ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» Daily News , News » பனைமரம் வளர்ப்போம்-மனிதர்களை காப்போம்...

பனைமரம் வளர்ப்போம்-மனிதர்களை காப்போம்...

பனை மரம்:

தென்னையை விதைத்தவன் தின்றுவிட்டுச் சாவான். 
பனையை விதைத்தவன் பார்த்துவிட்டுச் சாவான். 

இந்தப் பழமொழியைக் கூறியே, நம் மக்கள் பனை விதைப்பதைக் கைவிட்டு விட்டனர்.ஆனால் உண்மை என்னவெனில் தென்னையை விதைப்பவன் நிறைய தேங்காய் கலந்த உணவுப் பொருட்களைத் தின்றுவிட்டு உடலில் கொழுப்புச் சத்து அதிகமாகிச் சாவான். பனையை விதைப்பவனோ, அதனுடைய நற்பலனால் தன்னுடைய சந்ததியர் வளமாக வாழ்வதை பார்த்துவிட்டு சாவான் என்பதே உண்மை. 

நம்நாட்டின் இயற்கைச் செல்வங்களுள் சிறப்பானது பனைச்செல்வம். இதை வற்றாத புதையல் என்றே கூறலாம். பனைமரத்தின் ஒவ்வொரு பாகமும் ஆதிகாலம் தொட்டே பயன்பட்டு வருவதால் பழங்கால மக்கள் பனையை கற்பத்தரு என போற்றினர். மகாராஷ்டிரா பல்கலை கழகத்தை சேர்ந்த பேராசிரியர், டாக்டர். மகாபல் என்பவர் பனைமர பாறைகளை (Fossiles) ஆராய்ந்து பனைமரங்கள் எத்தனையோ மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியிருக்க வேண்டும் என்று நிருபிக்கிறார்.பனை, ஒரு மரம் என்று பொதுவாக தமிழில்வழங்கப்படினும், தொல்காப்பியத்தில்குறித்துள்ளபடியும், இன்றைய தாவரவியல்அடிப்படையில் குறித்துள்ளபடியும் புல்லினத்தைச்சேர்ந்த ஒரு தாவரமாகும். இதன் தாவரவியற் பெயர்பொராசஸ் பிலபெலிபேரா (Borassus flabellifera) என்பதாகும்.

பனைகள் பொதுவாகப் பயிரிடப்படுவதில்லை,இயற்கையிலே தானாகவே வளர்ந்து பெருகுகின்றன.இளம் பனைகள் வடலி என்று அழைக்கப்படுகின்றன.பனை வளர்ந்து முதிர்ச்சியடைவதற்கு 15 ஆண்டுகள் வரை எடுக்கும் எனக் கூறப்படுகிறது. அதன் வயது மனிதனின் சராசரி வயதிலும் கூடியது என்பது குறிப்பிடக்கூடியது. பனைகள் குறிப்பிடத்தக்க வளைவுகள் ஏதுமின்றிச் சுமார் 30 மீட்டர் உயரம் வரை வளரக்கூடியவை. கிளைகளும் கிடையா. இதன் உச்சியில்,கிட்டத்தட்ட 30 - 40 வரையான விசிறி வடிவ ஓலைகள்வட்டமாக அமைந்திருக்கும். இது எவ்விடத்தில் தோன்றியது என்பது சரியாகத் தெரியவில்லை.

பனை மரங்கள் 45டிகிரி வட அச்சரேகையிலிருந்து 45டிகிரி தென் அச்சரேகை வரையிலுள்ள வெப்பமண்டல பிரதேசங்களில் வளர்கிறது. இப்பிரதேசத்தை பனை வட்டம் (Palm Belt) என அழைக்கப்படுகிறது.இப்பிரதேசத்தில் அடங்கிய இந்தியா: 60 மில்லியன்,மேற்கு ஆபிரிக்கா - 50 மில்லியன், இலங்கை - 11.1மில்லியன், இந்தோனெசியா - 10 மில்லியன், மடகஸ்கார் - 10 மில்லியன், மியன்மார் - 2.3 மில்லியன், கம்பூச்சியா - 2மில்லியன், தாய்லாந்து - 2 மில்லியன் என உலக அளவில் மொத்தளவாக 140 மில்லியன் பனைமரங்கள் இருப்பதாக அறியப்பட்டுள்ளது.

