்லி, 35 மகளிர் உள்பட 80 பேர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
தேவையான பொருட்கள்:
செய்முறை:
தக்காளிப் பழத்தை எடுத்து நன்கு கழுவி தினமும் நிறையச் சாப்பிட்டு வந்தால் தோலில் ஏற்படும் சுருக்கங்கள் குறையும்.
தக்காளிப் பழத்தை எடுத்து நன்கு கழுவி தினமும் நிறையச் சாப்பிட்டு வந்தால் தோலில் ஏற்படும் சுருக்கங்கள் குறையும்.
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் ஆவணித் திருவிழா, செப்டம்பர் 5-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
10 நாள்கள் நடைபெறும் இத்திருவிழா இந்த ஆண்டு செப்டம்பர் 5-ம் தேதி காலை 5 மணிக்கு மேல் 5.30 மணிக்குள் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. முக்கிய திருநாளான 5-ம் திருவிழா செப். 9-ம் தேதியும், 7-ம் திருநாளான சிவப்பு சாத்தி திருவிழா செப். 11-ம் தேதியும், 8-ம் திருநாளான பச்சை சாத்தி திருவிழா செப்.12-ம் தேதியும், சிகர நிகழ்ச்சியான 10-ம் திருநாள் தேரோட்டத் திருவிழா செப்.14-ம் தேதி நடைபெறுகிறது.
ஆத்தூர் அருகே தாமிரவருணி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட வேண்டுமென பாஜக கோரி உள்ளது.
இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம், ஆறுமுகனேரி நகர பாஜக தலைவர் ஆர்.தினகரபாண்டியன் அளித்த மனு:தென் மாவட்டங்களான திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி பகுதி மக்களின் மிகப்பெரிய குடிநீர் ஆதாரமாகவும், விவசாய பெருமக்களின் வாழ்வாதாரமாகவும் இருந்து வருவது தாமிரவருணி ஆறு. வற்றாத ஜீவநதியாக இருந்த இந்த ஆற்றில் எப்போதும் இல்லாத வகையில் இந்த ஆண்டு தண்ணீரே இல்லாத அளவுக்கு வறட்சியாக உள்ளது. இதனால் விவசாயத்துக்கு மட்டுமன்றி குடிநீருக்கும் மிகப்பெரிய தட்டுப்பாடு ஏற்பட்டுள் ளது.இதனால் ஆத்தூர் மற்றும் ஆறுமுகனேரி உள்ளிட்ட திருச்செந்தூர் வட்டார பகுதிகளில் மிகப்பெரிய குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதற்கு காரணம் தாமிரவருணி ஆற்றில் தண்ணீர் இல்லாததுதான் காரணம். இதனால் கடல் நீர் உள்புகுந்து நீர் உப்பு நீராகி விட்டது.இதுபோன்ற இக்கட்டான காலங்களில் கடல் நீர் உள்புகாமல் தடுத்திடும் வகையிலும் மேலும் வெள்ள நேரங்களில் நீரை சேமித்து வைத்துக்கொள்ளும் வகையிலும் ஆத்தூர் அருகிலுள்ள சேர்ந்தபூமங்கலத்தில் தடுப்பணை அமைக்க வேண்டுமென்றார் அவர்.
இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம், ஆறுமுகனேரி நகர பாஜக தலைவர் ஆர்.தினகரபாண்டியன் அளித்த மனு:தென் மாவட்டங்களான திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி பகுதி மக்களின் மிகப்பெரிய குடிநீர் ஆதாரமாகவும், விவசாய பெருமக்களின் வாழ்வாதாரமாகவும் இருந்து வருவது தாமிரவருணி ஆறு. வற்றாத ஜீவநதியாக இருந்த இந்த ஆற்றில் எப்போதும் இல்லாத வகையில் இந்த ஆண்டு தண்ணீரே இல்லாத அளவுக்கு வறட்சியாக உள்ளது. இதனால் விவசாயத்துக்கு மட்டுமன்றி குடிநீருக்கும் மிகப்பெரிய தட்டுப்பாடு ஏற்பட்டுள் ளது.இதனால் ஆத்தூர் மற்றும் ஆறுமுகனேரி உள்ளிட்ட திருச்செந்தூர் வட்டார பகுதிகளில் மிகப்பெரிய குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதற்கு காரணம் தாமிரவருணி ஆற்றில் தண்ணீர் இல்லாததுதான் காரணம். இதனால் கடல் நீர் உள்புகுந்து நீர் உப்பு நீராகி விட்டது.இதுபோன்ற இக்கட்டான காலங்களில் கடல் நீர் உள்புகாமல் தடுத்திடும் வகையிலும் மேலும் வெள்ள நேரங்களில் நீரை சேமித்து வைத்துக்கொள்ளும் வகையிலும் ஆத்தூர் அருகிலுள்ள சேர்ந்தபூமங்கலத்தில் தடுப்பணை அமைக்க வேண்டுமென்றார் அவர்.
