காயல்பட்டினம் கடற்கரையில் புதன்கிழமை தமிழ்நாடு தவ்ஹித் ஜமா அத் அமைப்பு சார்பில் நடைபெற்ற ரம்ஜான் சிறப்பு தொழுகை.
தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் புதன்கிழமை ரம்ஜானையொட்டி பள்ளிகள் மற்றும் கடற்கரையில் சிறப்பு தொழுகைகள் நடைபெற்றன.நகர் விழாக் கோலம் பூண்டிருந்தது.
காயல்பட்டினம் ஜாவியா அரபிக் கல்லூரியில் செவ்வாய் கிழமை இரவு மக்ரிப் தொழுகைக்குப்பின் நகர அஹ்லுஸ் ஸூன்னத் வல் ஜமா அத் உலமாக்கள்(மார்க்க அறிஞர்கள்) கலந்தாலோசனைக் கூட்டம் நடைபெற்றது.அதில் தமிழகத்தில் பரவலாக பிறை காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டதால் அதனை உறுதி செய்து 31ஆம் தேதி ரம்ஜான் நோன்பு பெருநாள் கொண்டாட அறிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து பள்ளிகளில் நகராக்கள் ஒலிக்கப்பட்டு சிறப்பு தொழுகைகள் நடைபெற்றது.
புதன்கிழமை தமிழ்நாடு தவ்ஹித் ஜமா அத் அமைப்பு சார்பில் ரம்ஜான் கொண்டாட முடிவு செய்யப்பட்டு கடற்கரையில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. காயல்பட்டினம் கிளை சார்பில் நடைபெற்ற கடற்கரை சிறப்பு தொழுகையை ஏ.எஸ் முஹம்மத் முஹ்யித்தீன் நடத்தினார்.
குத்பா பேரூரையை தமிழ்நாடு தவ்ஹித் ஜமா அத் மாநில பேச்சாளர் அப்துல் கபூர் மிஸ்பாஹி நிகழ்த்தினார்.
தொழுகையில் தமிழ்நாடு தவ்ஹித் ஜமா அத் கிளை தலைவர் சம்சுதீன், மாவட்ட துணை செயலாளர் முஹம்மத் மக்கீ, கிளை துணைத் தலைவர் சாலப்பா, செயலாளர் சலாஹூதீன், செயற்குழு உறுப்பினர் யாசின், நிர்வாகி ஹஸன், காஜா, மூசா, டாக்டர் அபுல் ஹஸன், தாஹா, கோஸ்முகம்மது, மரைக்கார், நெய்னா மரைக்கார், சம்சுதீன், அபூபக்கர், முஜிப், ஜிந்தா, உள்பட ஆண்களும், பெண்களும் திரளாக கலந்துகொண்டனர்.
காயல்பட்டினத்தில் குத்பா பெரிய பள்ளி, குத்பா சிறிய பள்ளி, தைக்கா சாகிபு பள்ளி, தாயிம்பள்ளி, கொடி மர சிறுநெய்னா பள்ளி, குருவித்துறை பள்ளி, கடற்கரை முஹ்யித்தீன் பள்ளி, அஹ்மத் நெய்னா பள்ளி, இரட்டை குளத்துப்பள்ளி, புதுப்பள்ளி, கடைப்பள்ளி, அப்பா பள்ளி, காட்டுத் தைக்கா பள்ளி, ஆறாம் பள்ளி உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட பள்ளிவாசல்களிலும் மற்றும் மகளிர் தைக்காக்களிலும் சிறப்பு தொழுகைகளிலும் குத்பா பேரூரைகளும் நடைபெற்றன.
பள்ளிகளில் தொழுகைகள் முடிவடைந்த பின்னர் இஸ்லாமியர்கள் ஒருவரை ஒருவர் ஆரத் தழுவி வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர்.
புத்தாடைகள் அணிந்து உற்றார் உறவினர் மற்றும் நண்பர்கள் இல்லங்கள் சென்றும் வாழ்த்துக்களை பரிமாறினர்.மாலையில் கடற்கரையில் கூடிய இஸ்லாமியர் கள் வெளியிடங்களிலிருந்து வந்திருந்த இஸ்லாமியர்களை சந்தித்து வாழ்த்துக்களை கூறி மகிழ்ந்தனர்.
0 comments