
இந்தியாவில் புகழ்பெற்ற சுற்றுலா இடமான கேட்வே ஒப் இந்தியா கடலில் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் மிதந்து வந்துள்ளது. இதை பார்த்ததும் சுற்றுலா பயணிகள் ஆச்சரியத்தில் திழைத்தனர்.அந்த நோட்டுகளை எடுப்பதற்காக மீனவர்கள் சிலர் கடலுக்குள் இறங்கினார்கள். இந்த நிலையில், தகவல் அறிந்து கொலபா போலீசார் அங்கு வந்தனர். மீனவர்கள் கடலில் இருந்து எடுத்த நோட்டுகளை அவர்கள் கைப்பற்றினார்கள். கடலில் ஆயிரம் நோட்டுகள் மிதந்ததால் கேட்வே ஆப் இந்தியா பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அந்த பணத்தை கடலில் வீசியது யார் என்பதை கண்டுபிடிக்க போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
0 comments