தூத்துக்குடி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக சாலைகள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. இந்த தொடர் மழையினால் 25 வீடுகள் இடிந்தன.
வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை காரணாக தூத்துக்குடி மாவட்டத்தில் வியாழக்கிழமை முதல் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் திருச்செந்தூர், காயல்பட்டினம், உடன்குடி உள்ளிட்ட பகுதிகளில் சனிக்கிழமையும் மழை பெய்தது. தூத்துக்குடி, ஓட்டப்பிடாரம் உள்ளிட்ட பகுதிகளில் மழை சற்று குறைந்து காணப்பட்டது. பல இடங்களில் தேங்கியுள்ள மழைநீரால் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர்.
ஆறுமுகனேரி-காயல்பட்டினத்தில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு: ஆறுமுகனேரி மற்றும் காயல்பட்டினத்தில் நீடித்து வரும் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிப்படைந்துள்ளது. இப்பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு முதல் சனிக்கிழமை காலை வரை மழை கொட்டித் தீர்த்தது. இதனால், காயல்பட்டினம் நகராட்சி, ஆறுமுகனேரி பேரூராட்சி பகுதிகளில் தாழ்வான இடங்களை மழை நீர் குளம்போல் சூழ்ந்துள்ளது.
அந்த தண்ணீரை வடியச் செய்யும் முயற்சிகளில் எவ்விதப் பலனும் கிடைக்கவில்லை. ஊழியர்கள் பற்றாக்குறையாலும், மழை ஓயாததாலும் இந்நிலை பணிகள் தாமதமாகி வருவதாகக் கூறப்படுகிறது. காயல்பட்டினத்தில் புறநகர்ப் பகுதியில் காட்டாற்று வெள்ளம் போல் நீர் தேங்கியுள்ளது. வியாழக்கிழமை இரவு ஆறுமுகனேரியில் மட்டும் 16 வீடுகள் இடிந்திருந்தன. இந்நிலையில், வெள்ளிக்கிழமை இரவு ஆறுமுகனேரியில் 21 வீடுகளும், காயல் பட்டினத்தில் 4 வீடுகளும் இடிந்தன.
அதன் விவரம்: காயல்பட்டினத்தில் கோமான்புதூர், காட்டுதைக்காதெரு, குலாம் சாகிபு தம்பி தோட்டம் மற்றும் பூந்தோட்டம் ஆகியவற்றில் தலா ஒரு வீடு இடிந்தது.
ஆறுமுகனேரி பேரூராட்சியில் அடைக்கலாபுரத்தில் 4 வீடுகளும், கீழநவ்வலடிவிளை, பாரதி நகரில் தலா 2 வீடுகளும், பேயன்விளை, புதூர், காணியாளர் தெரு, சுப்பிரமணிய சுவாமி கோவில் தெரு, சண்முகபுரம் கீழத்தெரு, செல்வராஜபுரம், குத்துக்கல் சுவாமி கோவில் தெரு, காமராஜபுரம், ராணிமகராஜபுரம், வன்னிமாநகரம், வடக்கு சுப்பிரமணியபுரம், தெற்கு சுப்பிரமணியபுரம் ஆகிய இடங்களில் தலா ஒரு வீடும் இடிந்தன. அனைத்து வீட்டு உரிமையாளர்களுக்கும் நிவாரணத் தொகை வழங்க வருவாய் துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை இரவு முதல் சனிக்கிழமை காலை 8 மணி வரை, 454 மி.மீ. மழை பதிவானது. மாவட்டத்தில் சராசரியாக 23 மி.மீ. பதிவானது. மாவட்டத்தில் அதிகபட்சமாக சாத்தான்குளத்தில் 67 மி.மீ. மழை பதிவானது. காயல்பட்டினத்தில் 63 மி.மீ., குலசேகரன்பட்டினத்தில் 55 மி.மீ, கடம்பூரில் 29 மி.மீ., ஸ்ரீவைகுண்டம், ஓட்டப்பிடாரம் பகுதியில் 28 மி.மீ., தூத்துக்குடியில் 24 மி.மீ., கீழஅரசடி, வைப்பாறு பகுதியில் 20 மி.மீ. மழை பதிவானது.
உங்கள் தீபாவளி கொண்டாட்டத்தை மேலும் சிறப்பிக்க நமது ஆறுமுகநேரி இணையத்தளத்தின் புதிய முயற்ச்சி.
"நானும் என் பட்டாசும்" - என்ற தலைப்பில் நீங்கள் வாங்கிய பட்டாசுடன் செல்பி(Selfie) அல்லது பட்டாசு வெடிக்கும் புகைப்படத்தை இந்த பக்கத்தில் பதிவேற்றம்(Upload) செய்யுங்கள்.
பதிவேற்றம் செய்யும் கால அவகாசம் - 19-10-2014 to 23-10-2014
அதில் சிறந்த முறையில் எடுக்கும் புகைப்படத்துக்கு திபாவளி பரிசாக ரூ.100 ரீசார்ஜ் வழங்கப்படும்.
Note : The result will be announced by 23-10-2014 in our Thiygaboomi Arumuganeri Facebook Page.
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது. இதில், லட்சக்கணக்கான பக்தர்கள் கடலில் புனித நீராடி, சுவாமி தரிசனம் செய்தனர்.
