குளோரின் கலக்காத குடிநீர் கொண்டு சென்ற 3 தனியார் தண்ணீர் லாரிகளை மாநகராட்சி அதிகாரிகள் பிடித்து அபராதம் விதித்தனர். தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் டெங்கு ஓழிப்பு மற்றும் தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வீடு வீடாக சென்று புகை மருந்து அடித்தல் உள்ளிட்ட முக்கிய பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கமிஷனர் உத்தரவின் பேரில் தூத்துக்குடி அரசு மருத்துவமனையின் உள் பகுதிகள், வார்டுகள், குறிப்பாக டெங்கு சிறப்பு வார்டுகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளிலும் நேற்று புகை மருந்து அடிக்கப்பட்டது. இப்பணிகளை உறைவிட மருத்துவ அதிகாரி மாநகராட்சி சுகாதார அதிகாரிகள் மேற்பார்வையிட்டனர். இதனை தொடர்ந்து தூத்துக்குடி 3 மைல் பகுதியில் ஊருக்கு வெளியே இருந்து தூத்துக்குடிக்கு லாரிகளில் குடிநீர் கொண்டு வரப்படுகிறது.
இதுபோன்று குடிநீர் கொண்டு வரப்படும் தனியார் லாரிகளை மாநகராட்சி சுகாதார துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது அவற்றில் 3 லாரிகளில் கொண்டு செல்லப்பட்ட லாரிகளில் உள்ள குடிநீரில் குளோரின் கலக்காமல் எடுத்து செல்லப்பட்டது தெரியவந்தது. இதனையடுத்து அதிகாரிகள் அந்த லாரிகளை மடக்கி பிடித்தனர். தொடர்ந்து அந்த லாரிகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
எண்ணுார் துறைமுகம் அருகே, இரு கப்பல்கள் மோதி ஜன., -28 இல்விபத்துக்குள்ளானது. அதில், 'டான் காஞ்சிபுரம்' கப்பலில் இருந்து, எண்ணெய் கசிவு ஏற்பட்டு, கடல்பகுதியில், பல கி.மீ., பாதிப்பு இருந்தது.கசிந்த கசடு எண்ணெயில், 80 சதவீதம், பாரதியார் நகர் கடற்கரை பகுதியில் கரை ஒதுங்கியது. அதை அகற்றும் பணியில், கடலோர காவல் படையினர் மற்றும் தமிழக அரசின் பல்வேறு துறைகள் ஈடுபட்டிருந்தன.
ஆரம்பத்தில், நவீன இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டும் பலனில்லை. பின், வேறு வழியின்றி, பக்கெட் கொண்டு, கசடு எண்ணெய் அகற்றும் பணி நடந்தது. முதலில் குறைந்த நபர்களே, எண்ணெய் அகற்றும் பணியில் ஈடுபட்டிந்தனர். நான்கு நாட்களில், ஏழு டன் கசடு எண்ணெய் மட்டுமே அகற்றப்பட்டது.ஐந்தாவது நாளான, பிப்., 1-ல் இருந்து, தன்னார்வலர்கள் மற்றும் கல்லுாரி மாணவர்கள் என, 500-க்கும் மேற்பட்டோர், ஒரே நேரத்தில் எண்ணெய் அகற்றும் பணியில் ஈடுபட்டனர். அதன் காரணமாக அன்று, ஒரு நாள் மட்டுமே, 45 டன்னுக்கும் அதிகமான எண்ணெய் அகற்றப்பட்டது.
அமைச்சர்கள், முதல்வர், என தமிழகத்தின் பல்வேறு தலைவர்களும் இங்கு முகாமிட, எண்ணெய் படலம் அகற்றம் பணியை காண, ஆயிரக்கணக்கான மக்கள் குவிய, அப்பகுதியே திருவிழா கோலம் பூண்டது.எண்ணெய் அகற்றத்தின் முடிவில், 200- டன்னுக்கும் அதிகமான எண்ணெய் அகற்றம் செய்யப்பட்டதை கண்டு, மீனவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பிப்., 20ல், பணிகள் ஏறக்குறைய முடிந்த நிலையில், ஊழியர்கள் கிளம்பி விட்டனர்.
பணிகள் முடிந்ததாக கருதிய நிலையில், பாறைகளில் உள்ள எண்ணெய் கழிவுகளை அகற்ற மும்பையில் இருந்து, 'விராஜ்' என்ற நிறுவனம், 'மேக்னா' என்னும் இயந்திரம் மூலம், சுடு தண்ணீரை பீய்ச்சி அடித்து சுத்தம் செய்யும் பணிகளை மேற்கொண்டு வந்தது.இந்நேரத்தில் தான், பாரதியார் நகர் அருகே, நேதாஜி நகர் கடல் பகுதியில், எண்ணெய் படலம் மிதக்க ஆரம்பித்தது.விடாமல் துரத்தும் எண்ணெய் படலத்தால், மீனவர்கள் பெரும் சோகத்தில் ஆழ்ந்தனர். அவை, பாறைகளில் படரவே, அதை அகற்றும் பணியும் தொடர்ந்து நடந்து வருகிறது.கடல் நீரில் மிதந்த எண்ணெயை அகற்றும் பணி, 20 நாட்களுக்குள் முடிந்து போனது. ஆனால், பாறைகளில் இருக்கும், எண்ணெய் கழிவுகளை அகற்ற, ஊழியர்கள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர்.
ஒரு மாதமாக, பாறைகளில் இருக்கும் எண்ணெய் கழிவுகளை அகற்றும் பணி மேற்கொண்டு வருகின்றனர். இன்னும் முடிந்த பாடில்லை. என்னதான், நவீன இயந்திரங்கள் கொண்டு, பாறைகளில் இருக்கும் எண்ணெய் கழிவுகளை அகற்றினாலும், கடற்கரையில் தடுப்புக்காக கொட்டபட்டுள்ள கற்கள், கறுப்பாகவே மாறி போயுள்ளது.
மீண்டும் நேற்று வரை, பாறைகளில் இருக்கும் எண்ணெய் கழிவுகளை அகற்றும் பணி நடந்து வருகிறது. அகற்றப்படும் எண்ணெய் கழிவுகள் வழிந்து, மீண்டும் கடலுக்கே செல்கிறது.அழகாக காட்சியளித்த கடற்கரை, எண்ணெய் கசிவால், அழுக்காக காட்சியளிக்கிறது. இனி எப்போது மீண்டும் இயல்பு நிலை திரும்பும் என, அப்பகுதியினர் வேதனை தெரிவிக்கின்றனர்.