ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» GRANNY THERAPY , பாட்டி வைத்தியம் » வெற்றிலை -அற்புதமான மருத்துவக்குணம் கொண்ட மூலிகை

வெற்றிலை -அற்புதமான மருத்துவக்குணம் கொண்ட மூலிகை
பூ, பிஞ்சி, காய், கனி எதுவும் இல்லாமல் வெறும் இலை மட்டுமே வளர்வதால் இதை வெற்றிலை என்கிறார்கள்(வெற்று+ இலை).கிராமங்களில்  சாப்பிட்ட பின் வாயில் போடுவது வெற்றிலை, வாயிலில் போடுவது வெற்று இலை(சாப்பிட்டு மிஞ்சிய வெற்று இலை) என்று சிலேடையாகச் சொல்வார்கள்.
   வெற்றிலையில் மூணு பு, மூணு கல் நீக்கி போடனும் என்று சொல்வார்கள். அதாவது, காம்பு, நரம்பு, விளிம்பு இது மூணு பு, அழுகல், வதங்கல், சுருங்கல் இது மூணு கல் இவைகள் இல்லாமல் வெற்றிலையைப் போட வேண்டும் என்பது மரபு.
வாரியார் சாமியிடம் ஒருவர் கேட்டாராம், சாமி சட்டை போடு, அங்கவஸ்திரம் போடு, உருத்ராட்ச மாலை போடு, செயின் போடு என்று சொல்கிறோம். சாப்பிடும் போது இட்லி சாப்பிடு, வடை சாப்பிடு, காபி சாப்பிடு, பாயாசம் சாப்பிடு, என்று சொல்கிறோம். ஆனால் சாப்பிட்ட பின் சாப்பிடும் வெற்றிலையை மட்டும் வெற்றிலையைப் போடு என்று ஏன் சொல்கிறார்கள் என்று கேட்டாராம். வாரியார் சாமி ஒரு நொடி யோசித்துவிட்டுச் சொன்னாராம், பசியாற்றுகின்ற உணவுப் பொருள்களை சாப்பிடுங்கள் என்று சொல்கிறோம். சாப்பிட்ட பின் அலங்காரத்திற்காக போடும் வெற்றிலையை போடுங்கள் என்று சொல்கிறோம் என்று சொன்னாராம். அந்த நபர் வாயடைத்துப் போனாராம். இது எடக்கு மடக்காக கேள்வி கேட்கிறவர்களை வாயடைக்க வைக்கச் சொன்ன அழகான சாமர்த்தியமான தமிழ் பேச்சு. ஆனால் உண்மையில் வெற்றிலை போடுவது ஜீரண சக்தியைத் தூண்டும் என்பதால்தான். மேலும் தாம்பத்யத்திலும்,வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு மருத்துவ ரீதியாக வேலை செய்கிறது. வெற்றிலை போடுபவர்களுக்கு எலும்பு நல்ல பலமாக இருக்கும். மேலும்,
  தலையே வெடித்துவிடும் போலிருக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். ஐந்தாறு வெற்றிலையை மை போல அரைத்து நெற்றியில் பற்று போடுங்கள், கொஞ்ச நேரம் கண்மூடி ஓய்வெடுங்கள், தலைவலி பறந்துவிடும்.ஒரு ஸபூன் வெற்றிலைச்சாறு, ஒருஸபூன் தேன் கலந்து தினமும் இரண்டு வேளை சாப்பிட்டு வாருங்கள், நரம்புத் தளர்ச்சி, உடல் சோர்வு நீங்கும். வெற்றிலையில் சிறிது நல்லெண்ணெய் தடவி அனலில் வதக்கி பொருக்கக்கூடிய சூட்டில் குழந்தையின் மார்பில் போட்டால் குழந்தைகளுக்கு ஏற்படும் கோழை, இருமல், மூச்சு முட்டல் எல்லாம் ஓடிப் போய்விடும். கம்மாறு வெற்றிலையை அனலில் வாட்டி, சாறு பிழிந்து, கஸ்தூரி, கோரோசனை போன்றவைகள் சம்மந்தப்பட்ட மாத்திரைகளில் கலந்து கொடுக்க குழந்தைகள், பெரியவர் அனைவருக்கும் சீதளம் தொடர்பான துன்பங்கள் விரைவில் நீங்கும். ஆன்மீகத்திலும் வெற்றிலை இல்லாமல் எதுவும் நடை பெறாது. எனவே இதை வெற்றிலை என்பதைவிட வெற்றி இலை என்று சொல்வதே பொருந்தும்.

0 comments

Leave a Reply