இக் கோயிலில், முருகப் பெருமானின் ஜென்ம நட்சத்திர திருவிழாவான வைகாசி விசாகத் திருவிழா, வசந்த விழாவாக இம் மாதம் 2ஆம் தேதி தொடங்கி, 10 நாள்கள் நடைபெற்றது. நாள்தோறும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
நிறைவு நாளான புதன்கிழமை வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு கோயில் நடை அதிகாலை 1 மணிக்கு திறக்கப்பட்டது. தொடர்ந்து, விஸ்வரூப தரிசனம், உதயமார்த்தாண்ட அபிஷேகம், காலை 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம், மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடைபெற்றது.
பின்னர், சுவாமி ஜெயந்திநாதர் தங்கச் சப்பரத்தில் வசந்த மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு வைகாசி விசாகத்தின் முக்கிய நிகழ்வான முனிக் குமாரர்களுக்கு சாப விமோசனம் அளிக்கும் வைபவம் நடைபெற்றது.
அதைத் தொடர்ந்து சுவாமி கிரிவீதி வலம் வந்து கோயில் சேர்ந்தார். இதையடுத்து திருவிழா நிறைவடைந்தது.
திருவிழாவையொட்டி, சில நாள்களாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து பக்தர்கள் விரதமிருந்தும், பாதயாத்திரையாகவும் இங்கு வந்தனர். இதனால் புதன்கிழமை கோயில் வளாகம் பக்தர் கூட்டத்தால் நிரம்பிவழிந்தது. மேலும், பக்தர்கள் அதிகாலைமுதலே கடலில் புனித நீராடியதால் கடற்கரையிலும் மக்கள் வெள்ளம் காணப்பட்டது.
பக்தர்கள் காவடி- பால்குடம் எடுத்துவந்தும், அலகு குத்தியும், அங்கப் பிரதட்சிணம் செய்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
கூட்ட நெரிசலால் கோயில் வளாகம், கடற்கரை உள்ளிட்ட இடங்களில், பக்தர்கள் தாங்களே தேங்காய் உடைத்து, பூஜை செய்து சுவாமியை வழிபட்டனர்.
பாதுகாப்புப் பணியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் துரை உத்தரவின் பேரில், திருச்செந்தூர் காவல் துணை கண்காணிப்பாளர் செü. கோவிந்தராஜ், இன்ஸ்பெக்டர்கள் கோ. பத்மநாபபிள்ளை, சு. இந்திரா உள்ளிட்ட காவல் துறையினரும், தீயணைப்பு, ஊர்க்காவல் படையினரும் ஈடுபட்டனர்.
பக்தர்களுக்கு குடிநீர் வழங்குதல், வரிசையை ஒழுங்குபடுத்துதல் உள்ளிட்ட பணிகளில் தூத்துக்குடியைச் சேர்ந்த மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கத்தினர், அகில பாரத அய்யப்ப சேவா சங்கத்தினர் ஈடுபட்டனர்.
பக்தர்கள் வசதிக்காக பல்வேறு வழித்தடங்களிலிருந்து கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.
ஏற்பாடுகளை கோயில் தக்கார் ப.தா. கோட்டை மணிகண்டன், இணை ஆணையர் (பொறுப்பு) இரா. ஞானசேகர், அலுவலகக் கண்காணிப்பாளர் மூ. பாலு, கோயில் பணியாளர்கள் செய்தனர்.
Courtesy : Dinamani.com
திமுக தலைவர் கருணாநிதி பிறந்த தின விழா செவ்வாய்க்கிழமை ஆறுமுகனேரியில் கொண்டாடப்பட்டது.
ஆறுமுகனேரி செல்வராஜபுரம், வடக்கு பஜார், மெயின் பஜார் மற்றும் பாரத ஸ்டேட் வங்கி கிளை அருகில் திமுக கட்சிக் கொடியேற்றப்பட்டது.
நிகழ்ச்சிக்கு திருச்செந்தூர் ஒன்றிய திமுக செயலர் ஏ.பி.ரமேஷ் தலைமை வகித்தார். நகரச் செயலர் ராஜசேகர் மற்றும் ஆறுமுகனேரி தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத் தலைவர் கா.ராகவன் ஆகியோர் முன்னிலை வகித்தார். பேரூராட்சித் தலைவர் அ.கல்யாணசுந்தரம் கொடியேற்றி வைத்து இனிப்பு வழங்கினார்.
மாவட்டப் பிரதிநிதிகள் பாலன், முருகேசன், ஒன்றிய பிரதிநிதி ரவி, நகரப் பொருளாளர் வரதராஜன், எலிசா, விநாயகம் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
திருச்செந்தூரில் அதிமுக அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்துக்கு ஒன்றியச் செயலர் அமலி டி.ராஜன் தலைமை வகித்தார். பேரூராட்சித் தலைவர் மு.சுரேஷ்பாபு, மாவட்டப் பொருளாளர் எம்.ஜெபமாலை, மாவட்ட ஜெயலலிதா பேரவை இணைச் செயலர் மு.ராமச்சந்திரன், மாவட்ட வழக்குரைஞரணி துணைத் தலைவர் ஜெ.திலீப்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் திரைப்பட நடிகர் குண்டுகல்யாணம் பேசினார். கூட்டத்தில் ஒன்றியப் பொருளாளர் தனசேகரன், ஒன்றிய அவைத்தலைவர் ஜெஸ்லர், கூட்டுறவு சங்கத்தலைவர்கள் கு.முருகேசன், பூந்தோட்டம் பி.மனோகரன், தேவராஜ், நகர துணைச்செயலர் சங்கரன், வழக்குரைஞர்கள் ரவிச்சந்திரன், சரவணன், அர்ச்சுணன்யாதவ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். முன்னதாக நகரச் செயலர் வி.எம்.மகேந்திரன் வரவேற்றார். மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் மு.வடிவேல் நன்றி கூறினார்.
