ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» Freedom Fighters Photos » சுதந்திரத்திற்க்குப் போராடிய நம் தலைவர்களையும் சிறிது எண்ணிப் பார்ப்போம்..




சுதந்திரத்தை கொண்டாடும் நாம் சுதந்திரத்திற்க்கு போராடிய நம் தலைவர்களையும் சிறிது எண்ணிப் பார்ப்போம்..
இந்திய சுதந்திர போராட்டத்தில் தமிழர்களின் பங்கு எவ்வளவு பெரிதோ அதே போல் அந்த தமிழர்களில் நம் நாடார் சமுதாயத்தின் பங்கு மிகப்பெரிது. இருப்பினும் சிலரை நினைவுகூறுகிறோம்
1) ஆங்கிலேயர் வருகைக்கு முன்பே இந்திய எல்லைக்குள் நுழைய முனைந்த டச்சுப்படையை அடிபணிய வைத்த வென்ற முதல் தமிழன் வீரத்தளபதி அனந்தபத்மநாப நாடார் அவர்களே..
2) தென் இந்திய இராபின்உட் எனப்படும் மாவீரன் வடலிவிளை செம்புலிங்க நாடார் வெள்ளையனின் கண்ணில் விரலைவிட்டு ஆட்டியவர். தன்னால் முடிந்தவரை ஆங்கிலேய அரசாங்கத்தினை ஏமாற்றி ஏழைகளுக்கு இறைத்த உத்தமன். 30 ஆண்டுகளுக்கு மேல் கிரேட் பிரிடிஷ் படைகளுக்கு தண்ணி காட்டிய ஒரே மாவீரன், வடலிவிளை செம்புலிங்க நாடார் அவர்களே.
3) இந்திய சுந்தந்திர போராட்டவீரர் மற்றும் குமரி மாவட்டத்தை தமிழகத்துடன் இணைக்க பாடுபட்ட மார்ஷியல் நேசமணி நாடார்.
4) நாட்டுக்காகவும் நட்புக்காகவும் தூக்குக்கயிற்றை முத்தமிட்ட கொங்கு நாட்டு சிங்கம் குணாளன் நாடார்.
5) இந்திய சுதந்திரத்திற்கு போராடியவர் , நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் இந்திய தேசிய இராணுவத்தை ஆதரித்த்தவர், தமிழர்களுக்கென முதன் முதலாக “நாம் தமிழர்” இயக்கம் ஆரம்பித்த அய்யா சிபா ஆதித்தனார்.
6) ம. பொ. சிவஞானம் கிராமணியார் ,இந்திய விடுதலைப் போராட்டக்காரரும் சிறந்த தமிழறிஞரும் ஆவார்.. சிலப்பதிகாரத்தின் மீது இவர் கொண்டிருந்த ஆளுமையின் காரணமாக இவர் சிலம்புச் செல்வர் என அழைக்கப்பட்டார். மெட்ராஸ் ஸ்டேட் என்பதை மாற்றி தமிழ்நாடு என்ற பெயரை வைக்கப் பேராடினார். மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது 'மதராஸ் மனதே' என்று ஆந்திரர்கள் செ=ன்னையைக் கேட்டபோது, அதனை எதிர்த்துப் போராடித் தமிழகத் தலைநகராகச் சென்னையை இருத்தினார்.
7) இந்திய சுதந்திரத்திர்க்கு போராடியவர் , மேலும் மெட்ராஸ் ஸ்டேட் என்பதை மாற்றி தமிழ்நாடு என்ற பெயரை வைக்க உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்த தியாகி சங்கரலிங்கனார் அவர்கள்.
8) இந்திய சுதந்திரத்திற்கு போராடியவரும் இந்துமுன்னணி என்ற அமைப்பை தொடங்கியவருமான அய்யா தாணுலிங்க நாடார்.
9) மாற்று சமுதாயத்திற்காக வெள்ளையனை எதிர்த்து குரல் குடுத்து வாய்ப்பூட்டு சட்டத்திற்கு ஆளான வீரர் வேலுச்சாமி நாடார்.
10,11) இந்திய சுதந்திரப் போராட்டத்தின்போது குலசேகரபட்டினத்தில் லோன் துரை என்ற வெள்ளையனை கொன்று வீழ்த்தி தூக்குமேடை ஏறிய இந்திய சுதந்திர போராட்ட வீரர்கள் , தூக்குமேடை ராஜகோபால் நாடார் காசிராஜன் நாடார், காசிராஜன் நாடார்.
12) ஆங்கிலேயேனை எதிர்த்தர்க்காக ஆங்கிலேய அரசால் சுட்டு பிடிக்குமாறு உத்தரவு போடப்பட்ட ஒரே சுந்தந்திர போராட்ட வீரர் மணிமுத்தாறு அணையைக் கட்டுவித்த சாதனையாளர் இந்திய சுதந்திரப் போராட்டத் தியாகி கே.டி.கோசல்ராம் நாடார் அவர்கள்.
13) இந்திய சுதந்திரப் போராட்டவீரர், நாட்டுக்காக தனது சொத்துக்களையும் தன் தொழிலையும் தியாகம் செய்தவர் தாலுகாவின் தந்தை எனப்படும் ஆறுமுகநேரி திரு.த.தங்கவேல் நாடார் அவர்கள்.
பெருந்தலைவர் காமராஜரை நல்ல தலைவராக சிறந்த முதலமைச்சராக மட்டுமே பலர் பார்க்கின்றனர் அவரது முதல் பாதி வாழ்கை இந்திய சுந்தந்திர போராட்ட களத்திலேயே கரைந்துவிட்டது சிலருக்கு தெரியாது. இந்திய சுதந்திற்க்காக கிட்டத்தட்ட 3000 நாட்களுக்கு மேலாக சிறையில் வாடிய தியாகத்தலைவர் பெருந்தலைவர் காமராஜர். தனது பதினாறு வயதிலே சுந்திந்திர போராட்டத்தில் ஈடுபட்டவர். இந்திய சுந்திரத்தில் பெருந்தலைவர் காமராஜரின் பங்கு அளப்பரியது....
நம் தலைவர்கள் இரத்தம் சிந்தி வாங்கிய சுந்திரத்தை அர்த்தமுள்ளதாக பயன்படுத்துவோம்..
ஜெய்ஹிந்த்.

0 comments

Leave a Reply