மயன்மார்
(பர்மா )நாட்டில் கிழக்கு பகுதியைசேர்ந்த கயின் மாநிலத்தில் உள்ள காட்டு குகையின் உட்புறத்தில் (7th century) 7ஆம் நூற்றாண்டு ஆரம்பத்தில் செதுக்கிய
தமிழ் கிரந்த எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட கல்வெட்டுக்கள்
மற்றும் தமிழர் கலைவடிவத்தில் பெருமாள் சிலைகள் கண்டுபிடிப்பு
Inscription in the(Grantha-Pallava) Tamil Script are found in Myanmar (Kougun Cave- Kayin State) from the beginning of 7th Century.Lord Vishnu with Aadi Sesha sculpture also found at Kougun Cave
Inscription in the(Grantha-Pallava) Tamil Script are found in Myanmar (Kougun Cave- Kayin State) from the beginning of 7th Century.Lord Vishnu with Aadi Sesha sculpture also found at Kougun Cave
கோபுரத்தின் இரகசியம்
ஊரில் கோயில் கோபுரமே உயரமாக இருக்க வேண்டும் என்பது ஏன்?
முற்காலத்தில் ஊரில் கோயில் கோபுரத்தை விட உயரமாக எந்தக் கட்டிடமும் இருக்கக் கூடாது என்று ஒரு எழுதாத சட்டம் இருந்தது. என்ன காரணம்?...
கோயில்களையும் உயரமான கோபுரங்களையும் அதன் மேல் இருக்கும் கலசங்களையும் பார்த்திருப்பீர்கள். அதன் பின் ஒளிந்திருக்கும் ஆன்மிக உண்மை தெரியவில்லை. ஆனால் அதன் பின் எவ்வளவு பெரிய அறிவியல் ஒளிந்திருக்கிறது என இப்போதுதான் தெரிகிறது.
கோபுரத்தின் உச்சியில் தங்கம், வெள்ளி செம்பு(அ) ஐம்பொன்னால் செய்யப்பட்ட கலசங்கள் இருக்கும். இக் கலசங்களிலும் அதில் கொட்டப்படும் தானியங்களும், உலோகங்களும் மின் காந்த அலைகளை ஈர்க்கும் சக்தியை கலசங்களுக்குக் கொடுக்கின்றன. நெல், உப்பு, கேழ்வரகு, தினை, வரகு, சோளம், மக்கா சோளம், சலமை, எள் ஆகியவற்றைக் கொட்டினார்கள். குறிப்பாக வரகு தானியத்தை அதிகமாகக் கொட்டினார்கள். காரணத்தைத் தேடிப் பார்த்தால் ஆச்சர்யமாக இருக்கிறது. வரகு மின்னலைத் தாங்கும் அதிக ஆற்றலைப் பெற்றிருப்பது என இப்போதைய அறிவியல் கூறுகிறது.
இவ்வளவுதானா? இல்லை, பன்னிரெண்டு வருடங்களுக்கு ஒரு முறை குட முழுக்கு விழா என்ற பெயரில் கலசங்களில் இருக்கும் பழைய தானியங்கள் நீக்கப்பட்டு புதிய தானியங்கள் நிரப்பப்படுகிறது. அதை இன்றைக்கு சம்பிரதாயமாகவே மட்டும் கடைபிடிக்கிறார்கள். காரணத்தைத் தேடினால், அந்த தானியங்களுக்குப் பன்னிரெண்டு வருடங்களுக்குத்தான் அந்த சக்தி இருக்கிறது. அதன் பின் அது செயல் இழந்து விடுகிறது!! இதை எப்படி அப்போது அறிந்திருந்தார்கள்? ஆச்சர்யம்தான்.
அவ்வளவுதானா அதுவும் இல்லை. இன்றைக்குப் பெய்வதைப் போன்று மூன்று நாட்களா மழை பெய்தது அன்று? தொடர்ந்து மூன்று மாதங்கள் பெய்தது. ஒரு வேளை தானியங்கள் அனைத்தும் நீரில் மூழ்கி அழிந்து போனால், மீண்டும் எதை வைத்துப் பயிர் செய்வது? இவ்வளவு உயரமான கோபுரத்தை நீர் சூழ வாய்ப்பில்லை. இதையே மீண்டும் எடுத்து விதைக்கலாமே!
