ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» திருச்செந்தூர் » குரூப் 2 தேர்வுக்கு இலவசப் பயிற்சி வழங்கப்படும்: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை - தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) குரூப் 2 தேர்வுக்கு இலவசப் பயிற்சி அளிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
 இது குறித்து, வேலைவாய்ப்பு, பயிற்சித் துறையின் இயக்குநர் சி.சமயமூர்த்தி வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: 
 குரூப் 2 பிரிவில் 1,947 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு விண்ணப்பிக்க நவம்பர் 11-ஆம் தேதி கடைசி நாளாகும். 
 தேர்வுக்காக அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களிலும் இலவச பயிற்சி வகுப்புகள் சிறந்த வல்லுநர்களைக் கொண்டு நடத்தப்பட உள்ளன. 
 இதில், முந்தைய தேர்வுகளின் மாதிரி வினாத்தாள்கள், பாடக் குறிப்புகள் வழங்கப்படும். மேலும், வாரம் ஒருமுறை தேர்வு, மாதிரித் தேர்வுகளும் நடத்தப்பட உள்ளன. 
 இதில், சேர விரும்பும் இளைஞர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரில் அணுகி விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 comments

Leave a Reply