தற்போது இந்தியாவில் மொத்தம் 8.59 கோடி பனைகள் இருப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. இவற்றில் 5.10 கோடி பனைகள் தமிழ்நாட்டிலேயே உள்ளது குறிப்பிடத்தக்கது.தமிழ் நாட்டில், கன்னியாகுமரி தொடக்கம்,திருநெல்வேலி, மதுரை போன்ற இடங்கள் உட்படச்சென்னை வரை பனைகள் காணப்படுகின்றன. மேலும் பனை மரம் தமிழ் நாட்டின் மாநில மரமும் ஆகும்,
பனை மரத்தின் பயன்கள்
"திணைத்துணை நன்றி செயினும் பனைத் துணையாக்
கொள்வார் பயன்தெரி வார்" - திருக்குறள்
என்ற நன்றியின் பயனோடு பனையின் பயனை ஒப்பிட்டு வள்ளூவர் கூறியதிலிருந்தே பனையின் மேம்பட்ட சிறப்பு தன்மை விளங்குகிறது.
இது முறையாகப் பயிரிடப்பட்டு வளர்க்கப்படும் ஒரு தாவரமாக இல்லாதிருப்பினும், இதிலிருந்து மக்கள் ஏராளமான பயன்களைப் பெறுகிறார்கள். இதன் நுனியிலிருந்து நிலத்தின் கீழுள்ள வேர் வரையிலும்,முளைவிட ஆரம்பித்ததிலிருந்து, வெட்டி வீழ்த்தப்பட்டபின்னரும் நெடுங்காலத்துக்குப்,பனைகளுக்குப் பயன் உண்டு. இதனால்தான் இதனைப் பூலோக கற்பகதரு எனக் குறிப்பிடுகிறார்கள். கற்பகத்தருஎன்பது வேண்டுபவர்களுக்கு வேண்டியனவெல்லாம் கொடுக்கின்ற, இந்துப் புராணக்கதைகளில்குறிப்பிடப்படும் ஒரு தேவலோகத்து மரமாகும்.பனை மரத்தில் இருந்து ஆண்டொன்றுக்கு கிடைக்கும் பொருட்களின் அளவு: பதனீர் - 180 லிட்டர், பனை வெல்லம் - 25 கி, பனஞ்சீனி - 16 கி, தும்பு - 11.4 கி, ஈக்கு - 2.25 கி, விறகு - 10 கி, ஓலை - 10 கி, நார் - 20 கி.
பனையிலிருந்து பலவகையான உணவுப் பொருள்களும்,உணவல்லாத வேறு முக்கியமான பொருட்களும் பெறப்படுகின்றன. முற்காலத்தில் பனையோலைகளே எழுதப்பயன்பட்டு வந்தன. இன்றும் பல பழைய நூல்களைப் பனையோலைச் சுவடிகள் வடிவிலே காணலாம். இவற்றைவிடக் கட்டிடங்களுக்கு வேண்டிய பல கட்டிடப்பொருட்கள், கைப்பணிப் பொருட்கள், மற்றும் தும்பு, நார் முதலியவற்றிலிருந்து செய்யப்படும் பல்வேறு பயன்படு பொருட்கள் என்பனவற்றையும் பனையிலிருந்து பெற முடியும். பொதுவாக, இது வளரும் இடங்களிலெல்லாம், வசதியற்ற ஏழை மக்களின் பொருளாதார நிலையுயர, அடித்தளமாக விளங்குகிறது.
பனைத்தொழில் அன்றும் இன்றும்:

