ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» Daily News » சபாஷ்...துாத்துக்குடியில் நிலத்தடி நீரை உறிஞ்சி தண்ணீரை விற்பனை செய்தவரின் மோட்டார் பம்புகள் பறிமுதல் செய்யப்பட்டது.

துாத்துக்குடியில் நிலத்தடி நீரை உறிஞ்சி தண்ணீரை விற்பனை செய்தவரின் மோட்டார் பம்புகள் பறிமுதல் செய்யப்பட்டது.

தூத்துக்குடி பிரையன்ட் நகர் பகுதியில் தனியார் ஒருவர் தனது வீட்டில் ஆழ்துளை கிணறுகள் அமைத்து தண்ணீர் விற்பனை செய்து வருகிறாராம். இதனால் அப்பகுதியில் அடிக்கடி தண்ணீர் லாரிகள் வந்து செல்வதால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுவதாகவும் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருவதாகவும் அப்பகுதி மக்கள் புகார் அளித்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர். அதிகாரிகள் எச்சரித்தும் அந்த நபர் தொடர்ந்து நிலத்தடி நீரை உறிஞ்சு விற்பனை செய்து வந்ததால் அந்த மோட்டார்களை பறிமுதல் செய்து அப்புறப்படுத்த வேண்டும் என்று அப்பகுதி மக்கள் இன்று  காலவறையற்ற உண்ணாவிரத போராட்டத்தை துவங்கினர்.

இந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு அதிமுக வார்டு கவுன்சிலர் ஜெயக்குமார், சிபிஎம் மாநகர செயலாளர் ராஜா ஆகியோர் தலைமை தாங்கினர். பாரகன் அந்தோணி முத்து, முத்து மற்றும் தெருமக்கள் கலந்து கொண்டனர். இதையடுத்து துாத்துக்குடி தாசில்தார் சந்திரன், தென்பாகம் சப்.இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் ஆகியோர் பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று மேற்படி வீட்டிலிருந்த மோட்டார் பம்புகளை பறிமுதல் செய்தனர். மேலும் போலீசார் வருவதைக் கண்டதும் தப்பியோடிய வீட்டுக்காரரை போலீசார் தேடிவருகின்றனர்.
Tags: Daily News

0 comments

Leave a Reply