ஒரு இடத்தில் எது மிக உயரமான இடத்தில் அமைந்த இடி தாங்கியோ அதுதான் முதலில் எர்த் ஆகும். மேலும் அது எத்தனை பேரைக் காப்பாற்றும் என்பது அதன் உயரத்தைப் பொறுத்தது. அடிப்படையில் கலசங்கள் இடிதாங்கிகள். உதாரணமாக கோபுரத்தின் உயரம் ஐம்பது மீட்டர் என்றால் நூறு மீட்டர் விட்டம் வரைக்கும் பரப்பில் எத்தனை பேர் இருந்தாலும் அவர்கள் இடி தாங்காமல் காக்கப்படுவார்கள். அதாவது சுமார் 75008 மீட்டர் பரப்பளவிலிருக்கும் மனிதர்கள் காப்பாற்றப்படுவார்கள்!
சில கோயில்களுக்கு நான்கு வாயில்கள் உள்ளன. அது நாலாபுறமும் 75000சதுர மீட்டர் பரப்பளவைக் காத்து நிற்கிறது! இது ஒரு தோராயமான கணக்கு தான். இதைவிட உயரமான கோபுரங்கள் இதை விட அதிகமான பணிகளை சத்தமில்லாமல் செய்து வருகின்றன.

பனை மரம்:
தென்னையை விதைத்தவன் தின்றுவிட்டுச் சாவான்.
பனையை விதைத்தவன் பார்த்துவிட்டுச் சாவான்.
இந்தப் பழமொழியைக் கூறியே, நம் மக்கள் பனை விதைப்பதைக் கைவிட்டு விட்டனர்.ஆனால் உண்மை என்னவெனில் தென்னையை விதைப்பவன் நிறைய தேங்காய் கலந்த உணவுப் பொருட்களைத் தின்றுவிட்டு உடலில் கொழுப்புச் சத்து அதிகமாகிச் சாவான். பனையை விதைப்பவனோ, அதனுடைய நற்பலனால் தன்னுடைய சந்ததியர் வளமாக வாழ்வதை பார்த்துவிட்டு சாவான் என்பதே உண்மை.
நம்நாட்டின் இயற்கைச் செல்வங்களுள் சிறப்பானது பனைச்செல்வம். இதை வற்றாத புதையல் என்றே கூறலாம். பனைமரத்தின் ஒவ்வொரு பாகமும் ஆதிகாலம் தொட்டே பயன்பட்டு வருவதால் பழங்கால மக்கள் பனையை கற்பத்தரு என போற்றினர். மகாராஷ்டிரா பல்கலை கழகத்தை சேர்ந்த பேராசிரியர், டாக்டர். மகாபல் என்பவர் பனைமர பாறைகளை (Fossiles) ஆராய்ந்து பனைமரங்கள் எத்தனையோ மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியிருக்க வேண்டும் என்று நிருபிக்கிறார்.பனை, ஒரு மரம் என்று பொதுவாக தமிழில்வழங்கப்படினும், தொல்காப்பியத்தில்குறித்துள்ளபட
பனைகள் பொதுவாகப் பயிரிடப்படுவதில்லை,இயற்கையிலே தானாகவே வளர்ந்து பெருகுகின்றன.இளம் பனைகள் வடலி என்று அழைக்கப்படுகின்றன.பனை வளர்ந்து முதிர்ச்சியடைவதற்கு 15 ஆண்டுகள் வரை எடுக்கும் எனக் கூறப்படுகிறது. அதன் வயது மனிதனின் சராசரி வயதிலும் கூடியது என்பது குறிப்பிடக்கூடியது. பனைகள் குறிப்பிடத்தக்க வளைவுகள் ஏதுமின்றிச் சுமார் 30 மீட்டர் உயரம் வரை வளரக்கூடியவை. கிளைகளும் கிடையா. இதன் உச்சியில்,கிட்டத்தட்ட 30 - 40 வரையான விசிறி வடிவ ஓலைகள்வட்டமாக அமைந்திருக்கும். இது எவ்விடத்தில் தோன்றியது என்பது சரியாகத் தெரியவில்லை.