தூத்துக்குடிஎட்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றோர் அரசினர் தொழிற்பயிற்சியில் சேர்வதற்கு வரும் 23ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதனை விருப்பம் உள்ளவர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.இது குறித்து தூத்துக்குடி கலெக்டர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது;எட்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு, மேல்நிலை வகுப்பு தேர்ச்சி பெற்றோர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சியில் சேர்வதற்கான காலக்கெடு வரும் 23ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.அரசு, தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் பல்வேறு தொழிற் பிரிவுகளில் இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் மற்றும் விண்ணப்பித்து எந்த தொழிற் பிரிவுகளிலும் இடம் கிடைக்காதவர்கள் பயிற்சியில் சேர்வதற்கு தூத்துக்குடி கோரம்பள்ளத்தில் உள்ள அரசு தொழிற்பயிற்சி பள்ளி (போன் எண் 0461-2340133), திருச்செந்தூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் (போன் எண் 04639-2342253), நாகலாபுரம் அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் (போன் எண் 04638-242687) ஆகிய நிலையங்களில் விண்ணப்பம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.விண்ணப்பத்தினை 50 ரூபாய் செலுத்தி பெற்றுக் கொள்ள வேண்டும். விண்ணப்பத்தை பூர்த்தி செய்து மூன்று அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் ஏதாவது ஒன்றில் தங்களுக்கு விருப்பப்பட்ட தொழிற்பயிற்சி நிலையத்திற்கு வரும் 23ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆறுமுகநேரி ராஜமன்னியபுரம் ரேசன் கடையில் முதல்நாள் இரவு முதல்
வரிசையில் காத்து நின்று மண்ணெண்ணெய் வாங்கி சென்றனர்.
ஆறுமுகநேரி பகுதியில் உள்ள ரேசன் கடைகளில் கடந்த சில மாதங்களாக மண்ணெண்ணெய்
தட்டுப்பாடு இருந்து வருகிறது. இதனால் ரேசன் கடைகளில் மண்ணெண்ணெய் வழங்கும்
நாளுக்கு முதல் நாள் கேன்களை வரிசையாக அடுக்கி வைக்கும் நிலை ஏற்பட்டது. வழக்கமாக
காலை 9 மணிக்கு ரேசன் கடை திறந்து மண்ணெண்ணெய் விநியோகம் நடைபெறும். ஆனால்
முதல்நாள் மாலையிலிருந்தே பொதுமக்கள் கேன்களை வரிசையாக வைத்துவிட்டு சென்றுவிடு
வார்கள். ஒருசிலர் ரேசன் கடை முன்பு இரவு முழுவதும் தவம் கிடப்பார்கள்.
தமிழகத்திற்கு மத்திய அரசு குறைவான அளவு மண்ணெண்ணெய் ஒதுக்கீடு செய்ததால் இந்த
நிலை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனிடையே இப்பகுதி ரேசன் கடை ஊழியர்கள் மண்
ணெண்ணெய் வழங்குவதற்கு டோக்கன் சிஸ்டத்தை கடைபிடித்தனர். மண்ணெண்ணெய் வழ
ங்கும் போது கடைசியில் வாங்க முடியாமல் போனவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு அடுத்த
முறை முன்னுரிமை கொடுத்து சப்ளை செய்தனர்.
இந்நிலையில் ஆறுமுகநேரி ராஜமன்னியபுரத்தில் நேற்று மண்ணெண்ணெய் வழங்கப்பட்டது.