வைகாசி விசாகத் திருவிழா ஏற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை (ஜூன்3) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறுகிறது.
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் இம்மாதம் 11 ஆம் தேதி வைகாசி விசாகத் திருவிழா நடைபெறுகிறது.
விழாவுக்கு வருகைதரும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்த முன்னேற்பாடுகள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் செவ்வாய்க்கிழமை காலை 11.30 மணிக்கு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறுகிறது. கூட்டத்தில் பல்வேறு துறை அரசு அதிகாரிகள் பங்கேற்பதால் பக்தர்கள் கலந்து கொண்டு தங்கள் ஆலோசனைகளை வழங்கினால் அது குறித்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பார்கள் என ஆட்சியர் அலுவலக செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Source : http://tamil.oneindia.in/news/tamilnadu/gun-found-near-bank-202540.html
Source : http://tamil.oneindia.in/news/tamilnadu/man-beat-batter-spoon-202680.html
மடிக்கணினி பற்றாக்குறையால் மடிக்கணினி வைத்துள்ள பொறியியல் மாணவர்களை தேர்தலில் பணியாற்ற மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பொறியியல் கல்லூரியில் 2-ம் மற்றும் 3-ம் ஆண்டு பயிலும் மாணவர்களை மக்களவைத் தேர்தலில் வெப் கேமரா மூலம் பதிவு செய்யும் வாய்ப்பு அளிக்க மாவட்ட நிர்வாகம் முடிவு எடுத்துள்ளது.
இதுதொடர்பாக, மாவட்டத்தில் உள்ள பொறியியல் கல்லூரி முதல்வர்கள் மற்றும் தாளாளர்கள் கலந்து கொண்ட கூட்டம் மாவட்ட ஆட்சியர் ம. ரவிக்குமார் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைப்பெற்றது.
இதில், ஆட்சியர் பேசுகையில், மக்களவைத் தேர்தலன்று வாக்குச்சாவடி மையங்களில் வெப் கேமரா மூலம் இந்திய திருநாட்டில் எங்கு இருந்தாலும் அங்கேயே இருந்து வாக்கு மையங்களை நேரடியாக பொதுமக்கள் பார்த்துக் கொள்ளும் வகையில் அதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்து வருகிறது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்கு மையங்கள் இருப்பதால் அனைத்து மையங்களுக்கும் தேவையான மடிக்கணினி தற்போது இல்லை. அதனால் மடிக்கணினி வைத்துள்ள அதை பயன்படுத்தக் கூடிய மாணவர்களுக்கு வாய்ப்பு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த அரிய வாய்ப்புகளை மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் இவர்களுக்கு தேர்தல் ஆணையம் அனுமதிக்கும் மதிப்பூதியமும் வழங்கப்படும் என்றார் ஆட்சியர்.
Courtesy: Dinamani.com
ஆறுமுகநேரி மெயின் பஜாரில் அ.தி.மு.க வேட்பாளரை ஆதரித்து நடிகர் ராமராஜன் பிரசாரம் செய்தார். இந்நிலையில் பிரசாரம் செய்ய அனுமதி பெறாததால் பறக்கும் படை அதிகாரி ஆழ்வார், ஆழ்வார்திருநகரி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் காயல்பட்டிணம் வந்த இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மாநில தலைவர் காதர் முகைதீனை வரவேற்று டிஜிட்டல் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தது. அதற்கு அனுமதி பெறாததால் அக்கட்சியை சேர்ந்த வாவு நாசர், அபு சாலிக் மீது ஆறுமுகநேரி போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
Courtesy : Maalaimalar.com
காயல்பட்டினம் வாவு வஜீஹா மகளிர் கல்லூரி மாணவியர் வாக்காளர்களிடத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் செவ்வாய்க்கிழமை மனிதச் சங்கிலி நடத்தினர்.
தேர்தலில் வாக்களிக்க பொதுமக்களுக்கு விழிப்புணர்வூட்டும் நோக்குடன், நடைபெற்ற இம் மனிதச் சங்கிலி நிகழ்ச்சி காயல்பட்டினம் மகாத்மா காந்தி ஞாபகார்த்த வளைவில் தொடங்கி, தைக்கா பஜார் வழியாக ஹாஜியப்பா தைக்கா பள்ளி வரை நடைபெற்றது. இச்சாலைகளின் இரு ஓரங்களிலும் மாணவியர் கைகோர்த்து நின்றனர்.
கல்லூரியின் நிறுவன தலைவர் வாவு எஸ்.செய்யித் அப்துர்ரஹ்மான் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் ஜெ.பெல்லா சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டார்.
அவருடன், திருச்செந்தூர் கோட்டாட்சியர் மு.தமிழ்ராஜ், வட்டாட்சியர் நல்லசிவன், வருவாய் ஆய்வாளர் வசந்தி, காயல்பட்டினம் தென்பாகம் கிராம நிர்வாக அலுவலர் வைரமுத்து, நகராட்சி ஆணையர் ம.காந்திராஜ், சுகாதார ஆய்வாளர் எஸ்.பொன்வேல்ராஜ், வாவு வஜீஹா மகளிர் கல்லூரியின் துணைச் செயலர் வாவு எஸ்.ஏ.ஆர்.அஹ்மத் இஸ்ஹாக், முதல்வர் முனைவர் சசிகலா ஆகியோரும் கலந்துகொண்டனர்.பொதுமக்களை வாக்களிக்கத் தூண்டும் வாசகங்கள் அடங்கிய பதாகைகளையும் மாணவியர் கையில் ஏந்தியிருந்தனர்.