பனை மரங்கள் 45டிகிரி வட அச்சரேகையிலிருந்து 45டிகிரி தென் அச்சரேகை வரையிலுள்ள வெப்பமண்டல பிரதேசங்களில் வளர்கிறது. இப்பிரதேசத்தை பனை வட்டம் (Palm Belt) என அழைக்கப்படுகிறது.இப்பிரதேசத்தி
தற்போது இந்தியாவில் மொத்தம் 8.59 கோடி பனைகள் இருப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. இவற்றில் 5.10 கோடி பனைகள் தமிழ்நாட்டிலேயே உள்ளது குறிப்பிடத்தக்கது.தமிழ் நாட்டில், கன்னியாகுமரி தொடக்கம்,திருநெல்வேலி, மதுரை போன்ற இடங்கள் உட்படச்சென்னை வரை பனைகள் காணப்படுகின்றன. மேலும் பனை மரம் தமிழ் நாட்டின் மாநில மரமும் ஆகும்,
பனை மரத்தின் பயன்கள்
"திணைத்துணை நன்றி செயினும் பனைத் துணையாக்
கொள்வார் பயன்தெரி வார்" - திருக்குறள்
என்ற நன்றியின் பயனோடு பனையின் பயனை ஒப்பிட்டு வள்ளூவர் கூறியதிலிருந்தே பனையின் மேம்பட்ட சிறப்பு தன்மை விளங்குகிறது.
இது முறையாகப் பயிரிடப்பட்டு வளர்க்கப்படும் ஒரு தாவரமாக இல்லாதிருப்பினும், இதிலிருந்து மக்கள் ஏராளமான பயன்களைப் பெறுகிறார்கள். இதன் நுனியிலிருந்து நிலத்தின் கீழுள்ள வேர் வரையிலும்,முளைவிட ஆரம்பித்ததிலிருந்து, வெட்டி வீழ்த்தப்பட்டபின்னரும் நெடுங்காலத்துக்குப்,பனைகளுக்கு
பனையிலிருந்து பலவகையான உணவுப் பொருள்களும்,உணவல்லாத வேறு முக்கியமான பொருட்களும் பெறப்படுகின்றன. முற்காலத்தில் பனையோலைகளே எழுதப்பயன்பட்டு வந்தன. இன்றும் பல பழைய நூல்களைப் பனையோலைச் சுவடிகள் வடிவிலே காணலாம். இவற்றைவிடக் கட்டிடங்களுக்கு வேண்டிய பல கட்டிடப்பொருட்கள், கைப்பணிப் பொருட்கள், மற்றும் தும்பு, நார் முதலியவற்றிலிருந்து செய்யப்படும் பல்வேறு பயன்படு பொருட்கள் என்பனவற்றையும் பனையிலிருந்து பெற முடியும். பொதுவாக, இது வளரும் இடங்களிலெல்லாம், வசதியற்ற ஏழை மக்களின் பொருளாதார நிலையுயர, அடித்தளமாக விளங்குகிறது.
பனைத்தொழில் அன்றும் இன்றும்:
இந்தியாவில் இனிப்பின் தேவை மிகவும் அவசியமானது.பல பண்டிகைகளிலும் இனிப்பு வழக்கப்ப்டுவது வாடிக்கை.முன்பு கரும்பு வெள்ளம், தென்னை, பனை கருப்பட்டி,முதலியவை இனிப்பிற்காக உபயோகபடுதப்பட்டது.தென்னிந்தியா
ஆங்கிலேயர் காலத்தில் முதன் முதலாய் பனை ஏறுபவர்களை கட்டுப்படுத்தும் விதமாக லைசென்ஸ் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. ஏனெனில் கிழக்கிந்திய கம்பெனியில் பியறுக்கு முக்கியத்துவம் ஏற்படுத்தவேண்டும் என்ற அடிப்படையில் லைசென்ஸ் முறை நடைமுறையில் இருந்தது.
அதேநேரம் ஆங்கிலேர்கள் வந்த பின் கரும்பிலிருந்து வெள்ளை சர்க்கரையை சுக்ரோஸ் சை பிரிதெடுத்து தேநீர்,கேக், முதலியவற்றிற்கு பயன்படுத்தும் பழக்கத்தை ஆரம்பித்து வைத்தனர். அத்துடன் வெள்ளை சர்க்கரை வாடை இல்லாமலும் இருந்தது. அதற்கென கரும்பிளிருக்கும் இரும்பு, செம்பு, முதலிய பல தாதுக்கைளை அகற்றப்பட்டது.
