ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» Temples » சிவராத்திரி-வழிபடும் முறைகள்-அறிந்து கொள்வோம்

சிவராத்திரி-வழிபடும் முறைகள்-அறிந்து கொள்வோம்
சிவராத்திரி.
************
சிவ விரதங்கள் எட்டு. அவற்றுள் சிவராத்திரி ஒன்று. 

இது மாசி மாதம். கிருஷ்ணபட்சம் சதுர்த்தி திதியன்று வருவது. 

************[2012-02-22]************

அதிகாலையில் நீராடி திருநீறும். 
ருத்திராட்ச மாலையும் அணிந்து சிவபூஜை செய்து. 
திரு ஐந்தெழுத்து ஓதவேண்டும். 
பகல் முழுவதும் உபவாசம் இருக்க வேண்டும். 
மாலையில் மீண்டும் நீராடி, சிவாலயம் சென்று வழிபட வேண்டும். 
முடியுமானால் நெய்விளக்கு ஏற்றி, மலரால் அர்ச்சனை செய்து உள்ளம் உருகி தேவாரம் மற்றும் திருவாசக பாடல்களை பாடி துதி செய்து, வலம் வந்து, அஷ்டாங்க வணக்கம் புரிந்து வழிபாடு செய்யவேண்டும்.

சிவராத்திரி அன்று இரவில் நான்கு காலங்களிலும் சிவபூஜை செய்ய வேண்டும். சிவபூஜை செய்ய இயலாதவர்கள். 
நான்கு காலங்களிலும் கோயிலில் நடைபெறும் பூஜைகளில் கலந்துகொண்டு தரிசிக்க வேண்டும். 
நிரம்பியஅன்புடன் திரு ஐந்தெழுத்து ஓதுதல் இன்றியமையாதது. 
மறுநாள் காலை நீராடி. சிவனை வழிபட்டு விரதத்தை முடிக்க வேண்டும். 

இப்படி விரதம் இருந்தவர்களின் சலக வினைகளும் நெருப்பில் விழுந்த பஞ்சு போல எரிந்து கரிந்து. சாம்பலாகும்.

தீபங்களை வரிசையாக வைத்து சிவபெருமானை வழிபட வேண்டும்.

சிவபெருமான் தீபமங்கள ஜோதியாக விளங்குபவர். 
அவர் ஒளிவெள்ளமாக திருவண்ணாமலையில் காட்சி தருகிறார்.

கோயிலுக்குள் நீராடிய பிறகே செல்ல வேண்டும். கொடிமரத்திற்கு வெளியே விழுந்து வணங்கி. 
விநாயகரை ஒரு முறையும். 
சிவபெருமானை மூன்றுமுறையும். 
அம்பிகையை நான்கு முறையும் வலம்வர வேண்டும். 

வழிபடும்போது மனம் இறைவன்மீது மட்டுமே இருக்க வேண்டும். விபூதி மற்றும் பிரசாதத்தை பயபக்தியுடன் இரண்டு கைகளாலும் ஏந்திப்பெறவேண்டும். அதைக்கீழே சிந்துவதோ எறிவதோ பெரும்பாவமாகும். 

*சண்டிகேஸ்வரர் மீது நூல் இடக்கூடாது. 
*சிவலிங்கத்திற்கும் நந்திதேவருக்கும் இடையே போகக்கூடாது.
*வழிபாடு முடிந்தபிறகு கொடிமரத்தின் அருகில் வடதிசை நோக்கி அமர்ந்து மூலமந்திரம் ஜெபிக்க வேண்டும். 

அதிக சப்தம் இல்லாமல் இனிமையாக தோத்திரப் பாடல்களை பாடவேண்டும். கோயிலுக்கு செல்வோர் முக்கியமாக விளக்குகளில் எண்ணெய் ஊற்ற வேண்டும்.

வீட்டுத் தலைவர் ஒரு பாடலைப் பாட. மற்றவர்கள் அதை தொடர்ந்து பாடி இறைவனை வழிபாடு செய்ய வேண்டும். இதனால் குடும்பத்தில் ஒற்றுமை உண்டாவதுடன். அந்த வீட்டில் தெய்வ கடாட்சமும். லட்சுமியின் அனுக்ரஹமும் உண்டாகும்.
சிவராத்திரி.
************
சிவ விரதங்கள் எட்டு. அவற்றுள் சிவராத்திரி ஒன்று.