Courtesy : Dinamani.com
சாகுபுரம் டிசிடபிள்யூ நிறுவனத்தில் 43 ஆவது பாதுகாப்பு வார விழா நடைபெற்றது.
தொடக்க நாள் விழாவில், நிர்வாக உதவித்தலைவர் (பணியகம்) ஆர்.ஜெயகுமார் கலந்துகொண்டு பாதுகாப்பு கொடியேற்றினார். அலுவலர்கள் மற்றும் தொழிலாளர்கள் பாதுகாப்பு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
நிறைவு நாள் விழாவுக்கு, நிர்வாக உதவித்தலைவர் (பணியகம்) ஆர்.ஜெயக்குமார் தலைமை வகித்தார். மதுரை தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் கூடுதல் இயக்குநர் வி.தங்கராஜ் மற்றும் தூத்துக்குடி இணை இயக்குநர் அப்பாவு சாம்ராஜ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர். மனிதவள பொதுமேலாளர் ஆர்.பசுபதி சிறப்பு விருந்தினர்களை அறிமுகம் செய்துவைத்தார். கவிதை, விநாடி-வினா, பட்டிமன்றம் மற்றும் பாதுகாப்பு தொடர்பாக நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
நிர்வாக உதவித்தலைவர் (குளோர் அல்கலி) சுபாஷ் டாண்டன் வரவேற்றார். பாதுகாப்பு ஆண்டறிக்கையை பாதுகாப்பு மேலாளர் எஸ்.ராஜா சங்கர் சமர்ப்பித்தார். இறுதியில் விழாவில் கலந்து கொண்ட அனைவரும் மரக்கன்றுகளை நட்டினர். நிகழ்ச்சியில், ஸ்பிக், ஸ்டெர்லைட் உள்ளிட்ட தொழிற்சாலைகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
Courtesy: Dinamani.com
தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் மாதம் 24–ந்தேதி நடக்கிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் உடனடியாக தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது.
நெல்லை மாவட்ட கலெக்டரும், தேர்தல் அதிகாரியுமான கருணாகரன் தேர்தல் விதிமுறைகளை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க எச்சரித்துள்ளார். மேலும் தாசில்தார்கள் தலைமையில் பறக்கும் படை அமைத்து அரசியல் கட்சியினரை கண்காணிக்க உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில் திருச்செந்தூர் கோவில் அருகே உள்ள ஒரு மடத்தில் தனியார் டிரஸ்ட் சார்பில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. இதில் கலந்து கொண்ட 1500க்கும் மேற்பட்ட பெண்களுக்கு இலவசமாக சேலைகள் வழங்கப்பட இருந்தது.
இது குறித்து தகவல் அறிந்த திருச்செந்தூர் தாசில்தார் செல்வபிரசாத், ஆர்.டி.ஓ. தமிழ்ராஜன் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இலவசமாக பெண்களுக்கு கொடுக்கப்பட இருந்த 1500 சேலைகள் வழங்குவதை தடுத்து நிறுத்தினர்.
அப்போது அந்த தனியார் டிரஸ்ட்டை சேர்ந்தவர்கள் அதிகாரிகளிடம் நாங்கள் வழக்கமாக மகளிர் தினத்தன்று பெண்களுக்கு இலவச சேலைகள் வழங்குவோம் .அதை எப்படி தடுக்கலாம் என வாக்குவாதம் செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
உடனே தாசில்தார் செல்வபிரசாத், ஆர்.டி.ஓ. தமிழ்ராஜன் ஆகியோர் டிரஸ்ட் நிர்வாகிகளுடன் இலவச சேலைகள் கொடுப்பது குறித்து கலெக்டரிடம் முறையாக அனுமதி வாங்கி வழங்குங்கள் என்றனர். இதையடுத்து பெண்களுக்கு வழங்கப்பட இருந்த சேலைகளை பறிமுதல் செய்து எடுத்து சென்றனர்.
Courtesy: Maalaimalar.com
திருச்செந்தூரில் கால்நடைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
முகாமிற்கு திருச்செந்தூர் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்க ஒன்றியத்தலைவர் அ.கோவிந்தன் தலைமை வகித்தார். ஆவின் நிறுவன மேலாளர் தங்கையா முன்னிலை வகித்தார். மருத்துவக்குழுவினர் கால்நடைகளை பரிசோதனை செய்து சிகிச்சை அளித்தனர். நிகழ்ச்சியில் நகர கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்க நிர்வாகிகள் ஆறுமுகம், எஸ்.முத்துகிருஷ்ணன், சி.சேகர், டி.காசி, கோபால், பட்டாணி, எஸ்.சுப்பையா, குருசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். பால்வளத்துறை மேலாளர் கலைச்செல்வி நன்றி கூறினார்.
Courtesy: Dinamani.com
தமிழக முதல்வர் 66ஆவது பிறந்த நாளை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட அளிவில் சப் ஜுனியர் பிரிவிலான சிலம்பப் போட்டி தூத்துக்குடியில் நடந்தது. இதில் கலந்து கொண்ட ஆறுமுகனேரி கா.ஆ. மேல்நிலைப் பள்ளி 8 ஆம் வகுப்பு மாணவர் பாலசுப்பிரமணியன் முதலிடம் பெற்று மாநில அளவிலான போட்டிக்குத் தகுதி பெற்றார். இதனையடுத்து சென்னையில் நடந்த மாநில அளவிலான போட்டியில் கலந்து கொண்ட மாணவர் மாநில அளவில் 3 ஆவது இடம் பெற்று சாதனை படைத்துள்ளார்.