நாடு சுதந்திரமடைந்தபின், அரசின் தவறான கண்ணோட்டத்தின் விளைவாக கரும்பு உற்பத்தி, கரும்பு ஆலைகளின் நிர்மாணத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. இதனை தொடர்ந்து மிகப்பெரியபணப்பயிராக உருவெடுத்தது. இதனை காந்திய பொருளாதார மேதை ஜே.சி.குமரப்பா கடுமையாக எதிர்த்தார். மிகவும் வடிவமைக்கப்பட்ட தொழிச்சாளைகளாக உருவெடுத்தது கரும்பு - சர்க்கரை உற்பத்தி. கடந்த ஐம்பத்து வருடங்களில் இந்தியாவில் கரும்பின் பரப்பு இரண்டு மடங்காகவும், உற்பத்தி ஆறு மடங்காகவும் உயர்ந்துள்ளது. உலகில் பிரசிலுக்கு அடுத்து அதிகம் கரும்பு இந்தியாவில் உற்பத்தியாகிறது .இந்தியாவில் உத்திர பிரதேசம், மகாராஷ்டிராவிற்கு பிறகு தமிழகத்தில் அதிகம் கரும்பு உற்பத்தியாகிறது.
கரும்பு நீர் தேவை அதிகம் கொண்ட நீண்ட நாள் பயிர்.கரும்பிற்கு வணிக வரவேற்ப்பு இருப்பதால் விவசாயிகள் அனைவரும் நீரிலாதவர்கள் கூட ஆள் துளை கிணறுகள் தோண்டி கரும்பு உற்பத்தி செய்கின்றனர்.தென்னிந்தியாவில் கட்டுபாடட்ட்ற கரும்பு சாகுபடிநிலத்தடி நீரிணை கேள்விக்குறியாக்கியுள்ளது.கரும
பிரேசிலில் 16 % எரிபொருள் கரும்பின் "எத்தனால்"கொண்டு பெறப்படுகிறது. பிரேசிலில் நீருக்கு பஞ்சமில்லை. அமேசான் காடுகளில் பெய்யும் மழையே போதும் கரும்பு வளர. இங்கு அப்படியா? நிலத்தடி நீரை இரையாக்கினால் கரும்பு வளரும் கரும்பு வளர்ந்தால் எரிபொருள் தயாரிக்கலாம். எரிபொருள் தேவை என்பது பூர்த்தி செய்ய முடியாத ஒன்று. அதற்காக நாம் கரும்பை பயிரிட்டு வாழ்வாதாரங்களை காவு கொடுக்க வேண்டுமா?என்று சற்றே யோசிக்க வேண்டும். இன்றைய சந்தப்பவாத காசுக்காக, நிலையான செல்வங்களான நீர் நில வளங்களை, இழந்து விடக்கூடாது.
இன்று வெல்லத்தில் செய்யும் அதிரசம், எள்ளுருண்டை,கொழுக்கட்டை, போன்ற சமாச்சாரங்கள் மாறி வெள்ளை சர்க்கரையில் செய்த இனிப்புகள் சமூகத்தில் மேலோங்கின. இத்துடன் பால் உற்பத்தி தேசியமயமானபின் இந்தியாவில் பால் இனிப்பு வகைகள் பல்கி பெருகின. இன்று கரும்பின் வெள்ளை சர்க்கரையை உபயோகப்படுத்துவோர் 99 % ஆகும்.அதனால் தான் இன்றுஇந்தியாவே நீரிழிவு என்னும் சர்க்கரை வியாதியில்உலகில் முதலிடம் வகிக்கிறது. .
போதாகுறைக்கு கரும்பு ஆலைகள் மொலாசசிலிருந்துசாராயம் காய்ச்சி மக்களின் கெடுக்கும் அவலமும் இந்த கரும்பினால் ஏற்படுகிறது. அதுவும் குறிப்பாக தமிழகத்தில் கரும்பு சாராய வியாபாரம் அரசாங்கமே எடுத்து நடுத்தும் அவலம் கொடி கட்டி பறக்கிறது.
பனையேறிகள் வாழ்வும், தென்னை விவசாயமும் நலிந்து கரும்பினை கொண்டு வளர்க்கும் இந்த கலாச்சாரம் பல குடியினரது வாழ்வாதாரத்தை கெடுப்பதுடன், ஒட்டு மொத்த மனிதனின் வாழ்வாதாரத்தை கெடுக்கிறது என்பது ஐயமின்றி தெளிவாகிறது. பனைத்தொழிலை மிகவும் மோசமான நிலைக்கு தள்ளியதில் அரசின் தவறான வெள்ளை சர்க்கரைக்காதரவான கொள்கையே என்றால் மிகையில்லை.