இதற்காக பொதுமக்கள் கேனுடன் வரிசையில் காத்திருந்தனர். வரிசையாக நிற்பதற்காக கம்பு
கட்டி வரிசையை ஒழுங்குபடுத்தினர். இரவு முழுவதும் ரேசன் கடை முன்பு காத்திருந்த அப்ப
குதி மக்கள் மண்ணெண்ணெய் வாங்கி சென்றனர். ஆறுமுகநேரி பகுதியில் தட்டுப்பாடு இன்றி
அனைத்து ரேசன் கார்டுதாரர்களும் மண்ணெண்ணெய் கிடைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க
வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வரிசையில் காத்து நின்று மண்ணெண்ணெய் வாங்கி சென்றனர்.
ஆறுமுகநேரி பகுதியில் உள்ள ரேசன் கடைகளில் கடந்த சில மாதங்களாக மண்ணெண்ணெய்
தட்டுப்பாடு இருந்து வருகிறது. இதனால் ரேசன் கடைகளில் மண்ணெண்ணெய் வழங்கும்
நாளுக்கு முதல் நாள் கேன்களை வரிசையாக அடுக்கி வைக்கும் நிலை ஏற்பட்டது. வழக்கமாக
காலை 9 மணிக்கு ரேசன் கடை திறந்து மண்ணெண்ணெய் விநியோகம் நடைபெறும். ஆனால்
முதல்நாள் மாலையிலிருந்தே பொதுமக்கள் கேன்களை வரிசையாக வைத்துவிட்டு சென்றுவிடு
வார்கள். ஒருசிலர் ரேசன் கடை முன்பு இரவு முழுவதும் தவம் கிடப்பார்கள்.
தமிழகத்திற்கு மத்திய அரசு குறைவான அளவு மண்ணெண்ணெய் ஒதுக்கீடு செய்ததால் இந்த
நிலை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனிடையே இப்பகுதி ரேசன் கடை ஊழியர்கள் மண்
ணெண்ணெய் வழங்குவதற்கு டோக்கன் சிஸ்டத்தை கடைபிடித்தனர். மண்ணெண்ணெய் வழ
ங்கும் போது கடைசியில் வாங்க முடியாமல் போனவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு அடுத்த
முறை முன்னுரிமை கொடுத்து சப்ளை செய்தனர்.
இந்நிலையில் ஆறுமுகநேரி ராஜமன்னியபுரத்தில் நேற்று மண்ணெண்ணெய் வழங்கப்பட்டது.
இதற்காக பொதுமக்கள் கேனுடன் வரிசையில் காத்திருந்தனர். வரிசையாக நிற்பதற்காக கம்பு
கட்டி வரிசையை ஒழுங்குபடுத்தினர். இரவு முழுவதும் ரேசன் கடை முன்பு காத்திருந்த அப்ப
குதி மக்கள் மண்ணெண்ணெய் வாங்கி சென்றனர். ஆறுமுகநேரி பகுதியில் தட்டுப்பாடு இன்றி
அனைத்து ரேசன் கார்டுதாரர்களும் மண்ணெண்ணெய் கிடைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க
வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருச்செந்தூர் முருகன் கோயிலில் ரூ.2.50 கோடியில் வளர்ச்சி பணிகள் நடந்து வருவதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.திருச்செந்தூர் முருகன் கோயிலில் ரூ.49 லட்சம் செலவில் கிரிப்பிரகாரத்தின் கீழ்ப்பகுதியில் கடற்கரை ஓரம் பக்தர்கள் அமர்வதற்கு வசதியாக இருக்கை வசதி செய்யப்பட்டு உள்ளது. மேலும் பக்தர்கள் மாலை நேரத்தில் இங்கு அமர்ந்து கடல் அழகை ரசிப்பதற்கு நன்றாக இருக்கும். குழந்தைகளின் பாதுகாப்புக்காக இங்கு கடற்கரையோரம் அமரும் இடத்தில் தடுப்புக்காக கம்பிகள் மூலம் தடுப்பு ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் கோயிலுக்கு வரும் பக்தர்கள் மாலை நேரத்தில் இங்கு அமர்ந்து ரசிக்கலாம். மேலும் மின்விளக்குகள், அலங்கார நடைபாதை ஆகியவையுடன் இந்த இடம் அழகுபடுத்தப்பட்டுள்ளது. இது உள்ளூர் மற்றும் கோயிலுக்கு வரும் பக்தர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று