இது மாசி மாதம். கிருஷ்ணபட்சம் சதுர்த்தி திதியன்று வருவது.

************[2012-02-22]************

அதிகாலையில் நீராடி திருநீறும்.
ருத்திராட்ச மாலையும் அணிந்து சிவபூஜை செய்து.
திரு ஐந்தெழுத்து [நமசிவாயா]ஓதவேண்டும்.
பகல் முழுவதும் உபவாசம் [விரதம்]இருக்க வேண்டும்.
மாலையில் மீண்டும் நீராடி, சிவாலயம் சென்று வழிபட வேண்டும்.
முடியுமானால் நெய்விளக்கு ஏற்றி, மலரால் அர்ச்சனை செய்து உள்ளம் உருகி தேவாரம் மற்றும் திருவாசக பாடல்களை பாடி துதி செய்து, வலம் வந்து, அஷ்டாங்க வணக்கம் புரிந்து வழிபாடு செய்யவேண்டும்.

சிவராத்திரி அன்று இரவில் நான்கு காலங்களிலும் சிவபூஜை செய்ய வேண்டும். சிவபூஜை செய்ய இயலாதவர்கள்.
நான்கு காலங்களிலும் கோயிலில் நடைபெறும் பூஜைகளில் கலந்துகொண்டு தரிசிக்க வேண்டும்.
நிரம்பியஅன்புடன் திரு ஐந்தெழுத்து ஓதுதல் இன்றியமையாதது.
மறுநாள் காலை நீராடி. சிவனை வழிபட்டு விரதத்தை முடிக்க வேண்டும்.

இப்படி விரதம் இருந்தவர்களின் சலக வினைகளும் நெருப்பில் விழுந்த பஞ்சு போல எரிந்து கரிந்து. சாம்பலாகும்.

தீபங்களை வரிசையாக வைத்து சிவபெருமானை வழிபட வேண்டும்.

சிவபெருமான் தீபமங்கள ஜோதியாக விளங்குபவர்.
அவர் ஒளிவெள்ளமாக திருவண்ணாமலையில் காட்சி தருகிறார்.

கோயிலுக்குள் நீராடிய பிறகே செல்ல வேண்டும். 
கொடிமரத்திற்கு வெளியே விழுந்து வணங்கி.
விநாயகரை ஒரு முறையும்.
சிவபெருமானை மூன்றுமுறையும்.
அம்பிகையை நான்கு முறையும் வலம்வர வேண்டும்.

வழிபடும்போது மனம் இறைவன்மீது மட்டுமே இருக்க வேண்டும். விபூதி மற்றும் பிரசாதத்தை பயபக்தியுடன் இரண்டு கைகளாலும் ஏந்திப்பெற வேண்டும். அதைக்கீழே சிந்துவதோ எறிவதோ பெரும்பாவமாகும்.

*சண்டிகேஸ்வரர் மீது நூல் இடக்கூடாது.
*சிவலிங்கத்திற்கும் நந்திதேவருக்கும் இடையே போகக்கூடாது.
*வழிபாடு முடிந்தபிறகு கொடிமரத்தின் அருகில் வடதிசை நோக்கி அமர்ந்து மூலமந்திரம் ஜெபிக்க வேண்டும்.

அதிக சப்தம் இல்லாமல் இனிமையாக ிபாட்டுப் பாடல்களை பாடவேண்டும். கோயிலுக்குச் செல்வோர் செய்ய வேண்டிய செயல்களுள் அதிக பயன் தருவது,விளக்குகளில் எண்ணெய் ஊற்றுவதாகும்.

வீட்டுத் தலைவர் ஒரு பாடலைப் பாட. மற்றவர்கள் அதை தொடர்ந்து பாடி இறைவனை வழிபாடு செய்ய வேண்டும். இதனால் குடும்பத்தில் ஒற்றுமை உண்டாவதுடன். அந்த வீட்டில் தெய்வ கடாட்சமும். லட்சுமியின் அனுக்ரஹமும் உண்டாகும்.
Tags: Temples

0 comments

Leave a Reply