தமிழகத்தில் பனைத்தொழில்:
தமிழுக்கும், தமிழர்களுக்கும் பனை மரங்கள் செய்த தொண்டு ஏராளம். ஆனால் தமிழைப் பாதுகாத்த பனை மரத்தை தமிழகமும், தமிழர்களும் பொருள்படுத்தாமல் இருப்பது நன்றி மறந்த செயலாகும். தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் (குறிப்பாக தென்மாவட்டங்களில்) பனை மரங்கள் களைச்செடியாகப் பரிதாபமாகக் காட்சி அளிப்பதைக் காண முடியும்.தமிழ்நாட்டில் மாநில மரமாக போற்றப்படும் பனை மரங்கள் தமிழ்நாடு முழுவதும் 10 லட்சம் மரங்கள் இருந்தன. தற் போது 30 சதவீத மரங்கள் அழிக்கப்பட்டுவிட்டன. பனை மரங்கள் விறகு உள்ளிட்ட தேவைகளுக்காக வெட்டப்படுவது தவிர்க்கப் பட வேண்டும்.
பனையேறும் தொழிலாளர்களின் இன்றைய நிலை:
கிராமப்புற தொழில்களில் மிக முக்கியமான தொழிலாய் உள்ள பனைத்தொழிலை ஊக்குவிக்க,பனைத்தொழிலாளர்களை பாதுகாக்க அரசு தகுந்த முயற்சியை எடுக்கவில்லை என்ற கருத்து பரவலாய் உள்ளது. தமிழகத்தில் உள்ள பனைகளில் 14% பனைகள் மட்டுமே தொழிலுக்கு பயன்படுத்தப்படுகிறது. உடல் உழைப்பையே நம்பியிருந்த 20-ம் நூற்றாண்டு மற்றும் அதற்கு முற்பட்ட காலங்களில் பனை ஏறுவதற்கு மனிதர்கள் பயன்படுத்தப்பட்டனர். பின்னர் ஏற்பட்ட இயந்திரப் புரட்சி காரணமாக அனைத்துத்துறைகளிலும் உடல் உழைப்பு குறைந்ததால், பனை ஏறும் தொழிலாளர்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துவிட்டது. பனைத்தொழிலில் ஈடுபடுவோரின் உழைப்பு அதிகம். ஆனால் அதற்கேற்ற ஊதியம் கிடைப்பதில்லை. இதனால் தொழிலாளர்களின் வாழ்க்கை நிலை கீழ் நோக்கியே போய்க்கொண்டிருக்கிறது.இத்தொழில
நவீன கண்டுபிடிப்புகளோ, இயந்திர கருவிகளோ பனைத்தொழிலில் புகுத்தப்படவில்லை. மாறாக 17ம் நூற்றாண்டில் பனைத்தொழில் நடைபெற்றதோ அவ்வாறுதான் இன்றும் நடைபெறுகிறது. அரசுத்துறை மற்றும் விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்பட்ட சில இயந்திரங்களும் பனை ஏறும் தொழிலுக்கு உகந்ததாக இல்லை.
பனைத்தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களை இரண்டு வகையினராய் பிரிக்கலாம். முதல்வகையினர் சொந்தமாய் பனைகளை வைத்துக்கொண்டு, சொந்த நிலத்தில் விவசாயம் செய்பவர்களை போல பனைத்தொழிலை செய்பவர்கள். இரண்டாம் வகையினர் பனைகளை குத்தகைக்கு எடுத்தோ, வார முறையிலோ பனைத்தொழிலை செய்து கொண்டிருப்பவர்கள்.மொத்தத்தில் இரண்டாம் தரப்பினரே தொழிலில் அதிகம்.அவர்களின் தினசரி சிக்கலே இன்றும் பனைத்தொழிலின் சிக்கலாய் உள்ளது. இவர்கள் நிலம் வைத்துள்ளவர்களிடம் கூடுதல் வட்டிக்கு வாங்கி பணத்தை கொண்டுதான் குத்தகைக்கு எடுக்கின்றனர். தொழில் நேரத்தில் கருப்பட்டியை பொருளாதார நெருக்கடி காரணமாக குறைந்த விலைக்கு விற்க வேண்டிய சூழலே நிலவுகிறது.
