ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» Daily News » ஆறுமுகனேரியில் சுதந்திர தின விழா

Image result for சுதந்திரதினம்
ஆறுமுகனேரியில் சுதந்திர தின விழா ஆகஸ்ட் 15 இல் கொண்டாடப்பட்டது.
 சாகுபுரம் டிசிடபுள்யூ நிறுவனத்தில் அதன் துணைத் தலைவர் பி.ஆர். யாதவ் தேசிய கொடியை ஏற்றினார். தொடர்ந்து காவலர்களின் அணிவகுப்பு மரியாதையை பார்வையிட்டார்.  நிகழ்ச்சியில் நிறுவனத்தின் செயல் உதவித் தலைவர்கள்  டாக்டர் எம்.சி.மேகநாதன்(நிர்வாகம்), ஜெயக்குமார்(பணியகம்), பொது மேலாளர் முருகேசன் (காஸ்டிக் சோடா), துணைப் பொது மேலாளர் முரளி மற்றும் அலுவலர்கள், தொழிலாளர்கள், தொழிற்சங்க நிர்வாகிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.    
 ஆறுமுகனேரி உப்புத் தொழிலாளர் கூட்டுறவு சங்கத்தில் தலைவர் எஸ்.லட்சுமணன் தேசியக் கொடியேற்றினார். துணைத் தலைவர் சாந்தி, மேலாளர் சாந்தகுமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
 ஆறுமுகனேரி வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில் அதன் தலைவர் கா.ராகவன் தேசியக்கொடியேற்றினார். துணைத் தலைவர் செந்தமிழ்சேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.       கா.ஆ.மேல்நிலைப் பள்ளியில் ராவண்ணா அபுல் ஹஸன் தேசியக்கொடியேற்றினார். கல்வி கமிட்டி பொருளாளர் வி.கே.எம்.பாஸ்கரன், தலைமை ஆசிரியர் பாண்டியராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
 காமராஜ் சோமசுந்தரி ஆங்கில மற்றும் மழலையர் பள்ளியில் சென்னை புலனாய்வுத் துறை ஆய்வாளர் ஜான்கென்னடி தேசியக் கொடியேற்றினார். தலைமை ஆசிரியர் சிவந்திக்கனி உள்பட பலர் கலந்துகொண்டனர்.  
 நகர பாரதிய ஜனதா கட்சி சார்பில் வடக்கு பஜாரில் நகரத் தலைவர் எஸ்.செந்தூர்பாண்டியன் கொடியேற்றினார். நகர பொதுச் செயலர் என்.ராதாகிருஷ்ணன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.     
  ஆதரவற்ற சிறுவர் காப்பகத்தில் தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி கிளை மேலாளர் ரமேஷ் பென்சிலால் தேசியக் கொடியேற்றினார். நிகழ்ச்சியில் அறங்காவலர் வின்சென்ட் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
 நகர தமாகா சார்பில், துணைத் தலைவர் பி.மகராஜன் கொடியேற்றினார். நகரத் தலைவர் பி.முருகன், காயல்பட்டினம் நகரத் தலைவர் ரஜீத் உள்பட பலர் கலந்துகொண்டனர்.  
  நகர காங்கிரஸ் சார்பில் மாவட்டசெயற்குழு உறுப்பினர் எஸ்.டி.சண்முகம் தேசியக்  கொடியேற்றினார். நகரத் தலைவர் எல்.ராஜாமணி  உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Tags: Daily News

0 comments

Leave a Reply