இந்தியாவில் இனிப்பின் தேவை மிகவும் அவசியமானது.பல பண்டிகைகளிலும் இனிப்பு வழக்கப்ப்டுவது வாடிக்கை.முன்பு கரும்பு வெள்ளம், தென்னை, பனை கருப்பட்டி,முதலியவை இனிப்பிற்காக உபயோகபடுதப்பட்டது.தென்னிந்தியாவில் பெரும்பாமையான மக்கள் பனை வெல்லத்தையெ பயன்படுத்தினார். அக்காலகட்டத்தில் பனையேறிகளின் வாழ்க்கை மிக செழிப்பாக இருந்தது.குறிப்பாக சொல்வதென்றால் 200 வருடங்களுக்கு முன்பு பனையேறிகள் செல்வந்தர்களாய், நாகரீகம் மிக்க சமுதாயங்களாய், சமுதாய அந்தாஸ்த்துடையவர்களாய் இருந்தனர். கிட்டத்தட்ட 843 மேற்பட்ட பனைசார்ந்த பொருட்கள் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன. ஆனால் கடந்த 150 வருடங்களாய் பனைத்தொழில் நசிவடைந்து வருகிறது. 
ஆங்கிலேயர் காலத்தில் முதன் முதலாய் பனை ஏறுபவர்களை கட்டுப்படுத்தும் விதமாக லைசென்ஸ் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. ஏனெனில் கிழக்கிந்திய கம்பெனியில் பியறுக்கு முக்கியத்துவம் ஏற்படுத்தவேண்டும் என்ற அடிப்படையில் லைசென்ஸ் முறை நடைமுறையில் இருந்தது.
அதேநேரம் ஆங்கிலேர்கள் வந்த பின் கரும்பிலிருந்து வெள்ளை சர்க்கரையை சுக்ரோஸ் சை பிரிதெடுத்து தேநீர்,கேக், முதலியவற்றிற்கு பயன்படுத்தும் பழக்கத்தை ஆரம்பித்து வைத்தனர். அத்துடன் வெள்ளை சர்க்கரை வாடை இல்லாமலும் இருந்தது. அதற்கென கரும்பிளிருக்கும் இரும்பு, செம்பு, முதலிய பல தாதுக்கைளை அகற்றப்பட்டது.
நாடு சுதந்திரமடைந்தபின், அரசின் தவறான கண்ணோட்டத்தின் விளைவாக கரும்பு உற்பத்தி, கரும்பு ஆலைகளின் நிர்மாணத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. இதனை தொடர்ந்து மிகப்பெரியபணப்பயிராக உருவெடுத்தது. இதனை காந்திய பொருளாதார மேதை ஜே.சி.குமரப்பா கடுமையாக எதிர்த்தார். மிகவும் வடிவமைக்கப்பட்ட தொழிச்சாளைகளாக உருவெடுத்தது கரும்பு - சர்க்கரை உற்பத்தி. கடந்த ஐம்பத்து வருடங்களில் இந்தியாவில் கரும்பின் பரப்பு இரண்டு மடங்காகவும், உற்பத்தி ஆறு மடங்காகவும் உயர்ந்துள்ளது. உலகில் பிரசிலுக்கு அடுத்து அதிகம் கரும்பு இந்தியாவில் உற்பத்தியாகிறது .இந்தியாவில் உத்திர பிரதேசம், மகாராஷ்டிராவிற்கு பிறகு தமிழகத்தில் அதிகம் கரும்பு உற்பத்தியாகிறது.

கரும்பு நீர் தேவை அதிகம் கொண்ட நீண்ட நாள் பயிர்.கரும்பிற்கு வணிக வரவேற்ப்பு இருப்பதால் விவசாயிகள் அனைவரும் நீரிலாதவர்கள் கூட ஆள் துளை கிணறுகள் தோண்டி கரும்பு உற்பத்தி செய்கின்றனர்.தென்னிந்தியாவில் கட்டுபாடட்ட்ற கரும்பு சாகுபடிநிலத்தடி நீரிணை கேள்விக்குறியாக்கியுள்ளது.கரும்பிலிருந்து பிரேசில் எரிபொருள் தயாரிப்பதால்நாமும் தயாரிக்க வேண்டும் கரும்பிற்கு விலையை கூட்ட வேண்டும் என்று போராடும் விவசாயிகளை காண்டால் அச்சமாக இருக்கிறது. நிலவும் ஆள் பற்றாக்குறையை சமாளிக்க பலர் கரும்பை விரும்புவதால் நிலத்தடி நீரின் நிலை , நிலத்தின் தன்மை இன்னும் மோசமாகும் சூழல் நிலவுகிறது. கடந்த 2007ம் ஆண்டு தமிழக பொதுப்பணித்துறையினால் நிலத்தடி நீர் இல்லாத கருப்பு ஒன்றியங்களாக வரையறை செய்யப்பட்ட பெரும்பாலான ஒன்றியங்களின் அந்தநிலைக்கு பின்னால் கரும்பு உற்பத்தி என்ற வணிக நோக்கம் அரசு அறியாதது அல்ல.

