ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» ஆறுமுகநேரி » ஆறுமுகநேரி ரயில்வே ஸ்டேஷனுக்கு தட்கல் வசதி கொடுக்க மறுப்பு


ஆறுமுகநேரி:ஆறுமுகநேரி ரயில்வே ஸ்டேஷனில் தட்கல் டிக்கட் வழங்காததால்
பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.திருச்செந்தூர் டூ திருநெல்வேலி
இடையேயான அகல ரயில்பாதையில் காயல்பட்டணத்தை அடுத்து ஆறுமுகநேரி ரயில்வே
ஸ்டேஷன் உள்ளது. இந்த வழித்தடத்தில் செய்துங்கநல்லூர், ஸ்ரீவைகுண்டம்,
நாசரேத், திருச்செந்தூர் போன்று கிராசிங் வசதிகள் கொண்ட மிகப்பெரிய ரயில்வே
ஸ்டேஷன் ஆகும். ஆனால் இங்கு தட்கல் டிக்கெட் வசதி செய்து கொடுக்கப்படாமல்
இருப்பது இப்பகுதி மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
ஆறுமுகநேரி மற்றும் இதன் சுற்று வட்டார கிராமங்களான கீரனூர், தலைவன்வடலி,
ஆத்தூர், புன்னக்காயல், முக்காணி, உமரிக்காடு உட்பட பல கிராமங்களைச்
சேர்ந்தவர்களும் ஆறுமுகநேரி ரயிவ்லே ஸ்டேஷனையே பெரும்பாலும் பயன்படுத்தி
வெளியூர்களுக்கு சென்று வருகின்றனர். தினமும் இப்பகுதிகளைச் சார்ந்த
நூற்றுக்கணக்கான பொதுமக்கள் சென்னை, கோவை, மும்பை, டெல்லி போன்ற
நகரங்களுக்கு ரயில் மூலமாக சென்று வருகிறார்கள்.

இவ்வாறு வெளியூர் சென்று
வரும் இப்பகுதி மக்கள் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் போது டிக்கெட்
கிடைக்கவில்லை என்றால் தட்கல் முறையை பயன்படுத்தியே டிக்கெட் பெற
வேண்டியநிலை உள்ளது. ஆனால் ஆறுமுகநேரி ரயில்வே ஸ்டேஷனில் தட்கல் டிக்கெட்
முன்பதிவு செய்து கொடுக்கப்படாததால் இப்பகுதி மக்களால் தட்கல் டிக்கெட்
எடுக்க முடியவில்லை. இதனால் காயல்பட்டணம், திருச்செந்தூர், தூத்துக்குடி
போன்ற பகுதிகளுக்கு சென்றுதான் தட்கல் டிக்கெட் எடுக்க வேண்டியதுள்ளது.
எனவே சம்பந்தப்பட்ட ரயில்வே நிர்வாகத்தினர் ஆறுமுகநேரி ரயில்வே ஸ்டேஷனிலும்
தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என
இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

0 comments

Leave a Reply