துாத்துக்குடி ரயில் நிலையத்தில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி ரயில் பயணிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்திற்கு வழக்கறிஞர் அதிசயகுமார் தலைமை வகித்தார் டிஜே. கார்த்திகேயன் முன்னிலை வகித்தனர். வழக்கறிஞர்கள் ராபின் சித்திரஞ்சன், ராஜேந்திரன், மாடசாமி, செந்தில்குமார், சக்திகனி மற்றும் உபேந்திரா பாண்டியன், ஜெயக்குமார், ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் துாத்துக்குடி ரயில் நிலையத்தில் பயணிகளுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதி செய்து தரக்கோரியும், கழிவறையை சுத்தமாக வைக்கக்கோரியும், மூடப்பட்டிருக்கும் ரயில்வே கேன்டீனை திறக்கக் கோரியும், ரயில் பெட்டிகளில் இருக்கும் மூட்டைப்பூச்சி, எலி தொல்லைகளிலிருந்து பயணிகளை காப்பாற்றக் கோரியும் தமிழ் மற்றும் இந்தி மாெழிகளில் கோஷங்களை எழுப்பினர்.
0 comments