பனைத்தொழிலை மீட்டெடுக்க:
எனவே, பண்டைய தமிழ் இலக்கியங்களைப் பாதுகாத்து நம் தலைமுறைக்கு வழங்கிய பனை மரங்களை,வாழையடி வாழையாக வரும் நமது அடுத்த தலைமுறைகளும் பயன்படுத்தும் வகையில் பாதுகாப்பாக வளர்ப்பதுதான் பனை மரங்களுக்கு நாம் செய்யும் கைமாறு. மாநில மரம் என்ற வகையிலும்,தமிழின் வளர்ச்சிக்கு ஓலைச்சுவடியாக உதவியது என்ற வகையிலும் பனை மரங்களைப் பாதுகாப்பது தமிழக அரசின் முக்கிய கடமை.உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நெருங்கிவரும் நேரத்தில் பனை மரங்களைப் பாதுகாக்க தமிழக அரசு உறுதியான நடவடிக்கைகளை முடுக்கிவிடுவது அவசியம். பனை மரங்களில் எளிதில் ஏறி இறங்கும் வகையில் காலத்துக்கு உகந்த கருவிகளைக் கண்டுபிடிக்க வேளாண் விஞ்ஞானிகளை அறிவுறுத்துவது, பனையில் இருந்து கிடைக்கும் பொருள்களின் பயன்பாட்டை அதிகரிக்க தீவிர நடவடிக்கை எடுப்பதும் மிக மிக அவசியம். பனைப் பொருள்களை ஆர்வமாக வாங்கி அதைப் பயன்படுத்துவது ஒவ்வொரு தமிழனின் தலையாய கடமை.
ARUMUGANERI - YOUNG PIONEERS ASSOCIATION VICTORY CONTINUOUS......
RECENTLY TNPSC GROUP-4 EXAMS RESULT ANNOUNCED. SIX CANDIDATES FROM YPA COACHING CLASS CLEARED THIS EXAM.
I.RANIRAMBALA-UDANKUDI
2.ANNALAKSHMI-ARUMUGANERI
3.KARTHEESAN-UDANKUDI
4.ARUMUGASAMI-AUTHOOR
5.SUMITHRA-THOOPUR
6.MARIMUTHURAJAN-TIRCHENDUR
YPA CONGRTAULATE ALL. - SHARED BY JOHN KENNEDY- PRESIDENT YPA ARUMUGANERI
வெற்றிலை -அற்புதமான மருத்துவக்குணம் கொண்ட மூலிகை
பூ, பிஞ்சி, காய், கனி எதுவும் இல்லாமல் வெறும் இலை மட்டுமே வளர்வதால் இதை வெற்றிலை என்கிறார்கள்(வெற்று+ இலை).கிராமங்களில் சாப்பிட்ட பின் வாயில் போடுவது வெற்றிலை, வாயிலில் போடுவது வெற்று இலை(சாப்பிட்டு மிஞ்சிய வெற்று இலை) என்று சிலேடையாகச் சொல்வார்கள்.வெற்றிலையில் மூணு பு, மூணு கல் நீக்கி போடனும் என்று சொல்வார்கள். அதாவது, காம்பு, நரம்பு, விளிம்பு இது மூணு பு, அழுகல், வதங்கல், சுருங்கல் இது மூணு கல் இவைகள் இல்லாமல் வெற்றிலையைப் போட வேண்டும் என்பது மரபு.
வாரியார் சாமியிடம் ஒருவர் கேட்டாராம், சாமி சட்டை போடு, அங்கவஸ்திரம் போடு, உருத்ராட்ச மாலை போடு, செயின் போடு என்று சொல்கிறோம். சாப்பிடும் போது இட்லி சாப்பிடு, வடை சாப்பிடு, காபி சாப்பிடு, பாயாசம் சாப்பிடு, என்று சொல்கிறோம். ஆனால் சாப்பிட்ட பின் சாப்பிடும் வெற்றிலையை மட்டும் வெற்றிலையைப் போடு என்று ஏன் சொல்கிறார்கள் என்று கேட்டாராம். வாரியார் சாமி ஒரு நொடி யோசித்துவிட்டுச் சொன்னாராம், பசியாற்றுகின்ற உணவுப் பொருள்களை சாப்பிடுங்கள் என்று சொல்கிறோம். சாப்பிட்ட பின் அலங்காரத்திற்காக போடும் வெற்றிலையை போடுங்கள் என்று சொல்கிறோம் என்று சொன்னாராம். அந்த நபர் வாயடைத்துப் போனாராம். இது எடக்கு மடக்காக கேள்வி கேட்கிறவர்களை வாயடைக்க வைக்கச் சொன்ன அழகான சாமர்த்தியமான தமிழ் பேச்சு. ஆனால் உண்மையில் வெற்றிலை போடுவது ஜீரண சக்தியைத் தூண்டும் என்பதால்தான். மேலும் தாம்பத்யத்திலும்,வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு மருத்துவ ரீதியாக வேலை செய்கிறது. வெற்றிலை போடுபவர்களுக்கு எலும்பு நல்ல பலமாக இருக்கும். மேலும்,