இவருக்கு பள்ளியில் நடந்த பாராட்டு விழாவிற்கு பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் எல்.ராஜாமணி தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் பாண்டியராஜன் வரவேற்றார். சிலம்பம் பயிற்சியாளர் ஸ்டீபன், உடற்கல்வி இயக்குநர் விஜயசிங், உடற்பயிற்சி ஆசிரியர் அரிராமசந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆசிரியர் கண்ணன் நன்றி கூறினார்.
Courtesy: Dinamani.com
திருச்செந்தூர் - தூத்துக்குடி சாலையில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு எதிரில் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் 366-வது புதிய கிளை திறக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு வங்கியின் நிர்வாக இயக்குநர் நாகேந்திரமூர்த்தி தலைமை வகித்தார். பொது மேலாளர் செல்வன்ராஜதுரை முன்னிலை வகித்தார்.
புதிய கிளையினை பிஜி மருத்துவமனை நிறுவனர் மருத்துவர் அ.ராமமூர்த்தி திறந்து வைத்தார். தொடர்ந்து திருச்செந்தூர் கோவிந்தம்மாள் ஆதித்ததனார் மகளிர் கல்லூரி முதல்வர் ஜெ.ஜெயந்தி குத்துவிளக்கேற்றினார். பாதுகாப்பு பெட்டகத்தை பழனி ஹோட்டல் கண்பத் நிர்வாக இயக்குநர் நா.ஹரிஹரமுத்து அய்யரும், கணினி சேவையை திருச்செந்தூர் பேரூராட்சித்தலைவர் மு.சுரேஷ்பாபுவும், புதிய 624-வது ஏடிஎம் சேவையை வங்கி முன்னாள் இயக்குநர் பரமன்குறிச்சி தொழிலதிபர் சத்தியசீலன் ஆகியோரும் திறந்து வைத்தனர்.
நிகழ்ச்சியில் உதவிப் பொது மேலாளர் கிருஷ்ணகுமார், மகளிர் கல்லூரிச் செயலர் கி.தாண்டேஸ்வரன், தொழிலதிபர் ஆர்.ராமகிருஷ்ணன், பொறியாளர் கி.நாராயணன், காங்கிரஸ் மாவட்டச்செயலர் நா.லோகநாதன், தொழிலதிபர் மூக்கன், தேவஸ்தான பிரசாத ஸ்டால் நா.ராமன், அர்ச்சனா ஓட்டல் கிட்டன், உள்பட பலர் கலந்து கொண்டனர். மண்டல மேலாளர் போஸ் வரவேற்றார். கிளை மேலாளர் கணேஷ்குமார் நன்றி கூறினார்.
Courtesy: dinamani.com
திருச்செந்தூரில் மக்களவைத் தேர்தலை முன்னிட்டு வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான பயிற்சி முகாம் தொடங்கியது.
திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் வாக்குச் சாவடி அலுவலர்களுக்கான பயிற்சி முகாம் புதன்கிழமை தொடங்கியது. நிகழ்ச்சிக்கு திருச்செந்தூர் கோட்டாட்சியர் மு.தமிழ்ராஜன் தலைமை வகித்தார். வட்டாட்சியர் ப.நல்லசிவம் முன்னிலை வகித்தார். திருச்செந்தூர் வட்டத்தைச் சேர்ந்த 553 ஆசிரியர்கள் பயிற்சியில் கலந்து கொள்கின்றனர். புதன்கிழமை தொடங்கிய பயற்சி வெள்ளிக்கிழமை வரை நடைபெறுகிறது.
தொடக்க நாளில் மண்டல அலுவலர்களான தூத்துக்குடி மாநகராட்சி நிலவரி திட்ட வட்டாட்சியர் வள்ளிக்கண்ணு, தேர்தல் துணை வட்டாட்சியர் மலர்தேவன், மண்டல துணை வட்டாட்சியர் கோபாலகிருஷ்ணன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாலசுப்பிரமணியன், சுடலை உள்ளிட்டோர் அலுவலர்களுக்கு வாக்குப்பதிவு இயந்திரத்தை கையாளுவது, அமைதியான முறையில் தேர்தலை நடத்துவது உள்ளிட்டவை குறித்து பயிற்சியளித்தனர்.
கோவில்பட்டி: கோவில்பட்டி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட வாக்குச்சாவடி மைய அலுவலர்களுக்கான முதல் கட்ட பயிற்சி முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கோவில்பட்டி வ.உ.சி. அரசு மேல்நிலைப் பள்ளியில் வாக்குச்சாவடி தலைமை அலுவலர் மற்றும் வாக்குச்சாவடி அலுவலர் 1-க்கான பயிற்சி முகாம் நடைபெற்றது. இப்பயிற்சி முகாமில் சுமார் 450 பேர் கலந்துகொண்டனர். மண்டல வாக்குச்சாவடி அலுவலர்கள் பயிற்சிகளை அளித்தனர். இப்பயிற்சி வகுப்பை வட்டாட்சியர் முத்துராமலிங்கம் தொடங்கிவைத்தார்.
courtesy: Dinamani.com
திருச்செந்தூர் கடற்கரையில் அமைந்துள்ள அய்யா வைகுண்டர் அவதாரபதியில் 182-வது அவதார தின விழா மார்ச் 4-ம் தேதி நடைபெறுகிறது.