உள்ள இந்த இடம் பக்தர்களுக்கு மிகவும் வசதியாகவும் இருக்கிறது. ரூ.99 லட்சம் செலவில் பக்தர்கள் தங்கும் கூடம் விரைவில் கட்டப்பட உள்ளது. அதற்கான ஆயத்த பணிகள் துவங்கி உள்ளது. ரூ.53 லட்சம் செலவில் சுற்றுலா பஸ் ஸ்டாப் அருகே பக்தர்கள் பயன்பாட்டுக்காக 24 அறைகள் கட்டப்பட்டுள்ளது. ரூ.50 லட்சம் செலவில் நவீன முடிகாணிக்கை கூடம் கட்டப்பட்டு உள்ளது. கோயிலில் கடந்த ஆண்டு ஜூலை மாத த்தை விட இந்த ஆண்டு ஜூ லை மாதம் உண்டியல் வருமானம் ரூ.6 லட்சத்து 28 ஆயிரத்து 700ம், விடுதி கட்டணம் ரூ.3 லட்சத்து 32 ஆயிரத்து 758ம், கட்டண சீட்டுகள் மூலம் ரூ.6 லட்சத்து 79 ஆயிரத்து 20ம் அதிகரித்து உள்ளது. மொத்தம் ரூ.16 லட்சத்து 40 ஆயிரத்து 478ம் வருவாய் அதிகரித்து இருக்கிறது. திருச்செந்தூர் முருகன் கோயிலு க்கு நாளுக்கு நாள் வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இரு க்கிறது. கோயிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக வசதிகளும் தொடர்ந்து செய்யப்பட் டு வருகிறது.கோயிலுக்கு வரும் பக்தர்கள் சிரமமின்றி சாமி தரிசனம் செய்ய வழிமுறை செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு கோயில் தக்கார் கோட்டை மணிகண்டன் கூ றினார். கோயில் இணை ஆ ணையர் சுதர்சன், அலுவலக கண்காணிப்பாளர் சாத்தையா ஆகியோர் உடனிருந்தனர்.
திருச்செந்தூரில் ஆக்ரமிப்புகளை அகற்றும் பணி நடந்தது. அப்போது டவுன் பஞ்,க்கு சொந்தமான கிண ற்றையும் அகற்றவேண்டும் என்று பொதும க்கள் திடீர் முற்றுகையில் ஈடுபட்டனர்.திருச்செந்தூர் டவுன் பஞ்.,ல் ஆக்ரமிப்புகளை அகற்றப்படும் என டவுன் பஞ்.,சார்பில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. கடந்த 1917-1919-ம் ஆண்டுகளில் நிர்ணயிக்கப்பட்ட எல்லைப்படி திருச்செந்தூர் பகுதியில் அள வீடு செய்து வருவாய்த்துறையினர் ஆக்ரமிப்புகளை அடையாளக் குடியீடு செய்திருந்தனர். இந்த எல்லையை கணக்கிட்டு ஆர்டிஓ.,பொற்கொடி, தாசில்தார் சங்கரநாராயணன், ஆர் ஐ.,கோபால், விஏஓ.,கணேசபெருமாள் , டவுன் பஞ்.,செயல் அலுவலர் முனியாண்டி, உட்பட டவுன் பஞ்.,பணியாளர்கள்,ஆக்ரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுவருகின்றனர். நேற்று குடியிருப்புகளில் முன்பு இருந்து மேற் கூரைகள், வாசல்படிகள் அகற்றப்பட்டது. இத னை கண்டித்து அப்பகுதி மக்கள் அதிகாரிகளை முற்று கையிட்டு வீட்டு வாசல்படியை அக ற்றும் அதிகாரிகள் முதலில் இப்பகுதியில் ஆக் ரமிப்பு செய்யப்பட்டு டவுன் பஞ்சாயத்துக்கு சொந்தமான கிணறு ஒன்று உள்ளது. அதø னயும் அகற்றவேண்டும் என்று கூறினார். சம் பவ இடத்திற்கு தாசில்தார் சங்கரநாயணன், டிஎஸ்பி ஞானசேகரன், மற்றும் இன்ஸ்பெ க்டர்கள் பிரதாபன், இசக்கி ஆகியோர் வந்து சம்பந்தப்பட்ட இடம் ஆக்கிரமிப்பில் இருந் தால் அகற்றப்படும் என்று உறுதியளித்தனர். அதன்பின் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
திருச்செந்தூர் வட்டார பகுதியைச் சேர்ந்த உணவு
வணிகர்கள் தொழிலை பதிவு செய்ய வேண்டும் என்று உணவு பாதுகாப்பு அதிகாரி
வேண்டுகோள் விடுத்துள்ளார்.
