ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» Daily News » காயல்பட்டினத்தில் குடிநீர் பாதுகாப்பு சிறப்புக் கூட்டம்

தமிழக அரசின் குடிநீர் பாதுகாப்பு வார சிறப்புக் கூட்டம் காயல்பட்டினம் நகராட்சியில், நகர்மன்றக் கூட்டரங்கில் நடைபெற்றது.

கூட்டத்துக்கு நகர்மன்றத் தலைவர் ஐ. ஆபிதா ஷேக் தலைமை வகித்து அறிமுகவுரையாற்றினார். இதில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய நீர் உதவி வல்லுநர் கணபதி சுப்பிரமணியன் பேசியதாவது: காயல்பட்டினத்திலுள்ள 18 வார்டுகளிலிருந்தும், கிணறுகள், அடிபம்புகள் ஆகியவற்றின் (சுத்திகரிக்கப்படாத) சுமார் 250 மாதிரிகளை ஆய்வு செய்வதற்காக, 3 ஆசிரியைகள் பயிற்சிக்குப் பின் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் குடிநீர் மாதிரிகளைப் பெற்றுக்கொண்டு, ஆய்வுக்கு உட்படுத்தி அறிக்கை சமர்ப்பிக்கவுள்ளனர். பெறப்படும் குடிநீர் மாதிரிகளின் தோற்றம், மணம், கலங்கல்,  காரம், கடினம் உள்ளிட்ட 16 தன்மைகளின் இருப்பு ஆய்வு செய்யப்பட்டு, அதனடிப்படையில், இப்பகுதியுடைய நீராதாரத்தின் பொது அறிக்கை அரசுக்கு சமர்ப்பிக்கப்படும். இவ்வாறு, மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் பெறப்படும் ஆய்வறிக்கைகள் அடிப்படையில், மக்கள் நலனுக்கான செயல்திட்டம் உருவாக்கி செயல்படுத்தப்படும் என்றார்.

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய நீர் உதவி அலுவலர் மணி, காயல்பட்டினம் நகராட்சி ஆணையர் காந்திராஜ், பொறியாளர் சிவக்குமார் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.


courtesy: Dinamani.com

Tags: Daily News

0 comments

Leave a Reply