விழாவை முன்னிட்டு மார்ச் 3-ம் தேதி அதிகாலை 5 மணிக்கு பணிவிடை, உகப்படிப்பு, அன்னதர்மம், உச்சிபடிப்பு, பணிவிடை, மாலையில் பணிவிடை, அய்யா வாகனப் பவனி, அன்னதர்மம் நடைபெறுகிறது.
4-ம் தேதி அதிகாலை 4 மணிக்கு தாலாட்டு, பள்ளி உணர்த்தல், அபயம் பாடுதல், காலை 6.27 மணிக்கு சூரிய உதயத்தில் கடல் பதமிடுதல், அவதார விழா பணிவிடை மற்றும் அன்னதர்மம் நடைபெறுகிறது.
விழா ஏற்பாடுகளை வள்ளியூர் அய்யாவழி அகில திருக்குடும்ப மக்கள் சபைத் தலைவர் பி.சுந்தரபாண்டி, செயலர் எஸ்.தர்மர், பொருளாளர் ஏ.ராமையா, உதவி தலைவர் எஸ்.தங்கத்துரை, துணைச்செயலர் ஏ.ராஜேந்திரன் மற்றும் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் செய்து வருகின்றனர்.
courtesy: Dinamani.com
தமிழக அரசின் குடிநீர் பாதுகாப்பு வார சிறப்புக் கூட்டம் காயல்பட்டினம் நகராட்சியில், நகர்மன்றக் கூட்டரங்கில் நடைபெற்றது.
கூட்டத்துக்கு நகர்மன்றத் தலைவர் ஐ. ஆபிதா ஷேக் தலைமை வகித்து அறிமுகவுரையாற்றினார். இதில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய நீர் உதவி வல்லுநர் கணபதி சுப்பிரமணியன் பேசியதாவது: காயல்பட்டினத்திலுள்ள 18 வார்டுகளிலிருந்தும், கிணறுகள், அடிபம்புகள் ஆகியவற்றின் (சுத்திகரிக்கப்படாத) சுமார் 250 மாதிரிகளை ஆய்வு செய்வதற்காக, 3 ஆசிரியைகள் பயிற்சிக்குப் பின் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் குடிநீர் மாதிரிகளைப் பெற்றுக்கொண்டு, ஆய்வுக்கு உட்படுத்தி அறிக்கை சமர்ப்பிக்கவுள்ளனர். பெறப்படும் குடிநீர் மாதிரிகளின் தோற்றம், மணம், கலங்கல், காரம், கடினம் உள்ளிட்ட 16 தன்மைகளின் இருப்பு ஆய்வு செய்யப்பட்டு, அதனடிப்படையில், இப்பகுதியுடைய நீராதாரத்தின் பொது அறிக்கை அரசுக்கு சமர்ப்பிக்கப்படும். இவ்வாறு, மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் பெறப்படும் ஆய்வறிக்கைகள் அடிப்படையில், மக்கள் நலனுக்கான செயல்திட்டம் உருவாக்கி செயல்படுத்தப்படும் என்றார்.
தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய நீர் உதவி அலுவலர் மணி, காயல்பட்டினம் நகராட்சி ஆணையர் காந்திராஜ், பொறியாளர் சிவக்குமார் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
courtesy: Dinamani.com
தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் புதிய ஏ.டி.எம். சேவை மையம் தொடங்கி வைக்கப்பட்டது.
காயல்பட்டினம் பிரதான வீதி - பெரிய தெரு முனையில் அமைக்கப்பட்ட இந்த வங்கியின் ஏ.டி.எம். மையத்தை நகர்மன்றத் தலைவர் ஐ. ஆபிதா ஷேக் திறந்து வைத்தார்.
நகராட்சி ஆணையர் எம். காந்திராஜ் இயக்கி வைத்தார். வாவு வஜீஹா வனிதையர் கல்லூரியின் முதல்வர் முனைவர் ஒய். சசிகலா குத்துவிளக்கேற்றி வைத்தார்.
நிகழ்ச்சியில், தூத்துக்குடி மண்டல மேலாளர் எம். போஸ், நகர்மன்றத் தலைவர் ஆகியோர் பேசினர்.
விழாவில், வங்கியின் நிர்வாக அதிகாரி பழனிகுமார், ஆறுமுகனேரி நலமன்றத் தலைவர் பி. பூபால்ராஜன், தொழிலதிபர்கள் எஸ். மகேஷ் ராஜன், பொன்னையா, ஏ.கே. கலீல், ஆறுமுகனேரி அரிமா சங்கத் தலைவர் எம்.எஸ்.எஸ். சண்முக வெங்கடேஷ் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
ஆறுமுகனேரி கிளை மேலாளர் ஆர். ரமேஷ் பென்சிலால் நன்றி கூறினார்.
