ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» Daily News , News » ஆறுமுகனேரியில் ஏழைகளுக்கு இலவச வேஷ்டி,சேலைவழங்கப்பட்டன


ஆறுமுகனேரி காமராஜ் நற்பணி மன்றம் சார்பில் நடைபெற்ற காமராஜர் பிறந்த நாள் விழாவில் ஏழைகளுக்கு இலவச வேஷ்டி,சேலை வழங்கப்பட்டன.
இந்த விழாவுக்கு காமராஜ் நற்பணி மன்ற பொதுச்செயலர் கோ.மு.கோசல்ராம் தலைமை வகித்தார். நகரத் தலைவர் சோழா ஆர்.செல்வின், பொருளாளர் ராமஜெயம், முன்னாள் நகர பாஜக தலைவர்கள் எஸ்.செந்தூர்பாண்டியன்,எஸ்.மகேந்திரன், பேரூராட்சி மன்ற உறுப்பினர் ரேணுகா ராதாகிருஷ்ணன், ஐக்கிய ஜனதா தள நகரத் தலைவர் மாருதி சரவணபெருமாள், ஏ.கே.எல். கூட்டுறவு பண்டகசாலை நிர்வாகக் குழு உறுப்பினர் மு.பற்குணபெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர்நல மன்றத் தலைவர் பி.பூபால்ராஜன், பாஜக மாவட்ட துணைத் தலைவர் ஆர்.டி.செந்தில்வேல், மன்றத்தின் கெளரவ ஆலோசகர் எம்.எஸ்.ராமநாதன், மாவட்ட பாஜக செயற்குழு உறுப்பினர் ம.சிவகுமார், பாஜக மாவட்ட விவசாய அணி பொதுச்செயலர் ஆர்.தினகரபாண்டியன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு ஏழைகளுக்கு இலவச வேஷ்டி,சேலைகளை வழங்கினர்.
பாஜக திருச்செந்தூர் ஒன்றிய பொதுச்செயலர் சி.முருகானந்தம் இனிப்பு வழங்கினார். நிகழ்ச்சியில் பிச்சிவிளை முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ரத்தினவேல்பாண்டியன், பாஜக நகர பொதுச்செயலர் என்.ராதாகிருஷ்ணன், இசக்கிமுத்து உள்பட பலர் கலந்துகொண்டனர். இ.தங்கபாண்டியன் வரவேற்றார்.
Tags: Daily News , News

0 comments

Leave a Reply