பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி சதவீதம் குறைந்த அரசு பள்ளிகள்
குறித்து சென்னையில் இன்று (25ம் தேதி) தலைமை ஆசிரியர்களிடம் அதிரடி
ஆய்வு நடத்தப்படுகிறது.
தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் ஏற்கனவே வெளியிடப்பட்ட நிலையில்
தேர்ச்சி சதவீதம் குறைந்த பள்ளிகள் குறித்து அதிரடி ஆய்வு
மேற்கொள்ளப்பட்டது. இதற்காக மாவட்ட வாரியாக தேர்ச்சி சதவீதம் குறைந்த
பள்ளிகளின் பட்டியல் தயார் செய்யப்பட்டது.
இதில் தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூர் ஏ.எஸ்.ஏ அரசு ஆண்கள்
மேல்நிலைப் பள்ளி (73.33 சதவீதம்), சவாலப்பேரி அரசு மேல்நிலைப் பள்ளி (60
சதவீதம்), வேப்பலோடை அரசு மேல்நிலைப் பள்ளி (56.25 சதவீதம்) பள்ளிகள்
இப்பட்டியலில் உள்ளன.
நெல்லை மாவட்டத்தில் காசிதர்மம் அரசு மேல்நிலைப் பள்ளி (61.54 சதவீதம்),
வீரசிகாமணி அரசு மேல்நிலைப் பள்ளி (59.86 சதவீதம்), தென்மலை அரசு
மேல்நிலைப் பள்ளி (55.26 சதவீதம்), முதலியார்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி
(55 சதவீதம்) பள்ளிகள் இப்பட்டியலில் இடம் பிடித்துள்ளன.
திருச்சி மாவட்டத்தில் அரசங்குடி பள்ளி (49.6 சதவீதம்), செவல்பட்டி
மணப்பாறை பள்ளி (34.11 சதவீதம்), கல்லகம் பள்ளி (48.78 சதவீதம்), வல்லநாடு
பள்ளி (26.92 சதவீதம்), திருவண்ணாமலை மாவட்டத்தில் பூண்டி பள்ளி (41.67
சதவீதம்), கலசப்பாக்கம் பள்ளி (39.66 சதவீதம்), பிரம்மதேசம் பள்ளி (39.29
சதவீதம்), மேக்கல்லூர் பள்ளி (27.97 சதவீதம்) ஆகியவை இப்பட்டியலில் இடம்
பிடித்துள்ளன.
வேலூர் மாவட்டத்தில் காவேரிப்பாக்கம் பள்ளி (33.71 சதவீதம்), மாம்பாக்கம்
பள்ளி (32.31 சதவீதம்), அரக்கோணம் பள்ளி (31.43 சதவீதம்), ராணிபேட்டை பள்ளி
(26.96 சதவீதம்), விழுப்புரம் மாவட்டத்தில் மேலலக்கூர் பள்ளி (34.55
சதவீதம்), தாயூர் பள்ளி (31.75 சதவீதம்), ஆலம்பூண்டி பள்ளி (30.09
சதவீதம்), தேவனூர் பள்ளி (29.19 சதவீதம்) ஆகியவை இடம் பெற்றுள்ளன.
இதே போல், தமிழகத்தின் 32 மாவட்டங்களை சேர்ந்த 120க்கும் மேற்பட்ட பள்ளிகள்
கறுப்பு பட்டியலில் இடம் பிடித்துள்ளன. இப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள்
சென்னைக்கு இன்று (25ம் தேதி) அழைக்கப்பட்டுள்ளனர். சென்னை கல்லூரி சாலை
பள்ளிக் கல்வி இயக்கக சீமெட் அரங்கத்தில் பள்ளிக் கல்வித் துறை முதன்மை
செயலாளர் தலைமையில் காலை 9.30 மணிக்கு ஆய்வு கூட்டம் நடக்கிறது.
பட்டியலில் இடம் பிடித்துள்ள தலைமை ஆசிரியர்களின் இதில் தவறாது கலந்து
கொள்ள வேண்டும். தலைமை ஆசிரியர் பணியிடம் காலியாக இருப்பின் மூத்த உதவி
தலைமை ஆசிரியர் இதில் பங்கேற்க வேண்டும்.
இதில் கலந்து கொள்வதற்கு முன்பாக அந்தந்த பள்ளிகளின் ஆசிரியர்களுடன் கலந்து
ஆலோசனை மேற்கொண்டு வரும் ஆண்டில் தேர்ச்சி விகிதத்தை மேம்படுத்துவது
தொடர்பான சிறப்பான கருத்துருக்களுடன் வர அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
பிளஸ் 2 பொது தேர்வில் தேர்ச்சி சதவீதம் குறைந்ததற்கான காரணங்கள் தலைமை
ஆசிரியர்களிடம் கேட்கப்படலாம் என கூறப்படுகிறது. இதனால் பள்ளி தலைமை
ஆசிரியர்கள் மத்தியில் கலக்கம் ஏற்பட்டுள்ளது.
0 comments