பிரேசிலில் 16 % எரிபொருள் கரும்பின் "எத்தனால்"கொண்டு பெறப்படுகிறது. பிரேசிலில் நீருக்கு பஞ்சமில்லை. அமேசான் காடுகளில் பெய்யும் மழையே போதும் கரும்பு வளர. இங்கு அப்படியா? நிலத்தடி நீரை இரையாக்கினால் கரும்பு வளரும் கரும்பு வளர்ந்தால் எரிபொருள் தயாரிக்கலாம். எரிபொருள் தேவை என்பது பூர்த்தி செய்ய முடியாத ஒன்று. அதற்காக நாம் கரும்பை பயிரிட்டு வாழ்வாதாரங்களை காவு கொடுக்க வேண்டுமா?என்று சற்றே யோசிக்க வேண்டும். இன்றைய சந்தப்பவாத காசுக்காக, நிலையான செல்வங்களான நீர் நில வளங்களை, இழந்து விடக்கூடாது.
இன்று வெல்லத்தில் செய்யும் அதிரசம், எள்ளுருண்டை,கொழுக்கட்டை, போன்ற சமாச்சாரங்கள் மாறி வெள்ளை சர்க்கரையில் செய்த இனிப்புகள் சமூகத்தில் மேலோங்கின. இத்துடன் பால் உற்பத்தி தேசியமயமானபின் இந்தியாவில் பால் இனிப்பு வகைகள் பல்கி பெருகின. இன்று கரும்பின் வெள்ளை சர்க்கரையை உபயோகப்படுத்துவோர் 99 % ஆகும்.அதனால் தான் இன்றுஇந்தியாவே நீரிழிவு என்னும் சர்க்கரை வியாதியில்உலகில் முதலிடம் வகிக்கிறது. .

போதாகுறைக்கு கரும்பு ஆலைகள் மொலாசசிலிருந்துசாராயம் காய்ச்சி மக்களின் கெடுக்கும் அவலமும் இந்த கரும்பினால் ஏற்படுகிறது. அதுவும் குறிப்பாக தமிழகத்தில் கரும்பு சாராய வியாபாரம் அரசாங்கமே எடுத்து நடுத்தும் அவலம் கொடி கட்டி பறக்கிறது. 
பனையேறிகள் வாழ்வும், தென்னை விவசாயமும் நலிந்து கரும்பினை கொண்டு வளர்க்கும் இந்த கலாச்சாரம் பல குடியினரது வாழ்வாதாரத்தை கெடுப்பதுடன், ஒட்டு மொத்த மனிதனின் வாழ்வாதாரத்தை கெடுக்கிறது என்பது ஐயமின்றி தெளிவாகிறது. பனைத்தொழிலை மிகவும் மோசமான நிலைக்கு தள்ளியதில் அரசின் தவறான வெள்ளை சர்க்கரைக்காதரவான கொள்கையே என்றால் மிகையில்லை.

தமிழகத்தில் பனைத்தொழில்:

தமிழுக்கும், தமிழர்களுக்கும் பனை மரங்கள் செய்த தொண்டு ஏராளம். ஆனால் தமிழைப் பாதுகாத்த பனை மரத்தை தமிழகமும், தமிழர்களும் பொருள்படுத்தாமல் இருப்பது நன்றி மறந்த செயலாகும். தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் (குறிப்பாக தென்மாவட்டங்களில்) பனை மரங்கள் களைச்செடியாகப் பரிதாபமாகக் காட்சி அளிப்பதைக் காண முடியும்.தமிழ்நாட்டில் மாநில மரமாக போற்றப்படும் பனை மரங்கள் தமிழ்நாடு முழுவதும் 10 லட்சம் மரங்கள் இருந்தன. தற் போது 30 சதவீத மரங்கள் அழிக்கப்பட்டுவிட்டன. பனை மரங்கள் விறகு உள்ளிட்ட தேவைகளுக்காக வெட்டப்படுவது தவிர்க்கப் பட வேண்டும்.