தலையே வெடித்துவிடும் போலிருக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். ஐந்தாறு வெற்றிலையை மை போல அரைத்து நெற்றியில் பற்று போடுங்கள், கொஞ்ச நேரம் கண்மூடி ஓய்வெடுங்கள், தலைவலி பறந்துவிடும்.ஒரு ஸபூன் வெற்றிலைச்சாறு, ஒருஸபூன் தேன் கலந்து தினமும் இரண்டு வேளை சாப்பிட்டு வாருங்கள், நரம்புத் தளர்ச்சி, உடல் சோர்வு நீங்கும். வெற்றிலையில் சிறிது நல்லெண்ணெய் தடவி அனலில் வதக்கி பொருக்கக்கூடிய சூட்டில் குழந்தையின் மார்பில் போட்டால் குழந்தைகளுக்கு ஏற்படும் கோழை, இருமல், மூச்சு முட்டல் எல்லாம் ஓடிப் போய்விடும். கம்மாறு வெற்றிலையை அனலில் வாட்டி, சாறு பிழிந்து, கஸ்தூரி, கோரோசனை போன்றவைகள் சம்மந்தப்பட்ட மாத்திரைகளில் கலந்து கொடுக்க குழந்தைகள், பெரியவர் அனைவருக்கும் சீதளம் தொடர்பான துன்பங்கள் விரைவில் நீங்கும். ஆன்மீகத்திலும் வெற்றிலை இல்லாமல் எதுவும் நடை பெறாது. எனவே இதை வெற்றிலை என்பதைவிட வெற்றி இலை என்று சொல்வதே பொருந்தும்.
இளநீர்-இறைவனின் அற்புதப்படைப்பு
இவ்வுலகைப் படைத்த இறைவன் மனிதனை உயர்ந்த படைப்பினமாக்கி, மற்ற
பெரும்பாலான படைப்பினங்களை அவனது தேவைகளை நிறைவேற்றுவதாகவே அமைத்துள்ளான்.
இவ்வகையில் இறைவன் அளித்த அருட்கொடைகளில் ஒன்றான இளநீரைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.
இளநீர் என்பது இயற்கையிலேயே உருவான உடலியல் இயக்கங்களுக்கு இன்றியமையாத பல தாது உப்புகள் அதிகமாக உள்ள ஒரு பானம் (Isotonic Drink). இது உடலுக்குக் குளிர்ச்சியை அளித்து இரத்தத்தில் சேர வேண்டிய தாது உப்புக்களைச் சேர்த்து உடலின் செயல்திறனை ஊக்குவிக்கிறது.
இளநீர் இயற்கை அளித்த இனிய பானம் மட்டுமன்று; பல பிணிகளைத் தீர்க்கும் மாமருந்தாகவும் உள்ளது.
இருதயம், கல்லீரல், சிறுநீரகம், கண்கள் மற்றும இரத்த நாளங்களில் உஷ்ணம் ஆதிக்கம் அடையாமல் இருக்க உறுதுணையாகிறது. மூல நோய், நாட்பட்ட சீதபேதி, ரத்த பேதி, கருப்பை ரணம், குருதிப் போக்குக் காரணமாக வரும் இரத்த சோகை, உற்சாகமின்மை ஆகியவற்றிற்கு இளநீர் மிகச் சிறந்த நிவாரணம் அளிக்கின்றது.
பேதி, மயக்கம், அசதி ஏற்படும்போது டாக்டரிடம் செல்வதற்குமுன் இரண்டு குவளை இளநீர் அருந்துவது என்பது ஒரு பாட்டில் சலைன் ஏற்றுவதற்குச் சமமாகும். கடும் நீரிழப்பின் போது (severe dehydration) சரியான மாற்றுக் கிடைக்காத போது இளநீரையே நேரடியாக இரத்த நாளங்களில் ஏற்ற முடியுமாம்.
மே, ஜூன் ஆகிய இரு மாதங்களிலும் வெயில் தகிக்கும். அப்போது உடலிலிருந்து வியர்வை ஏராளமாக வெளியேறுவதால் நீர்க்கடுப்பு ஏற்படலாம். அப்போது இரண்டு குவளை இளநீர் பருகிட ஒரு மணி நேரத்திற்குள் சிறுநீர் தாராளமாகப் போகும். சிறுநீர்ப்பாதையில் சில நேரம் புண்ணாக இருந்தால் கிருமிகள் அதிகமாகி எரிச்சல், கடுப்பு உண்டாகும். அதற்கு இளநீரில் வெந்தயம் அரைக்கால் கரண்டி தூள் செய்து கலந்து பருகிவர ஐந்து நாட்களில் அவை நீங்கும்..