ஆறுமுகனேரி ஸ்ரீ சோமசுந்தரி அம்மன் சமேத ஸ்ரீ சோமநாத சுவாமி திருக்கோயிலில் செவ்வாய்க்கிழமை இரவு தமிழக முதல்வர் ஜெயலலிதா, பிரதமராக வேண்டி சிறப்பு 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
நகர அதிமுக சார்பில் நடைபெற்ற இந்த திருவிளக்கு பூஜையை நகரச் செயலர் சா. பொன்ராஜ் தொடங்கிவைத்தார். நிகழ்ச்சியில் பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் ரா. ரவிச்சந்திரன், நல்லூர் முத்துப்பாண்டியன், முன்னாள் நகரச் செயலர் ஏ. பெரியசாமி, இளைஞர் மற்றும் இளம்பெண் பாசறை நகரச் செயலர் மாணிக்கராஜ், பக்த ஜன சபை செயலர் பி.கே.எஸ். கந்தையா பிள்ளை, பொருளாளர் எஸ். அரிகிருஷ்ணன் நாடார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
courtesy: Dinamani.com
ஆறுமுகனேரியில் அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படாததைக் கண்டித்து மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்துக்கு நகரச் செயலர் சு.ஜெயபாண்டியன் தலைமை வகித்தார்.பி.சுப்பிரமணியன் மற்றும் கே.ஆறுமுகபெருமாள் முன்னிலை வகித்தனர். ஒன்றியச் செயலர் சு.பன்னீர்செல்வம், மாவட்டக் குழு உறுப்பினர் செ.ரவிச்சந்திரன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
ஒன்றியக் குழு உறுப்பினர்கள் த.கலைச்செல்வி, ஆ.துரைராஜ், பி.கல்யாண சுந்தரம் மற்றும் சிஐடியூ மாவட்டக் குழு உறுப்பினர் சிவதாணுதாஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Courtesy : Dinamani.com
காயல்பட்டினம் அர்ரஹீம் மீலாது குழு 27-ஆம் ஆண்டு தொடக்கவிழா மற்றும் நபிகள் நாயகம் பிறந்த நாள் விழா ஆகிய இரு பெரும் விழா இரண்டு நாள்கள் நடைபெற்றன.
தொடக்கநாளில் ஜன்னத்துல் காதிரிய்யா பெண்கள் தைக்கா அருகில், மஹான் ஸþஃபீ ஹழ்ரத் காஹிரீ ரலியல்லாஹு அன்ஹு திடலில், மக்தப் முஹ்யித்தீன் மத்ரஸா மாணவர்-மாணவிகளின் 2-ம் ஆண்டு சன்மார்க்க நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
2-வது நாளன்று அஹ்மத் நெய்னார் பள்ளியின் இமாம் பாளையம் அபுல்ஹஸன் ஷாதுலீ ஸதக்கலீ தலைமையில், கத்முல் குர்ஆன் ஓதி தமாம் செய்யப்பட்டது. கே.எஸ்.முஹம்மத் தாஹா தலைமையில் மவ்லித் மஜ்லிஸ் நடைபெற்றது. பின்னர், மக்தப் முஹ்யித்தீன் மத்ரஸா மாணவர்-மாணவிகளின் சன்மார்க்க நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
அன்று மாலையில் எஸ்.எஸ்.இ.காழி அலாவுத்தீன் தலைமையில் மீலாது விழா பேரணியும், மக்தப் மாணவர்களின் தஃப்ஸ் நிகழ்ச்சியும் நடைபெற்றன. மஃரிப் தொழுகைக்குப் பின், கலீபா எஸ்.இ.ஷெய்கு நூருத்தீன் தலைமையில் திக்ர் மஜ்லிஸ் நடைபெற்றது.
இஷா தொழுகைக்குப் பின் எஸ்.டி. செய்யித் இஸ்மாயில் மற்றும் காயல்பட்டினம் மஹ்ழரா அரபிக் கல்லூரி பேராசிரியர் ஏ.கே.முஹம்மத் அஸ்ஃபர் அஷ்ரஃபீ ஆகியோர் சன்மார்க்க சொற்பொழிவாற்றினர். ஆசிரியர் இசட்.ஏ.ஷெய்கு அப்துல் காதிர் நன்றி கூறினார்.
courtesy: Dinamani.com
தூத்துக்குடி தெற்கு மாவட்ட காங்கிரஸ் செயல்வீரர்கள் கூட்டம், திருச்செந்தூர் கே.டி.எம். மற்றும் குறிஞ்சி மஹாலில் சனிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, தெற்கு மாவட்டத் தலைவர் எஸ்.டி.ஆர்.விஜயசீலன் தலைமை வகித்தார். வட்டார தலைவர்கள் திருச்செந்தூர் இரா.தங்கமணி, உடன்குடி பி.சிவசுப்பிரமணியன், சாத்தான்குளம் வி.பி.ஜனார்த்தனம், ஆழ்வார்திருநகரி (கிழக்கு) கே.முருகேசன், (மேற்கு) வி.கோதண்டராமன், ஸ்ரீவைகுண்டம் (மேற்கு) என்.நல்லகண்ணு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தமிழக துணைத் தலைவர் ஏ.பி.சி.வி.சண்முகம், வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் பி.கதிர்வேல், முன்னாள் தெற்கு மாவட்டத் தலைவர் எஸ்.ஜஸ்டின், முன்னாள் எம்.எல்.ஏ. வெ.ராணி வெங்கடேசன், மாநில பொதுக்குழு உறுப்பினர் சு.கு.சந்திரசேகரன் உள்ளிட்ட பலர் பேசினர்.
கூட்டத்தில், எண்ணூர் துறைமுகத்துக்கு காமராஜர் பெயர் சூட்டிய மத்திய அமைச்சர் ஜி.கே.வாசனுக்கு நன்றி தெரிவிப்பது, தூத்துக்குடி விமான நிலையத்துக்கு காமராஜர் பெயர் சூட்ட வேண்டும். கல்வி கடன் வட்டியை தள்ளுபடி செய்ததற்கும், பழனி-திருச்செந்தூர் தினசரி ரயில் இயக்கியதற்கும் மத்திய அரசுக்கு நன்றி தெரிவிப்பது, கன்னியாகுமரி திருச்செந்தூர் வழியாக புதிய ரயில் பாதை அமைக்க வேண்டும்.
