ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» August , ஆறுமுகநேரி » ஆறுமுகனேரியில் ஸ்ரீமுனீஸ்வரர் ஆலய திருவிழா.


ஆறுமுகனேரியில் ஸ்ரீமுனீஸ்வரர் ஆலய திருவிழா சிறப்பாக நடைபெற்றது.
           ஆறுமுகனேரி ரயில்வே பீடர் சாலையில் அமைந்துள்ளது ஸ்ரீமுனீஸ்வரர் ஆலயம்.இக் கோவில் திருவிழா இரு தினங்கள் நடைபெற்றது.
           வெள்ளிக்கிழமை காலை கணபதி ஹோமத்துடன் துவங்கியது.பகலில் வருஷாபிஷேகமும் நண்பகலில் சிறப்பு அலங்கார தீபாரதனைகளும் நடைபெற்றன.
இரவில் திருவிளக்கு பூஜையும் சிறப்பு தீபாரதனையும் நடைபெற்றன.
          இரவில் மணிநகர் செண்பகாதேவி குழுவினரின் வில்லிசையும் நள்ளிரவு சிறப்பு அலங்கார தீபாரதனைகளும் நடைபெற்றன.
         சனிக்கிழமை காலை படைப்பு தீபாரதனையும் மதியம் அன்னதானமும் நடைபெற்றது.திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்ரீமுனீஸ்வரரை வழிபட்டனர்.
      விழாவிற்கான ஏற்பாடுகளை விழாக்கமிட்டியினர் செய்திருந்தனர்.

0 comments

Leave a Reply