திருச்செந்தூர் வட்டார உணவு பாதுகாப்பு அதிகாரி தனது செய்தி குறிப்பில்
கூறியிருப்பதாவது, உணவு பாதுகாப்பு மற்றும் தாங்கள் சட்டம் 2006 இந்தியா
முழுவதும் 5.8.2011 முதல் அமல்படுத்தப்பட்டு நடந்து வருகிறது. இந்த
சட்டப்படி உணவு விடுதிகள், டீக் கடைகள், பலசரக்கு கடைகள், குளிர்பான
கடைகள், பெட்டிக் கடைகள், காய்கறி, பழக்கடைகள், சுவீட் ஸ்டால், பேக்கரி,
இறைச்சி கடைகள், உணவு பொருட்கள் ஏஜென்சி, வினியோகஸ்தர்கள்,
தயாரிப்பாளர்கள், கரும்புச்சாறு கடைகள், பள்ளி, கல்லூரி கேண்டீன்,
விடுதிகள், டாஸ்மாக் பார்கள், கோயில் பிரசாத ஸ்டால்கள், வாகனம் மூலம் உணவு
பொருட்கள் வினியோகிப்பவர்கள், ஐஸ் கம்பெனி, சோடா தயாரிப்பாளர்கள், பால்
விற்பனையாளர்கள், தள்ளுவண்டி உணவு கடைகள், சாலையோர இரவு கடைகள் போன்ற
அனைத்து வகையான உணவு தொழில் புரிபவர்கள் உரிமம் அல்லது பதிவு சான்றிதழ்
கண்டிப்பாக பெற வேண்டும். திருச்செந்தூர் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர்
அலுவலகம், திருச்செந்தூர் யூனியன் அலுவலக வளாகத்துக்குள் செயல்படுகிறது.
விவரங்களுக்கு 94865 57634 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிந்து
கொள்ளலாம். திருச்செந்தூர் வட்டாரத்துக்குட்பட்ட திருச்செந்தூர் டவுன்
பஞ்.,ஆறுமுகநேரி டவுன் பஞ்., கானம் டவுன் பஞ்., காயல்பட்டினம் நகராட்சி
மற்றும் மேலத்திருச்செந்தூர், பிச்சிவிளை, காயாமொழி, பள்ளிபத்து,
வீரபாண்டியன்பட்டினம், வீரபாண்டியன்பட்டினம் ரூரல், மேலப்புதுக்குடி,
வீரமாணிக்கம், நல்லூர், அம்மன்புரம், மூலக்கரை ஆகிய 11 பஞ்.,கள் பகுதிகளில்
உள்ள உணவு வணிகர்கள் திருச்செந்தூரில் உள்ள உணவு பாதுகாப்பு அலுவலர்
அலுவலகத்தில் விண்ணப்படிவம் பெற்று பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன்
இணைந்து பதிவு செய்து கொள்ள வேண்டும்.
மேலும் விண்ணப்பத்துடன் பாஸ்போர்ட் அளவு கலர் புகைப்படம் 3, குடும்ப அட்டை
நகல் ஒன்று, புகைப்பட அடையாள அட்டை நகர் ஒன்று போன்றவை இணைக்க வேண்டும்.
உரிமம் அல்லது பதிவு சான்று இல்லாமல் உணவு தொழில் செய்வோர் மீது 6 மாதம்
வரை சிறை தண்டனையும், ரூ.5 லட்சம் வரை அபராதமும் விதிக்கப்படும் என்று
கூறப்பட்டு உள்ளது. எனவே திருச்செந்தூர் வட்டார உணவு வணிகர்கள் தங்கள் உணவு
தொழிலை உடனடியாக பதிவு செய்து கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த
தகவலை திருச்செந்தூர் வட்டார உணவு பாதுகாப்பு அதிகாரி பொன்முத்து ஞானசேகர்
தெரிவித்து உள்ளார்.
தூத்துக்குடி துறைமுகத்தில் சுதந்திரதினவிழா
தூத்துக்குடி வஉசி.துறைமுகத்தில் நேற்று சுதந்திர தினவிழா கோலாகலமாக நடந்தது.
