ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» August , Daily News , திருச்செந்தூர் » திருச்செந்தூரில் தென் மாவட்டங்கள் அளவில் சுதந்திர தின ஓவியப்போட்டி.

திருச்செந்தூரில் வரும் 14ஆம் தேதி தென் மாவட்டங்கள் அளவிலான பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகளுக்கான 69ஆம் ஆண்டு சுதந்திர தின விழா ஓவியப் போட்டி நடைபெறுகிறது. சுதந்திர போராட்டத் தியாகிகள் சங்கம் மற்றும் வாரிசுகள் நலச்சங்கம் சார்பில் திருச்செந்தூர் அருள்மிகு செந்திலாண்டவர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வரும் 14ஆம் தேதி காலை பத்து மணிக்கு நடைபெறும் இப்போட்டியில் திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொள்ளலாம்.கலந்து கொள்ளும் மாணவ மாணவியர் போட்டிக்காண அனைத்து உபகரணங்கள் மற்றும் பள்ளியின் சான்றிதழ்களுடன் பங்கேற்க அனுமதிக்கப்படுவர்.ஒவ்வொரு பள்ளிகளிலிருந்தும் ஒவ்வொரு பிரிவிற்கும் மூன்று மாணவர்களே அனுமதிக்கப்படுவக். எல்.கே.ஜி,யு.கே.ஜி குழந்தைகளுக்கு விரும்பும் படமும், 1மற்றும் 2ஆம் வகுப்புகளுக்கு தேசிய மலர்,3 மற்றும் 4ஆம் வகுப்புகளுக்கு தேசியக்கொடி, 5மற்றும் 6ஆம் வகுப்புகளுக்கு காந்திஜி, 7மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கு வ.உ.சிதம்பரனார், 9மற்றும் 10ஆம் வகுப்புகளுக்கு நேரூஜி,பிளஸ் 1மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு வாஞ்சி நாதன் மற்றும் கல்லூரிகளுக்கு சுபாஷ் சந்திரபோஷ் ஆகிய உருவப்படங்களை ஓவியமாக வரைய வேண்டும். கலந்து கொள்ள விரும்பும் பள்ளி மற்றும் கல்லூரிகள் த.தவசிமுத்து, தலைவர் அகில இந்திய சுதந்திர போராட்ட தியாகிகள் சங்கம் மற்றும் அவர்களது வாரிசுகளும் சங்கம்

0 comments

Leave a Reply