ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» திருச்செந்தூர் » பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு நேற்றிரவு திடீரென்று உயர்த்தி உத்தரவிட்டுள்ளது.

Image result for பெட்ரோல் பல்க்

இந்த புதிய உத்தரவின்படி, வர்த்தக அடையாளம் இல்லாத சாதாரண பெட்ரோல் மீது முன்னர் விதிக்கப்பட்டிருந்த கலால் வரி லிட்டர் ஒன்றுக்கு ரூபாய் 5.46லிருந்து தற்போது ரூபாய் 7.06 ஆக உயர்ந்துள்ளது. 

இதன் அடிப்படையில் வர்த்தக அடையாளம் இல்லாத சாதாரண பெட்ரோல் பயன்படுத்துவோர் லிட்டர் ஒன்றுக்கு கூடுதலாக ரூபாய் 1.60 செலவிட வேண்டியிருக்கும். இதேபோல் வர்த்தக அடையாளம் இல்லாத சாதாரண டீசல் மீதான கலால் வரியும் லிட்டர் ஒன்றுக்கு 40 பைசா உயர்த்தப்பட்டுள்ளது. வர்த்தக அடையாளம் இல்லாத சாதாரண டீசல் மீது முன்னர் விதிக்கப்பட்டிருந்த கலால் வரி லிட்டர் ஒன்றுக்கு ரூபாய் 4.26லிருந்து தற்போது ரூபாய் 4.66 ஆக இருக்கும். வர்த்தக அடையாளம் கொண்ட பெட்ரோல் மீது முன்னர் விதிக்கப்பட்டிருந்த கலால் வரி லிட்டர் ஒன்றுக்கு ரூபாய் 6.64லிருந்து ரூபாய் 8.24 உயர்த்தப்பட்டுள்ளது. 

வர்த்தக அடையாளம் கொண்ட டீசல் மீது முன்னர் விதிக்கப்பட்டிருந்த கலால் வரி லிட்டர் ஒன்றுக்கு ரூபாய் 6.62லிருந்து ரூபாய் 7.02 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் இவ்வாண்டு ஜனவரி மாதம்வரை மத்திய அரசு பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியினை நான்கு முறை உயர்த்தியுள்ளது. 
Image result for பெட்ரோல் பல்க்
இவ்வகையில் மத்திய அரசுக்கு ஒரு லிட்டர் பெட்ரோல் விற்பனை மூலம் ரூபாய் 7.75 மற்றும் ஒரு லிட்டர் டீசல் விற்பனை மூலம் ரூபாய் 6.50 கலால் வரியாக கிடைத்து வருகிறது. இவ்வகையில் மட்டும் அரசுக்கு சுமார் 20 ஆயிரம் கோடி ரூபாய் கூடுதல் வருமானமாக கிடைத்துள்ளது. இந்த தொகையின் மூலம் மத்திய அரசின் நிதிப் பற்றாக்குறை ஈடு செய்யப்பட்டு வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments

Leave a Reply