தூத்துக்குடி மாவட்ட அனைத்து துறை ஊழியர் சங்கங்களின் போராட்டக்குழு சார்பில் நேற்று மாலை பேரணி நடந்தது. தூத்துக்குடி மாவட்ட கருவூல அலுவலகம் முன் தொடங்கிய பேரணிக்கு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் இல.ராமமூர்த்தி தலைமை தாங்கினார்.
தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்ட தலைவர் ரெ.ஜெகநாதன், தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க மாவட்ட தலைவர் பெ.ராகவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக மாநில தலைவர் ம.சுப்பிரமணியன் கலந்து கொண்டு பேரணியை தொடங்கி வைத்தார்.
பேரணியில் புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து, அனைவருக்கும் பழைய பென்சன் திட்டம் கொண்டு வரவேண்டும். ஊதிய உயர்வு நிலுவைத்தொகையை வழங்க வேண்டும். மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்குவது போன்று தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு வீட்டு வாடகைப்படி, போக்குவரத்து படி, கல்விப்படி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.


0 comments