பனையேறும் தொழிலாளர்களின் இன்றைய நிலை:

கிராமப்புற தொழில்களில் மிக முக்கியமான தொழிலாய் உள்ள பனைத்தொழிலை ஊக்குவிக்க,பனைத்தொழிலாளர்களை பாதுகாக்க அரசு தகுந்த முயற்சியை எடுக்கவில்லை என்ற கருத்து பரவலாய் உள்ளது. தமிழகத்தில் உள்ள பனைகளில் 14% பனைகள் மட்டுமே தொழிலுக்கு பயன்படுத்தப்படுகிறது. உடல் உழைப்பையே நம்பியிருந்த 20-ம் நூற்றாண்டு மற்றும் அதற்கு முற்பட்ட காலங்களில் பனை ஏறுவதற்கு மனிதர்கள் பயன்படுத்தப்பட்டனர். பின்னர் ஏற்பட்ட இயந்திரப் புரட்சி காரணமாக அனைத்துத்துறைகளிலும் உடல் உழைப்பு குறைந்ததால், பனை ஏறும் தொழிலாளர்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துவிட்டது. பனைத்தொழிலில் ஈடுபடுவோரின் உழைப்பு அதிகம். ஆனால் அதற்கேற்ற ஊதியம் கிடைப்பதில்லை. இதனால் தொழிலாளர்களின் வாழ்க்கை நிலை கீழ் நோக்கியே போய்க்கொண்டிருக்கிறது.இத்தொழிலை அரசு ஊக்குவிக்கும் பட்சத்தில் கிட்டத்தட்ட10இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வேலைவாய்ப்பை பெறுவர்.
நவீன கண்டுபிடிப்புகளோ, இயந்திர கருவிகளோ பனைத்தொழிலில் புகுத்தப்படவில்லை. மாறாக 17ம் நூற்றாண்டில் பனைத்தொழில் நடைபெற்றதோ அவ்வாறுதான் இன்றும் நடைபெறுகிறது. அரசுத்துறை மற்றும் விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்பட்ட சில இயந்திரங்களும் பனை ஏறும் தொழிலுக்கு உகந்ததாக இல்லை.
பனைத்தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களை இரண்டு வகையினராய் பிரிக்கலாம். முதல்வகையினர் சொந்தமாய் பனைகளை வைத்துக்கொண்டு, சொந்த நிலத்தில் விவசாயம் செய்பவர்களை போல பனைத்தொழிலை செய்பவர்கள். இரண்டாம் வகையினர் பனைகளை குத்தகைக்கு எடுத்தோ, வார முறையிலோ பனைத்தொழிலை செய்து கொண்டிருப்பவர்கள்.மொத்தத்தில் இரண்டாம் தரப்பினரே தொழிலில் அதிகம்.அவர்களின் தினசரி சிக்கலே இன்றும் பனைத்தொழிலின் சிக்கலாய் உள்ளது. இவர்கள் நிலம் வைத்துள்ளவர்களிடம் கூடுதல் வட்டிக்கு வாங்கி பணத்தை கொண்டுதான் குத்தகைக்கு எடுக்கின்றனர். தொழில் நேரத்தில் கருப்பட்டியை பொருளாதார நெருக்கடி காரணமாக குறைந்த விலைக்கு விற்க வேண்டிய சூழலே நிலவுகிறது.

பனைத்தொழிலை மீட்டெடுக்க:

எனவே, பண்டைய தமிழ் இலக்கியங்களைப் பாதுகாத்து நம் தலைமுறைக்கு வழங்கிய பனை மரங்களை,வாழையடி வாழையாக வரும் நமது அடுத்த தலைமுறைகளும் பயன்படுத்தும் வகையில் பாதுகாப்பாக வளர்ப்பதுதான் பனை மரங்களுக்கு நாம் செய்யும் கைமாறு. மாநில மரம் என்ற வகையிலும்,தமிழின் வளர்ச்சிக்கு ஓலைச்சுவடியாக உதவியது என்ற வகையிலும் பனை மரங்களைப் பாதுகாப்பது தமிழக அரசின் முக்கிய கடமை.உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நெருங்கிவரும் நேரத்தில் பனை மரங்களைப் பாதுகாக்க தமிழக அரசு உறுதியான நடவடிக்கைகளை முடுக்கிவிடுவது அவசியம். பனை மரங்களில் எளிதில் ஏறி இறங்கும் வகையில் காலத்துக்கு உகந்த கருவிகளைக் கண்டுபிடிக்க வேளாண் விஞ்ஞானிகளை அறிவுறுத்துவது, பனையில் இருந்து கிடைக்கும் பொருள்களின் பயன்பாட்டை அதிகரிக்க தீவிர நடவடிக்கை எடுப்பதும் மிக மிக அவசியம். பனைப் பொருள்களை ஆர்வமாக வாங்கி அதைப் பயன்படுத்துவது ஒவ்வொரு தமிழனின் தலையாய கடமை.

VMB

Tags: Daily News , News

0 comments

Leave a Reply