திருச்செந்தூர் வெயிலுகந்தம்மன் கோயில் ஆவணி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. இவ்விழா 10 நாட்கள் நடக்கிறது.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுடன் இணைந்த வெயிலுகந்தம்மன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. இங்கு ஆவணி மற்றும் மாசி திருவிழாக்கள் 10 நாட்கள் நடக்கும். இத்திருவிழா இன்றுகாலை கொடியேற்றத்துடன் துவங்கியது. இதையட்டி நேற்றுஇரவு பிரவேசபலி, யாகசாலை பூஜை ஆகியவை நடந்தது. தொடர்ந்து அம்பாளுக்கு காப்பு கட்டப்பட்டது.
அதிகாலை 3 மணிக்கு கணபதி ஹோமம், அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் தீபாராதனை நடந்தது. அதிகாலை 4 மணிக்கு கொடிபட்ட வீதி உலா நடந்தது. தொடர்ந்து அம்பாள் சன்னதிக்கு எதிரெ உள்ள கொடிரமரத்தில் காலை 5.30 மணிக்கு கொடியேற்ற நிகழ்ச்சி துவங்கியது. காலை 5.40 மணிக்கு பஞ்ச வாத்தியங்கள் முழங்க காப்பு கட்டு சிவானந்தம் வல்லவராயர் கொடியேற்றினார். தொடர்ந்து கொடிமரத்திற்கு அபிஷேகம் நடந்தது. பின்னர் கொடிமரத்தில் பட்டு சாத்தப்பட்டு அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து கொடிமரத்திற்கு சோடஷ தீபாராதனை நடந்தது. பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியல் கோயில் அலுவலக கண்காணிப்பாளர் செல்வகுமாரி, கோயில் பணியாளர் பிச்சையா, சிவன் கோயில் மணியம் மது, வாணியர் சங்க தலைவர் கண்ணன், துணைத்தலைவர் கணேசன், ராமானுஜம் உட்பட பலர் கலந்து கொண்டனர். பூஜைகளை வேம்பு வல்லவராயர், முருகன் வல்லவராயர், லட்சுமணன் வல்லவராயர் ஆகியோர் நடத்தினர். திருவிழாவையட்டி மாலையில் அம்பாள் சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா நடந்தது. தினமும் காலை மற்றும் மாலையில் அம்பாள் சப்பரத்தில் வீதி உலா வந்து கோயிலை சேருகிறார். இத்திருவிழாவின் 10ம் நாளான 16ம் தேதி தேரோட்டம் நடக்கிறது. ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் பாஸ்கரன் செய்துள்ளார்.
0 comments