ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» ஆத்தூர் , ஆறுமுகநேரி » பனை மரத்திலிருந்து தவறி விழுந்தவர் சிகிச்சை பலனின்றி பலி


ஆத்தூர் அருகே பனை மரத்திலிருந்து தவறி விழுந்து படுகாயமடைந்த தொழிலாளி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது, ஆறுமுகநேரி லெட்சுமி மாநகரம்
வேல் மகன் சிங்கராஜ்(63) மற்றும் காமராஜபுரம் வடக்குத்தெரு சாமி மகன்
காசிபெருமாள்(41) ஆகியோர் கடந்த 6ம் தேதி கீரனூர் அருகிலுள்ள சென்னாநடை
என்ற இடத்தில் பனை ஏறும் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். அப்போது எதிர்பாராத
விதமாக சிங்கராஜ் பனை மரத்திலிருந்து தவறி கீழே விழுந்துள்ளார். இதில்
படுகாயமடைந்த அவரை சிகிச்சைக்கென ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில்
சேர்த்துள்ளனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து காசிபெருமாள் கொடுத்த புகாரின் பேரில் ஆத்தூர்
எஸ்ஐ.,சங்கரேஸ்வரி வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.

0 comments

Leave a Reply