ராஜீவ்கொலை குற்றவாளிகளை விடுவிப்பது தொடர்பான ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவையின் முடிவை கண்டிப்பது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில், வழக்குரைஞர் மகேந்திரன், மாவட்டச் செயலர்கள் நா.லோகநாதன், ஐந்துகோடி எஸ்.அரிகரன், வி.கே.எம்.பாஸ்கரன், எஸ்.டி.சண்முகம், ஹர்பான்சிங், நடராஜன், மாவட்ட துணைத் தலைவர்கள் எஸ்.ஆதிலிங்கம், எஸ்.பேச்சியம்மாள், தூத்துக்குடி மாநகர் மாவட்டத் தலைவர் ஏ.டி.எஸ்.அருள், முன்னாள் தூத்துக்குடி மாநகரத் தலைவர் சி.எஸ்.முரளிதரன், முன்னாள் நாடாளுமன்ற தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் க.பெருமாள்சாமி, மயிலை பி.பெரியசாமி, டி.சிவபால், ஆழ்வை வட்டார பொருளாளர் அருள்சீலன், நகரத் தலைவர்கள் ராஜாமணி, சாத்தான்குளம் ஜெயபிரகாஷ், ஆழ்வார்திருநகரி இளங்கோ நயினார், ஆத்தூர் ஸ்ரீராம், கானம் கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
முன்னதாக விவசாய அணி மாவட்டத் தலைவர் ஜெ.ஜெயசேகர் வரவேற்றார். திருச்செந்தூர் நகரத் தலைவர் குறிஞ்சி டி.எஸ்.சுரேஷ் நன்றி கூறினார்.
பள்ளி டிரஸ்டியும், டி.சி.டபிள்யூ. நிறுவனத்தின் பொதுமேலாளர்களுமான சி.சந்திரசேகரன், ஆர்.பசுபதி முன்னிலை வகித்தனர். பள்ளி முதல்வர் ஆர். சண்முகானந்தன் ஆண்டறிக்கை சமர்ப்பித்தார். பள்ளி ஆண்டு இதழான சிரியான்ஸ் மலரை சிறப்பு விருந்தினர் தூத்துக்குடி கடலோர பாதுகாப்புப் படை அதிகாரி கமாண்டன்ட் எஸ்.இ.டி. ஆனந்த்குமார் வெளியிட முதல் பிரதியை டி.சி.டபிள்யூ. நிறுவன நிர்வாக உதவித் தலைவர் (பணியகம்) ஆர். ஜெயகுமார் பெற்றுக் கொண்டார்.
கடந்தாண்டு பிளஸ் 2 தேர்வில் மாவட்ட அளவில் முதலிடம் பெற்ற கமலாவதி மேல்நிலைப் பள்ளி மாணவி வி.சாய்லட்சுமி கெüரவிக்கப்பட்டார்.
கலை இலக்கிய போட்டிகளுக்கான ஒட்டுமொத்த சிறப்பு பரிசை பிளஸ் 1 மாணவி கே.மதுமிதிதா பெற்றார். கடந்த ஆண்டு கலை இலக்கியப் போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவ மாணவிகளுக்கு ராணி ஆனந்த்குமார் பரிசுகள் வழங்கினார். 15 ஆண்டுகள் பணிநிறைவு செய்த ஆசிரியை முத்துக்கனி கெüரவிக்கப்பட்டார்.
விழாவில், டி.சி.டபிள்யூ நிர்வாக உதவித் தலைவர் சுபாஷ்டாண்டன், பள்ளித் தலைமை ஆசிரியை சுரோமணி ஜெயமுருகன், ஸ்பிக் மனிதவள மேம்பாட்டுத் துறை துணை பொதுமேலாளர் வி. மீனாட்சிசுந்தரம் மற்றும் பலர் கலந்துகொண்டனர். மாணவத் தலைவர் எஸ். ஜாப்ரின் கிரித்திகா வரவேற்றார். மாணவர் எம்.எஸ். மொகம்மதுஷாஃபி நன்றி கூறினார்.
நிகழ்ச்சிகளை மாணவியர் கே.மதுமிதா, எஸ்.ஐஸ்வர்யா, ஜே.ஐ.ஹாஜரா சாஜியா மற்றும் மாணவர் எஸ்.ஏ.பிரசாத் ஆகியோர் தொகுத்து வழங்கினர்.
ஆறுமுகனேரி ஸ்ரீசோமசுந்தரி அம்மன் சமேத ஸ்ரீசோமநாத சுவாமி திருக்கோயிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை திருவாசகம் முற்றோதுதல் நடைபெற்றது.
இத்திருக்கோயிலில் மகா கும்பாபிஷேகம் பிப். 9ஆம் தேதி நடைபெறுகிறது. கும்பாபிஷேக விழா திங்கள்கிழமை இரவு விக்னேஷ்வர பூஜை மற்றும் தன பூஜையுடன் தொடங்கியது. இரண்டாவது நாளான செவ்வாய்க்கிழமை பக்த ஜன சபை செயலர் பி.கே.எஸ்.கந்தையா தலைமையில் திருவாசகம் முற்றோதுதல் நடைபெற்றது.
இதில், பன்னிரு திருமுறை குழு மகளிர்கள் கலந்துகொண்டனர். புதன்கிழமை கணபதி ஹோமம் நடைபெறுகிறது, வியாழக்கிழமை மாலை முதல் யாகசாலை பூஜைகள் தொடங்குகின்றன.