விழாவில் வஉசி துறைமுகப்பொறுப்புக் கழகத் துணைத்தலைவர் நடராஜன் தேசியகொடியை
ஏற்றி வைத்து மத்திய தொழில் பாதுகாப்பு படை, துறைமுக தீயணைப்பு படை,
துறைமுகப் பள்ளியின் என்சிசி,மாணவ,மாணவியர் படை மற்றும் துறைமுகப்பள்ளி
மாணவ,மாணவியர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
பின்னர் அவர் பேசியதாவது. தற்சமயம் பொருளாதார வளர்ச்சிக்காக நமதுநாடு
எதிர்கொண்டிருக்கும் உள் கட்டமைப்பு விரிவாக்கத்தின் சவாலை கருத்தில்கொண்டு
கடல்சார் திட்டம் 2020 ல்இந்திய துறைமுகங்களில் தற்சமயம் உள்ள கொள்ளளவான
1000 மில்லியன் டன்களை 3500 மில்லியன் டன்களாக 2020 ஆம் ஆண்டிற்குள்
உயர்த்த திட்டமிட்டு உள்ளது.
வஉசி சிதம்பரனார் துறைமுகத்தை பொறுத்த அளவில் 31-3-12 வரை துறைமுகத்தின்
கொள்ளவு,33.34 மில்லியன் டன்களாக உள்ளது. தற்சமயம் உலக அளவில் பொருளாதார
வீழ்ச்சி ஏற்பட்ட நிலையிலும் கூட வ.உ.சிதம்பரானார் துறைமுகப்பொறுப்புக்
கழகம் நடப்பு நிதியாண்டில் கடந்த நான்கு மாத கால அளவில் 9.54 மில்லியன் டன்
சரக்குகளைக் கையாண்டு கடந்த நிதியாண்டில் இதே கால அளவில் கையாண்ட சரக்கின்
அளவை விட 1 சதவீதம் கூடுதலாக கையாண்டுள்ளது. துறைமுகத்தில் அனல்மின்
கரி,தொழிற்சாலை கரி, திரவபெட்ரோலிய பொருட்கள், உரம் மற்றும் உரம்
தயாரிப்பதற்கான மூலப்பொருடகள், பயறு வகைகள், கச்சா சர்க்கரை , சமையல்
எண்ணெய், கட்டுமானத்திற்கு தேவையான சரக்குகள், இயந்திர தளவாடங்கள் உட்பட பல
சரக்குகள் கையாளப்படுகின்றன.
மத்திய அரசாங்கத்தின் ஒப்புதலுடன் துறைமுக நிர்வாகம் பல்வேறு திட்டப்பணிகளை
முக்கியமாக உள்ள துறைமுக விரிவாக்கத் திட்டத்தை போர்க்கால அடிப்படையில்
செயல்படுத்திவருகிறது. மேலும் வடக்கு சரக்கு தளம் 2 மற்றும் 3
கட்டுமானப்பணிகள் பொதுசரக்குகள் கையாள இரண்டு ஆழம் குறைந்த கப்பல் தளங்கள்
கட்டுதல் எட்டாவது கப்பல் தளத்தை சரக்கு பெட்டக தளமாக மாற்றுதல் போன்ற
பல்வேறு திட்டப் பணிகளை செயல்படுத்த துறைமுக நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார். தொடர்ந்து சென்ற கல்வியாண்டில் அதிக மதிப்பெண்கள்
மாணவ,மாணவியர்கள், மற்றும் மிகச்சிறப்பாக பணிபுரிந்த துறைமுக மற்றும்
துறைமுக சரக்கு கையாளும் பிரிவின் அலுவலர்கள் ஊழியர்கள் விளையாட்டு
வீரர்கள் மற்றும் மத்திய தொழில்பாதுகாப்பு படைவீரர்களுக்கு பரிசு வழங்கி
கௌரவித்தார். தொடர்ந்து பள்ளி மாணவ,மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகள்
நடந்தது. சுதந்திர தினவிழாவில் மாநகராட்சி மேயர் சிறப்பு விருந்தினராக
கலந்துகொண்டு பள்ளிமாணவ,மாணவியர்களுக்கு பரிசு வழங்கி பாராட்டினார்.