மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள எரிவாயு நுகர்வோர்கள் குறைதீர்க்கும் கூட்டம் 22.08.2015 காலை 11.00 மணி அளவில் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் குழுக் கூட்ட அரங்கில் வைத்து நடைபெற உள்ளது.
எரிவாயு பயன்படுத்தும் நுகர்வோர் இக்கூட்டத்தில் கலந்துக் கொள்ள அழைக்கப்படுகிறார்கள். எரிவாயு உருளை நுகர்வோர்கள் தங்களது குறைகளை வெள்ளைத் தாளில் தட்டச்சு செய்தோ அல்லது தெளிவாக எழுதியோ அன்றைய தினம் மாவட்ட வருவாய் அலுவலர் அவர்களிடம் நேரில் அளித்திடலாம் என பொதுமக்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.
இந்நேர்வில் "எவ்வகையான குறைகளை முறையிடலாம்”!, பெயர் மாற்றம், புதிய எரிவாயு உருளை வழங்குவதில் கால தாமதம் சேவையில் குறைபாடுகள், டெப்பாசிட் தொகை திரும்ப பெறல், புதிய இணைப்பு கோரியதன் நிலை மற்றும் அது சம்பந்தமான விபரங்களை பெறலாம். மானியம் உரிய வங்கி கணக்கில் வரவு வைக்கப்படாவிடில், அதுகுறித்து பாதிக்கப்பட்ட நுகர்வோர், இக்கூட்டத்தில் புகார் அளிக்கலாம்.
எரிவாயு உருளையை டெலிவரி கொடுக்கும் பயனாளிகள் மீது ஏதும் குறைபாடுகள், நுகர்வோரை பாதிக்கும் பட்சத்தில் அதன் விபரங்களை இக்கூட்டத்தில் எடுத்துரைக்கலாம். பொதுமக்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளையும் எடுத்துரைக்க இக்குறைதீர்க்கும் நாள் ஒரு நல்ல வாய்ப்பு. இக்கூட்டத்தில் பொதுமக்கள், சமூக ஆர்வலர்களும் கலந்துக் கொண்டு தங்கள் கருத்துக்களை பதிவு செல்வதால், அக்கருத்துக்கள் மீது துரித நடவடிக்கை எடுத்து அனைத்து தரப்பு பொதுமக்களும் பயன்பெற உதவியாக இருக்கம். இவ்வாறு ஆட்சியர் அறிவித்துள்ளார்.
0 comments