குலசேகரன்பட்டினத்தில் கூடாரத்தில் தூங்கிக்கொண்டிருந்த நரிக்குறவர் இனத்தை சேர்ந்த சிறுமியை தூக்கிச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற 4 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
தசரா விழா வருவதை முன்னிட்டு மதுரை கல்லுமேடு பகுதியை சேர்ந்த நரிக்குறவர் இனத்தை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் ஊசி, பாசி உள்ளிட்ட பொருட்களை விற்பதற்காக தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலுக்கு வந்திருந்தனர். அவர்கள் கோவில் வளாகத்தில் கூடாரம் அமைத்து தங்கியிருந்தனர்.
சம்பவத்தன்று அக்குடும்பத்தை சேர்ந்த சிறுமி தனது பெற்றோர் மற்றும் உறவினர்களுடன் கூடாரத்தில் தூங்கி கொண்டிருந்தாள். அப்போது கூடாரத்தின் பின்புறம் வழியாக நுழைந்த 4 பேர் கும்பல் திடீரென சிறுமியை வாயை பொத்தி தூக்கிச் சென்றனர்.4 பேரிடம் இருந்து தப்பிப்பதற்காக ஈஸ்வரி சத்தம் போட்டார்.
இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த ஈஸ்வரியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் சம்பவ இடத்திற்கு திரண்டுசென்றனர். பொதுமக்கள் வருவதை பார்த்ததும் 4 பேரும் சிறுமியை அங்கேயே விட்டு விட்டு தப்பியோட முயன்றனர். இருப்பினும் பொதுமக்கள் அனைவரும் சேர்ந்து 4 பேரையும் மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்தனர். பின்னர் அவர்களை குலசேகரன்பட்டினம் போலீசில் ஒப்படைத்தனர்.
இன்ஸ்பெக்டர் மீனாட்சிநாதன் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தினார். விசாரணையில் 4 பேரும் நாசரேத் பகுதியை சேர்ந்த கார் டிரைவர்களான தினேஷ் (23), ஸ்டாலின் (28), கட்டிட தொழிலாளி இசக்கிமுத்து (29), ஜவுளி வியாபாரி ஐகோர்ட் துரை (29) என்பதும், சிறுமி ஈஸ்வரியை கடத்தி சென்று கற்பழிக்க முயன்றதும் தெரியவந்தது. இதையடுத்து 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
0 comments