பெண்களின் மாதவிலக்கின் போது அடிவயிறு வலிக்கும். அதற்கு இளநீர் சிறந்த மருந்து. பேதி சீதபேதி, ரத்த பேதி ஆகும்போது மற்றெல்லா உணவுகளையும் தவிர்த்துவிட்டு உடனடியாக இளநீர் பருகிவர, உடல் அசதி, மயக்கம் வராது. சிறுநீரகக்கல், சதையடைப்பு, சிறுநீர்க்குழாய் பாதிப்பு (Urinary Infection), போன்ற கோளாறுகள் வந்துவிட்டால் முதல் மருந்தே இளநீர் தான்.
டைபாய்டு மலேரியா, மஞ்சள் காமாலை அம்மை நோய்கள் டிப்தீரியா நிமோனியா வாந்திபேதி வயிற்றுப்புண் மலச்சிக்கல் சிறுநீரகக் கோளாறுகள் போன்றவற்றால் பாதிக்கப்படும்போது இளநீரைத் தாராளமாகக் குடிக்க வேண்டும். அறுவை சிகிச்சைகளுக்குப் பின் திரவ உணவு மட்டுமே சாப்பிட வேண்டிய சமயங்களில் இளநீருக்கு முன்னுரிமை வழங்கி உபயோகித்தால் அறுவை சிகிக்சைப் புண் (Surgical Sore) விரைவில் குணமடையும்.
உணவு எளிதில் ஜீரணமாவதற்கு இளநீரில் உள்ள தாதுக்கள் பயன்படுவதால் செரிமான உறுப்புக் கோளாறுகளால் அவதிப்படும் குழந்தைகளுக்கு வாந்தி வரும்போது இளநீர் கொடுத்தால் வாந்தி கட்டுப்படும். நாக்கு வறட்சி நீங்கும்.
கோடைக்காலம் மட்டுமின்றி எல்லாக் காலங்களிலும் அருந்தக் கூடிய இனிப்பும் குளிர்ச்சியும் கொண்ட இளநீரை அருந்தி வந்தால் உடல் வளமை பெற்று நோயற்று, புண், ரணம் ஏதுமின்றி ஆரோக்கியத்துடன் வாழலாம்.
உடலுக்குக் கேடு தரும் பல்வேறு வேதிப்பொருட்களை உள்ளடக்கிய கார்பானிக் குளிர்பானங்கள் (Carbonated Drinks), பனிக்கூழ் (Ice cream) ஆகியவற்றை விட உடலுக்குப் பல மடங்கு நலம் தரும் இயற்கை பானமான இளநீரைப் பயன்படுத்துவதே ஆரோக்கியமான வழி.

தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியின் 308 வது கிளை
நமது தியாக பூமியான ஆறுமுகநேரியில் 27-02-2013 புதன் கிழமை காலை திறக்கப்பெற உள்ளது.
திரு.ஜி.ஸ்ரீனிவாசன் மூத்த உதவித்தலைவர் டி.சி.டபுள்ளூ புதிய கிளையைத் திறந்து வைக்கின்றார்.டாக்டர்.திருமதி ஜெ.ஜெயரத்தினா நல்லதம்பி குத்துவிளக்கு ஏற்றி வைக்கின்றார். திருஅ.கல்யாணசுந்தரம்,பேரூராட்சித் தலைவர், பாதுகாப்புப் பெட்டகத்தைத் திறந்து வைக்கின்றார்.
அருட் தந்தை. செல்வராஜ் ,கணினி சேவைத் துவக்கி வைக்கின்றார். திரு.எஸ்.ஆர்.செல்வராஜ் தொழிலதிபர் ரத்னா காலனி,439 வது ஏடி எம் இனைட்ந்திறந்து வைக்கின்றார்.
மண்ணின் மைந்தர் திரு எஸ்.செல்வன்ராஜதுரை பொது மேலாளர் வணிக வளர்ச்சித்துறை,முன்னிலை வகிக்கின்றார்.பொதுமக்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.
இந்திய சுதந்திரப்போராட்டத்தியாகிகள் மற்றும் வாரிசுகள் சங்கத்தலைவர் முனைவர் த.த.தவசிமுத்து சங்கத்தின் சார்பிலும்
தியாகபூமி ஆறுமுகநேரியின் சார்பிலும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றார்